BB Tamil 2 | Week 07 | Day 44 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07 | நாள் 44 | சர்வாதிகாரி ஐஸ்வர்யா

இந்த வாரம் ஆரம்பித்ததில் இருந்தே நமக்கு நெஞ்சு பக் பக் என்று இருக்கிறது. காரணம் தங்கத் தலைவி ஐஸ்வர்யா. ஆரம்ப கட்டத்தில் குழந்தையாக இருந்தவர் இப்போதெல்லாம் ஆங்கிரி பேர்ட் ஆக மாறி ருத்ர காளியாகக் காட்சி தருகிறார். ஒவ்வொரு நாளின் முன்னோட்டக் காணொளிகளும் படு பயங்கரமாக இருக்கின்றன. நிற்க 43ஆம் நாளின் காட்சிகளே இன்றும் தொடர்கின்றன. மாலையில் வெளியேற்றப் பரிந்துரை. முற்றத்தில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் கரும்பலகையில் வைக்கப்பட்டிருக்கும். வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்களின் புகைப்படங்களை எடுத்து காரணங்களை சொல்லி அரைக்கும் இயந்திரத்தில் இட்டு அரைக்க வேண்டும். ஒவ்வொருவராக தங்கள் எண்ணங்களை கூறுகின்றனர். தனது முறை வந்த போது பாலாஜி பிக் பாஸ் தன்னை அழைத்துப் பேசினால் மட்டுமே தனது பரிந்துரையைக் கூறுவேன் என அடம் பிடிக்கிறார். ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறார் போல. மற்றைய போட்டியாளர்கள் சமாதானம் பேசியும் வேலைக்கு ஆகவில்லை. மூன்று மணித்தியாலம் ஆகியும் பாலாஜி தன் பிடிவாதத்தைக் கைவிடவில்லை. பிக் பாஸும் அழைக்கவில்லை. இரவு பதினோரு மணி. யாஷிகா வயிற்று வலியால் த...