பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 16 | BIGG BOSS TAMIL 02 | WEEK 03 | DAY 16
BB/T/S2/W3/D16/1
'உன் பேரென்ன தெரியாது, உன் ஊரென்ன தெரியாது, பரவாயில்ல' என்னும் பாடலுடன் பதினாறாம் நாள் காலைப்பொழுது விடிந்தது. ஏன் பிக் பாஸ், நீங்க யாரு, என்ன பண்றீங்கன்னு கூட தான் எங்களுக்கு தெரியல. நாங்க நிகழ்ச்சி பாக்கலியா? இந்த வார புதிய தலைவி காலையில் இருந்தே சுறுசுறுப்பாக இயங்குவதாகத் தோன்றியது. காலையில் இருந்து ஏதோ பிரச்சினையை பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருந்தார் வைஷ்ணவி. ரித்விகா அழுக ஷாரிக்கும் யாஷிகாவும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மும்தாஜும் வந்து சமாதனப் படுத்தினார்.

BB/T/S2/W3/D16/2
காலை பதினோரு மணிக்கு பிக் பாஸ் இந்த வாரத்துக்கான முதலாவது போட்டியை அறிவித்தார். 'தண்ணில கண்டம்' போட்டி. பிக் பாஸுக்கு வந்தாலே கண்டம் தானே? போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிய வேண்டும். இரு அணிகளுக்காகவும் இரு தண்ணீர்த் தொட்டிகள் (Water Tanks) வீட்டின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும். இரு தண்ணீர்த் தொட்டிகளிலும் ஓட்டைகள் போடப்பட்டிருக்கும். அந்த ஓட்டைகளின் வழியாக தண்ணீர் வெளியேறாமல் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் வெளியேறாமல் தடுக்க தங்கள் கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டின் விதிமுறைகளான தமிழில் பேசுதல், பகலில் தூங்கக்கூடாது மற்றும் மைக் அணிய வேண்டும் ஆகிய விதிமுறைகளை ஏதேனும் ஒரு அணியினால் கடைப்பிடிக்கப்படாமல் போனால் எதிரணி அதைப் பற்றி ரகசிய அறைக்கு முன்னால் உள்ள கேமராவின் முன்னால் வந்து சொல்லிவிட்டு எதிரணியின் தண்ணீர் தொட்டியில் இருந்து கொடுக்கப்பட்ட குவளையின் (Mug) மூலம் ஐந்து முறை தண்ணீரை எடுத்து தங்கள் தொட்டியில் ஊற்றிக் கொள்ளலாம். இந்த போட்டிக்காக ஒவ்வொரு அணிக்கும் தலா 1500 புள்ளிகள் வழங்கப்படும்.

BB/T/S2/W3/D16/3
பிக் பாஸ் ஒரேயடியா மொத்தம் 3000 புள்ளிகளை வழங்குவதைப் பார்த்தால் போட்டியாளர்களை விடிய விடிய வைத்து செய்வார் போலிருக்கிறது. பார்க்கலாம். அணிகளையும் பிக் பாஸே பிரித்து அறிவித்து விடுகிறார். தண்ணீர்த் தொட்டியில் மீதம் உள்ள தண்ணீரின் அளவுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படும். மதியம் 12 மணிக்கு போட்டி துவங்குகிறது. வடிவேலு தண்ணீர் வண்டியில் கையை வைத்து தண்ணீரை வெளியேற விடாமல் தடுக்க முயற்சித்த நகைச்சுவை தான் ஞாபகம் வருகிறது. பொன்னம்பலம் மைக்கை போடாமல் இருக்க டேனியின் அணி 05 குவளை தண்ணீரை எடுத்துக் கொள்கிறார்கள். மஹத் ஆங்கிலத்தில் பேச பொன்னம்பலம் அணிக்கு 05 குவளை தண்ணீர் போகிறது. மீண்டும் அதே தவறை ஐஸ்வர்யா செய்கிறார். மதியம் இரண்டு மணியளவில் டேனி தனது அணிக்கு 'ஒரு ஊர்ல என்று' கதை சொல்ல அதில் ஆங்கிலம் வர ஐந்து குவளை தண்ணீர் காலி.

BB/T/S2/W3/D16/4
மாலை 05.45க்கு மழை பெய்கிறது. ஆனாலும் போட்டி தொடர்கிறது. மாலை ஆறு மணிக்கு போட்டியை இடைநிறுத்தி போட்டியாளர்களை வீட்டுக்குள் வருமாறு கூறுகிறார் பிக் பாஸ். இரவு 09.45க்கு அடுத்த போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டி 'சிந்தாமல் சிதறாமல்'. அணிக்கு மூன்று பேர் வீதம் இரு அணிகள். ஒவ்வொரு அணியிலும் முதலாவமர் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கோப்பையில் நீச்சல் குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து இரண்டாமவரை நோக்கி வீச வேண்டும். இரண்டாமவர் தனக்குக் கொடுக்கப்பட்ட கோப்பையில் அதனைப் பிடித்து மூன்றாமவருக்கு வீச வேண்டும். மூன்றாமவர் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாளியில் அந்த தண்ணீரை நிரப்ப வேண்டும். இரவு 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. நீல வாளி மற்றும் சிவப்பு வாளி வழங்கப்பட்டிருந்தது. சிவப்பு வாளி அணி வெற்றி பெற்றதாக தலைவி வைஷ்ணவி அறிவிக்கிறார்.
சிவப்பு அணிக்கு 200 புள்ளிகளை வழங்குகிறார் பிக் பாஸ். அந்த 200 புள்ளிகளுக்காக எதிரணியின் (தண்ணில கண்டம் போட்டி) தண்ணீர்த் தொட்டியில் இருந்து இரண்டு வாளி தண்ணீரை எடுத்து தங்கள் தண்ணீர்த் தொட்டியில் ஊற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கிறார் பிக் பாஸ். ஏங்க.... ஏன்...? அடுத்து இனி எதிரணி விதிகளை மீறினால் குவளையில் அல்லாமல் ஒரு வாளித் தண்ணீரையே எடுத்து உங்கள் தொட்டியில் ஊற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கிறார் பிக் பாஸ். உங்க வில்லத்தனத்தை காட்டிட்டீங்க பார்த்தீங்களா? இரவு 11.15 மணிக்கு 'தண்ணில கண்டம்' போட்டி மீண்டும் தொடர்கிறது. நள்ளிரவு 12 மணிக்கும் போட்டி நடக்கிறது. மழையும் பெய்து கொண்டிருக்கிறது.
நள்ளிரவு 12 மணிக்கு விளக்குகள் அணைக்கப்படுகின்றன. 'அடாத மழையிலும் விடாது போட்டியைத் தொடரும் போட்டியாளர்கள், நாளையும் தொடர இருக்கும் போட்டியில் வெல்லப்போவது யார் என்னும் கேள்வியுடன் விடைபெறுகிறார் பிக் பாஸ். ஆமா நா தெரியாமத்தான் கேக்குறேன், அவங்க வந்து உங்ககிட்ட நடுராத்திரில போட்டி வைங்கன்னு கேட்டாங்களா என்ன? ம்ம்... நடத்துங்க... நடத்துங்க...

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #Viswaropam2 #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்