BIGG BOSS TAMIL 2 | WEEK 05 | DAY 29 | NOMINATION | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | நாள் 29 | வெளியேற்ற பரிந்துரை!
'லாலா கட சாந்தி, உன்னால் ஆனேனே பூந்தி' பாடலுடன் ஐந்தாம் வாரம் இனிதே விடிந்தது. யாரு ஆவராங்களோ இல்லையோ பிக் பாஸ் பாக்குறவங்களை பூந்தி ஆக்கினாலும் பரவாயில்லை, பிழிஞ்சி சட்னியா இல்ல ஆக்கிடறீங்க?
காலையில் ஒரு குழுவினர் முற்றத்தில் பேச்சு வாக்கில் ஒரு விளையாட்டு விளையாடினர். பாலாஜி அப்பா. அவருக்கு வைஷ்ணவி, ஜனனி, ரித்விகா என்கிற மூன்று பெண்கள். வைஷ்ணவி திருமணம் செய்ய விருப்பமில்லாமல் வாழ்ந்து வருகிறார். ஜனனிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஜனனியை பெண்கேட்டு வருகிறார் பொன்னம்பலம். அவரது மகன் சென்றாயன். நல்ல நகைச்சுவையாக இருந்தது.
மதியம் தலைவருக்கான போட்டி. வீட்டில் வெவ்வேறு இடங்களில் மூன்று மாலைகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. போட்டியாளர்கள் அவற்றை தேடி எடுத்து ஒவ்வொரு மாலையையும் தான் தலைவராக ஆக்க விரும்புபவருக்கு ஒவ்வொருவருக்கு அணிவிக்க வேண்டும். மாலையை எடுப்பவர் தானே அணிந்து கொள்ளக் கூடாது. போட்டி முடிவடையும் வரை மாலை அணிவிக்கப்பட்டவர் அதைக் கழற்றக் கூடாது.
பாலாஜி, மஹத், ஷாரிக் ஆகியோர் இந்த வார தலைவருக்கான போட்டிக்கு தேர்வாகின்றனர். தலைவருக்கான போட்டியாளர்கள் மூவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இரண்டு பூட்டுக்களால் அந்த சங்கிலி பூட்டப்பட்டிருக்கும். அதற்கான சாவி நீச்சல் குளத்தில் கிடைக்கும். தலைவர் போட்டியாளர்களின் உதவியாளர்கள் அவற்றை தேடி எடுத்து பூட்டுக்களை திறக்க வேண்டும். முதலில் விடுவிக்கப்படுபவரே இந்த வாரத் தலைவர்.
மஹத்துக்கு சென்றாயனும் பாலாஜிக்கு ஜனனியும் ஷாரிக்குக்கு யாஷிகாவும் உதவியாளர்கள். சென்றாயன் நீச்சல் குளத்தில் மூழ்கி சாவிகளை எடுக்க முடியாமல் தடுமாறியது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சி. ஆனால் சென்றாயன் முதலில் மஹத்தை விடுவித்தது ஆச்சரியம். இந்த வாரத் தலைவர் மஹத். வீடு வெளங்கிரும் பிக் பாஸ்!
இரவில் வெளியேற்றப் பரிந்துரைப் படலம். முடிவில் வெளியேற்றத்திற்குத் தேர்வானவர்களின் பெயர்களுடன் அவர்களுக்கு எதிராக எத்தனை பேர் வாக்களித்துள்ளார்கள் என்கிற எண்ணிக்கையையும் கூறினார் பிக் பாஸ். யார் யார் நமக்கு எதிராக வாக்களித்திருப்பார்கள் என்று எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வைத்து போட்டியாளர்களுக்குள் பிளவை அதிகப்படுத்துவது காரணமாக இருக்கலாம். நல்ல வேளை, யார் யார் என்று பெயர்களோடு சொல்லாமல் விட்டார்.
ரம்யா கடந்த வார 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' போட்டியின் மூலம் வெளியேற்றத்திற்குத் தேர்வானவர். மஹத் தலைவரானதால் தப்பினார். பாலாஜி (05 வாக்குகள்), ஐஸ்வர்யா (05 வாக்குகள்), பொன்னம்பலம் (04 வாக்குகள்), ஜனனி (04 வாக்குகள்) பெற்று வெளியேற்றத்திற்குத் தேர்வானார்கள். ஜனனி காலையில் கூறியது போலவே புதியவர்கள் வெளியேற்றப் பட்டியலுக்குள் வந்துள்ளனர்.
பிக் பாஸ் இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ள மூவரில் தானும் ஒருவராக இருப்பதாகக் கருதி தன்னுடன் இருக்கப் போகும் மிகுதி இரண்டு போட்டியாளர்கள் யார், என்ன காரணம் என்பதை சொல்ல வேண்டும். மும்தாஜ் தன்னுடன் இறுதிப் போட்டியில் இருப்பார் என்று கடைசிவரை யாருமே சொல்லவில்லை. மும்தாஜ் அதற்காக கவலைப்பட்டார். இந்த வாரம் வெளியேறப்போவது யார்? கூகுளில் வாக்களிப்பதோடு மறக்காமல் சிகரத்திலும் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்.
#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்