BB Tamil 2 | Week 08 | Day 51 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | நாள் 51 | என்னைப் போல் ஒருவன்

பிக் பாஸ் கலகலப்பாக இருக்கிறதோ இல்லையோ, கலவரமாக இருக்கிறது. 50ஆம் வார முதல் நாளே 'புகார்ப் பெட்டி' பிக் பாஸ் வீட்டை கலவர பூமியாக மாற்றிவிட்டது. இரண்டாம் நாளிலும் கலவரத்தைத் தொடர்வதற்கு தீர்மானித்து  அதற்கேற்பவே அடுத்த போட்டியையும் வடிவமைத்து செயல்படுத்தியிருக்கிறார். வாங்க போகலாம்...




50ஆம் நாள் காட்சிகள் இன்னும் முடியவில்லை. 'புகார்ப் பெட்டி' மீதான விசாரணையின் கலவர காட்சிகளுடன் நேற்றைய அத்தியாயம் நிறைவுக்கு வந்திருந்தது. இரவு 11.30 மணி. டேனியும் பாலாஜியும் பேசிக் கொண்டிருந்தார்கள். டேனி குழு சேர்க்கிறார் என்று பாலாஜி முன்வைத்த குற்றச்சாட்டைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். நள்ளிரவில் தான் இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்தார்கள். விசாரணை முடிய தாமதம் ஆனதே காரணம். 

நள்ளிரவு 02 மணிக்கு விளக்குகள் அணைக்கப்பட்டன. நள்ளிரவு மூன்று மணிக்குக்கூட பாலாஜி, ஜனனி மற்றும் சிலர் ரகசிய கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். டேனியல், ஐஸ்வர்யா உள்ளிட்டவர்கள் காலையில் இன்று யாரை வெளியேற்றத்திற்கு பரிந்துரைக்கலாம் என்று குறியீட்டு சொற்களால் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றி விவாதம் அமைந்திருந்தது. 




BB Tamil 2 | Week 08 | Who will be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | யாரைக் காப்பற்றப் போகிறீர்கள்?

SENRAYAN | சென்றாயன்
PONNAMBALAM | பொன்னம்பலம்
JANANI | ஜனனி
Created with Survey Maker


51ஆம் நாள். காலை 11.45 மணி. இந்த வாரத்துக்கான போட்டி. 'என்னைப் போல் ஒருவன்' போட்டி. போட்டியாளர்களுக்கு சக போட்டியாளர் ஒருவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட் வழங்கப்படும். டீ-ஷர்ட் இல் காணப்படும் கதாபாத்திரமாக மாறி நடிக்க வேண்டும். நடை, உடை, குணம் என சகலவற்றிலும் புகைப்படத்தில் காணப்படும் நபரைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் வைத்து செய்வதற்கு சரியான தருணம் இது. நடுவர் ரித்விகா. போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்படுவார்கள். 

நீலம் மற்றும் சிவப்பு நிற டீ-ஷர்ட்கள் வழங்கப்பட்டிருந்தன. நீல அணி: சென்றாயன் - பொன்னம்பலம், மஹத் - மும்தாஜ், ஐஸ்வர்யா - ஜனனி, வைஷ்ணவி - பாலாஜி, டேனியல் - யாஷிகா, சிவப்பு அணி: மும்தாஜ் - ஐஸ்வர்யா, பொன்னம்பலம் - மஹத், யாஷிகா - வைஷ்ணவி, பாலாஜி - டேனியல், ஜனனி - சென்றாயன்.

மாலை 06.30 மணி. நீல அணியை ரகசிய அறைக்கு அழைத்துப் பேசினார் பிக் பாஸ். நீல அணிக்கு ஒரு ரகசிய சவால். சிவப்பு அணியினரை பிக் பாஸ் சொல்லும் இரண்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துமாறு செய்ய வைக்க வேண்டும். ஏற்கனவே நாங்க மண்டை குழம்பிப் போய் இருக்கோம். அதுல இது வேற. 

யாஷிகா (டேனியல்) தொப்புள் தெரியும் படி டீ-ஷர்ட் அணிந்திருந்தார். பொன்னம்பலம் (சென்றாயன்) அதை கண்டித்தார். அத்தோடு நில்லாமல் யாஷிகா (டேனியல்) வின் தொப்புளைத் தொட்டு விட வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காட்சிகளைக் காண முடிந்தது. யாஷிகா (வைஷ்ணவி) கீழே விழுந்து உருண்டு புரண்டு சிரித்தார். நமக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. 

ஆனாலும் இன்றே சில உட்பூசல்கள் ஆரம்பித்திருந்தன. அவர் எனது கதா பாத்திரத்தை மிகைப்படுத்தி நடிக்கிறார், அவமானப் படுத்துவது போல நடிக்கிறார், அவரது சொந்த விருப்பு வெறுப்புகளை எனது கதா பாத்திரத்தின் ஊடாக வெளிப்படுத்த முனைகிறார் என்னும் கருத்துக்களெல்லாம் வெளிவந்த வண்ணமிருந்தன. நாளை அளவில் அது மோதலாக மாறக் கூடிய சூழலும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

  1. பாஸ்..பிக் பாசை...நான் பார்க்கவே...இல்லை..

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்