BBTamil2 | Week 05 | Day 35 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | நாள் 35 | ஜிங் சக் ஜிங் சக்
பிக் பாஸ் ஞாயிறு என்றாலே அதில் முக்கியமானது வெளியேற்றம். சனிக்கிழமை அத்தியாயத்தில் போட்டியாளர்களுக்குள் சிக்கல் உருவானதால் காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்படவேண்டிய ஒருவரின் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஞாயிறு ஒளிபரப்பின் போதும் பிரச்சினை முடியவில்லை. போட்டியாளர்களுக்குள் விவாதம் தொடர்ந்த வண்ணமே இருந்தது.
கமல் மேடைக்கு வந்ததும் இந்த வார பள்ளிக்கூடம் விளையாட்டில் தரவரிசை வழங்கப்பட்டது எவ்வாறு என தலைமையாசிரியராக இருந்த ரித்விகாவிடம் வினவினார். சென்றாயனுக்கு முதலிடம் வழங்கியது சரியா தவறா என்கிற கருத்துக்களையும் பிறரிடம் கேட்டறிகிறார். சென்றாயன் முதலிடம் பிடித்ததற்கு வாழ்த்தும் தெரிவிக்கிறார்.
இந்த வார தலைமைத்துவம் பற்றி மஹத்திடம் கேட்கிறார். ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரம் தூங்கிவிட்டதாகவும் சமையல் பொருட்கள் பற்றாக்குறையாய் ஆனதாகவும் கூறி மன்னிப்பும் கேட்கிறார். அடுத்து இந்த வாரம் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் ஹிந்தியில் தங்களுக்குள் பொன்னம்பலத்தை திட்டிய காட்சி பதிவாகியிருந்தது. அதைப் பற்றியும் அவர்களிடமே கேட்டார் கமல்.
தொடர்ந்து இந்த வார வெளியேற்றம். முதலில் ஜனனி காப்பாற்றப்படுகிறார். தொடர்ந்து ஐஸ்வர்யாவும் பொன்னம்பலமும் காப்பாற்றப்படுகின்றனர். எஞ்சியிருந்த ரம்யா மற்றும் பாலாஜி ஆகிய இருவரில் சனிக்கிழமை மாலையில் இருந்தே சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த தகவல்களின் படியே ரம்யா வெளியேற்றப்படுகிறார்.
ஜனனி - 39 வாக்குகள் - 26%
பாலாஜி - 36 வாக்குகள் - 24%
பொன்னம்பலம் - 33 வாக்குகள் - 22%
ரம்யா - 24 வாக்குகள் - 16%
ஐஸ்வர்யா - 18 வாக்குகள் - 12%
அளிக்கப்பட மொத்த வாக்குகள் - 150
வாரம் 05 - வெளியேற்றம் - ரம்யா
எமது வாக்களிப்பு முடிவுகளின் படி ஐஸ்வர்யா வெளியேற வேண்டும். ஆனால் பிக் பாஸின் சித்தம் அவ்வாறில்லாவிடில் நாம் என்ன செய்ய இயலும்?
பிக் பாஸ் மேடையில் ரம்யாவின் பிக் பாஸ் பயணத் தொகுப்பு ஒளிபரப்பாகிறது. தொடர்ந்து ரம்யாவுக்கு சில பொம்மைகள் வழங்கப்படுகின்றன. மேடையில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய வெண்பலகை வைக்கப்பட்டிருந்தது. ரம்யா அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொம்மைகளை அவர் விரும்பும் போட்டியாளர்களுக்கு அவர்களின் குணாதிசியங்களின் அடிப்படையில் வைக்க வேண்டும். அவர் கொடுத்த குணாதிசியங்கள் இதோ:
தூங்கு மூஞ்சி - மஹத்
டமாரம் (சத்தம்) - டேனியல்
Cool - வைஷ்ணவி
கோபம் - பாலாஜி
வைத்தியர் - பொன்னம்பலம்
தலையாட்டி பொம்மை - ஐஸ்வர்யா
முகமூடி - சென்றாயன்
அழகு - ஜனனி
குழந்தை - ஷாரிக்
அழுமூஞ்சி - மும்தாஜ்
கண்ணாடி - ரித்விகா
சந்தோஷம் - யாஷிகா
அன்பு - ரம்யா
தொடர்ந்து ரம்யாவுடன் போட்டியாளர்களை சந்திக்கும் கமல் ரம்யா வழங்கிய குணாதிசிய பொம்மைகள் அடங்கிய வெண்பலகையை போட்டியாளர்களுக்கும் காட்டுகிறார். ரம்யா திரைப்படத்தில் தான் பாடிய முதல் பாடலைப் பாடிக் காட்டி விடைபெறுகிறார்.
தற்பெருமை மற்றும் ஜால்ரா பொம்மைகளை யாருக்கு வழங்கலாம் என்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கேட்கிறார் கமல். ஏனைய போட்டியாளர்கள் மும்தாஜையும் வைஷ்ணவியையும் தேர்வு செய்ய பார்வையாளர்களிடம் பலத்த கைதட்டல். ஆனால் வைஷ்ணவி பாலாஜியின் பெயரைச் சொல்ல 'இல்லை' என மறுக்கின்றனர் பார்வையாளர்கள். ஜால்ரா என்பதன் அர்த்தம் புரியவில்லை என்று வைஷ்ணவி சொன்னதெல்லாம் நடிப்பின் உச்சம்.
இந்த வாரம் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து குழந்தைகள் வந்த நிகழ்வைப் பற்றி உரையாடுகிறார் கமல். இருப்பதைக் கொண்டு வாழப் பழக வேண்டும் என்பதை அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கமல் கூறுகிறார். இதன்போது அந்த இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தான் தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறுகிறார் சென்றாயன். சென்றாயனுக்கு உண்மையிலேயே நல்ல குணம் இருப்பதற்கு இது நல்ல சான்று.
36ஆம் நாளில் ஆறாம் வாரத்துக்கான தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். வெளியேற்றத்துக்கான பரிந்துரை இடம்பெறும். 37ஆம் நாளில் தான் போட்டிகள் ஆரம்பமாகும். பொன்னம்பலம் மற்றும் சென்றாயனின் கருத்துக்கள் ஆறாம் வாரத்தில் நிச்சயம் பிரதிபலிக்கும். கமல் இதுவரையிலும் எந்தவொரு பிரச்சினையிலும் தீவிரம் காட்டவேயில்லை. அரசியலுக்கான மேடையாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பட்டும் படாமல் நடந்து கொள்கிறாரோ என்னவோ? பிக் பாஸ் மட்டுமே உண்மைகளை அறிவார்!

பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | உங்கள் அபிமான போட்டியாளர் யார்?
சிகரம் கருத்துக்கணிப்பு

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்