BIGG BOSS TAMIL 2 | WEEK 05 | DAY 30 | BIGG BOSS SCHOOL | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | நாள் 30 | பிக் பாஸ் பள்ளிக்கூடம்
'என் உச்சி மண்டையில சுர்ருங்குது... சுர்... கிர்...' என்று அலறவிட்டு 30ஆம் நாளுக்காய் போட்டியாளர்களை தயார்படுத்தினார் பிக் பாஸ்! இந்த வாரத் தலைவர் மஹத்துக்கும் வைஷ்ணவிக்கும் அவ்வளவாக ஒத்துப் போகவில்லை. சின்னச் சின்ன விஷயங்களுக்கும் மோதல் உருவானது. 'நா தலைவரா இருக்கும்போது இப்படியெல்லாம் பண்ணவே இல்ல தெரியுமா?' என்று சக போட்டியாளர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தார் வைஷ்ணவி. மஹத் உற்சாகமாகவே இல்லை. அவரது கூட்டணிக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும் தோன்றுகிறது.
மதியம் இந்த வாரத்துக்கான Luxury Budget போட்டி ஆரம்பமானது. 'கனாக் காணும் காலங்கள்' போட்டித் தலைப்பு. பிக் பாஸ் பள்ளிக்கூடம். தலைமை ஆசிரியர் ரித்விகா. இன்று சிறப்பு ஆசிரியராக பிக் பாஸ் தமிழ் முதலாம் பருவப் போட்டியாளர் கவிஞர் சினேகன். மற்றைய நாட்களில் யார் கற்பிக்கும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்பதை பிக் பாஸ் சொல்வார். ஆகவே இன்று ரித்விகா தவிர்ந்த அனைவரும் மாணவர்கள். மாணவர் உடையில் போட்டியாளர்களைப் பார்ப்பது நகைச்சுவையாக இருந்தது.
மாணவர்கள் குறும்புடனும் அதே நேரம் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டும் நடக்க வேண்டும். உடைகளை அணிந்துகொண்ட மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் நின்று குதூகலமாக ரயில் பயணம் போகின்றனர். பலருக்கு பழைய நினைவுகள் வந்திருக்கலாம். இந்த வாரம் கமலின் பள்ளிக்கூட நினைவுகள் பகிரப்படலாம்.
சிறப்பு ஆசிரியர் சினேகன் வந்து வகுப்பை ஆரம்பிக்கிறார். பிக் பாஸ் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் கலந்து அமர்ந்திருக்கின்றனர். சினேகன் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக அமர வைக்கிறார். 'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்' பாடலை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார் சினேகன். தினமும் (இந்த வாரம்) காலை பிக் பாஸ் பாடலைத் தொடர்ந்து இந்தத் தமிழ்ப்பாடலை தலைமை ஆசிரியர் ரித்விகா சொல்லிக்கொடுக்க மாணவர்கள் பாட வேண்டும்.
தொடர்ந்து மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு வசனம், பாடல் வரிகள் அல்லது திருக்குறள் மனப்பாடம் செய்வதற்காக ஆசிரியர் சினேகனால் வழங்கப்படுகிறது. மாணவர்கள் அதனை மனனம் செய்து ஒப்பிக்கின்றனர். சிறந்த மாணவனாக பொன்னம்பலம் தேர்வாகிறார்.
வகுப்பு முடிந்து சினேகன் போட்டியாளர்களிடம் பேசுகிறார். 'நீங்க யாரும் நீங்களா இல்ல. தினமும் சாப்பாட்டு நேரத்தில் மட்டுமாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள்' என்று அறிவுரை கூறிவிட்டு செல்கிறார் சினேகன். அவர் போனதும் ரம்யா, வைஷ்ணவி மற்றும் டேனி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். ரம்யா 'நீ யாரு நாங்க நடிக்கிறோம்னு சொல்றதுக்கு?' என்று அவர்களிடம் கூறுகிறார்.
தொடர்ந்து 'கனாக் காணும் காலங்கள்' போட்டியின் ஒரு பகுதியாக 'ஜோடிப்புறா' போட்டி நடைபெறுகிறது. ரித்விகா நடுவர். ரித்விகா ஒரு பிடியாளரை (Catcher) தேர்வு செய்வர். போட்டிக்கான மணி ஒலித்ததும் அவர் போட்டியாளர்களுள் ஒருவரைத் தொட வேண்டும். அவர் தொடுவதற்குள் போட்டியாளர்கள் இவ்விரண்டு பேராக ஜோடியாக மாற வேண்டும். ஜோடி இல்லாமல் தனியாக இருப்பவரை அவர் பிடிக்க வேண்டும். பிடிபட்டவர் ஆட்டத்தில் இருந்து விலக்கப்படுவார். மீண்டும் மணி ஒலித்ததும் போட்டி தொடரும். மஹத் மற்றும் ஷாரிக் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு பிக் பாஸ் பரிசு வழங்குகிறார். நாளை பிக் பாஸ் பள்ளியில் என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.
உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?
Created with PollMaker
#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்