BB Tamil 2 | Week 06 | Day 41 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | நாள் 41 | மெய்ப்பொருள் காண்பாரா கமல்?

பிக் பாஸ் சண்டைகள் எல்லாம் ஓய்ந்து கமலின் வருகைக்காகக் காத்திருக்கும் வெள்ளிக்கிழமை நாளில் 'விஸ்வருபம் - 2' படக்குழுவில் இருந்து ஜிப்ரான், ஆண்ட்ரியா, சத்ய பிரகாஷ் மற்றும் பூஜா குமார் ஆகியோர் வந்திருந்தனர். 'விஸ்வருபம் - 2' படத்தின் முதல் இரண்டு பாடல்களும் ஏற்கனவே பிக் பாஸ் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மூன்றாவது பாடல் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே வெளியானது. 

கமல் எழுதிய அந்தப் பாடலை ஜிப்ரான் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் பாடிக் காட்டினர். அருமையாக இருந்தது. தொடர்ந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக் காட்டினர். ஒவ்வொரு எழுத்துக்களாக சொல்ல அந்த எழுத்துக்குப் பாட வேண்டும். அட, இது நம்ம பாட்டுக்குப் பாட்டுப்பா... அடுத்து 'விஸ்வரூபம் -2' அடுத்த முன்னோட்ட காணொளி (Trailer) காண்பிக்கப்பட்டது. 

பிக் பாஸ் மேடையுடன் போட்டியாளர்கள் இணைக்கப்பட்டதும் 'விஸ்வரூபம் - 2' படக்குழு வருகை பற்றிக் கேட்டுக் கொண்டார். பின்னர் கார்கில் போர் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் கமல். முன்னதாக இந்த வார மீள்பார்வை, மக்கள் கேள்விகள் மற்றும் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் அரங்கேறியிருந்தன. 

போட்டியாளர்களை தனியாக ரகசிய அறைக்கு வரவழைத்து உரையாடுகிறார் கமல். வீட்டில் நடந்த விடயங்களைப் பற்றிய விசாரணையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் பொதுவான பிக் பாஸ் கேள்விகளாகவே அவை அமைந்திருந்தன. பொதுவில் கேட்டிருந்தால் கூட தவறில்லை. எப்படியும் கேள்வி - பதில்களை போட்டியாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறார்கள். 



'எங்க ஏரியா உள்ள வராத' போட்டியில் இருந்தபடி அணிகளாகப் பிரிந்து அமர வைக்கப்படுகின்றனர் போட்டியாளர்கள். நடுவராக ஷாரிக்கின் பணி எவ்வாறு இருந்தது என்று போட்டியாளர்களிடம் கருத்துக் கேட்கிறார் கமல். சென்றாயன் கழிப்பறை செல்லும் போது மும்தாஜ் பாட சொல்லி இம்சைப்படுத்திய விவகாரமும் பேச்சு வாக்கில் சபைக்கு வந்தாலும் தீவிரமாக விசாரிக்கப்படவில்லை. 

மும்தாஜ் திமிராக நடந்து கொள்கிறாரா, பிடிவாதம் பிடிக்கிறாரா என்கிற உரையாடல்கள் நடந்தன. பாலாஜி மும்தாஜுக்கு ஆதரவான தோரணையில் பேசினார். மும்தாஜ் தன்னுடைய பிடிவாதத்தை எந்த இடத்திலும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. கருத்துக்களைக் கேட்டுக் கொண்டு நாளை சந்திப்போம் என்று விடைபெற்றார் கமல். 

சென்றாயனை கழிப்பறை செல்ல விடாமல் மும்தாஜ் பாட வைத்து சித்திரவதை செய்ததைப் பற்றி தீவிரமான விசாரணை இல்லை. மும்தாஜின் பிடிவாதத்திற்கு கண்டிப்பு இல்லை. வைஷ்ணவி ஐஸ்வர்யாவிடம் வேண்டும் என்றே தகராறு செய்ததற்கு விசாரணை இல்லை. ஐஸ்வர்யா பொன்னம்பலத்தை ஹிந்தியில் திட்டியது தொடர்பாக பொய் சொன்னது விசாரணைக்கு வரவில்லை. ஐஸ்வர்யா - ரித்விகா மோதல் விசாரிக்கப்படவில்லை. போட்டிகளில் நடந்த குளறுபடிகள் விசாரிக்கப்படவில்லை. 

கமல் இந்த பிக் பாஸ் மேடையை தனது அரசியலுக்கும் சினிமாவுக்கும் பயன்படுத்துவதை மட்டுமே முதன்மை நோக்காகக் கொண்டுள்ளார். பிக் பாஸ் சம்பவங்களை போகிற போக்கில் தொட்டுவிட்டுப் போகிறாரே தவிர தீவிரம் காட்டுவதில்லை. எல்லாவற்றிலும் ஒரு கருத்தும் கதையும் சொல்லி விடுகிறார். இது நியாயம் தானா? மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற வேண்டியது கமலின் கடமை அல்லவா? இதற்கு கமல் செவி சாய்ப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!