BB TAMIL 2 | WEEK 09 | DAY 61 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | நாள் 61 | பிக் பாஸ் பஞ்சாயத்து சபை
பிக் பாஸ் ஒரு பகுதி நிறைவடைந்து விட்டது. புது வரவு எப்போது வரும் என பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் இரண்டாம் பருவம் ஆரம்பிக்கும் போது இருந்த எதிர்பார்ப்பு இப்போது இல்லை. காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் முதலாம் பருவ நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு முன்னரே தயாராக வந்திருக்கிறார்கள். இதனால் சுவாரசியம் அறவே இல்லாமல் போய்விட்டது. புதுவரவு சுவாரசியத்தை அளிக்கும் என நம்புகிறார்கள் ரசிகர்கள். பார்க்கலாம்.
60ஆம் நாள் இரவு 08.00 மணிக் காட்சிகளுடன் ஆரம்பமானது இன்றைய அத்தியாயம். மோமோவுக்கு எதிராக போட்டியாளர்கள் பலர் போர்க்கொடி தூக்கியிருந்தனர். 60ஆம் நாளில் பொம்மலாட்டம் போட்டியில் மும்தாஜ் தன்னைத் தானே சிறந்த போட்டியாளராக அறிவிக்க முனைந்தது தான் காரணம். மும்தாஜ் மீது சக போட்டியாளர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மஹத் மும்தாஜை குறிவைத்துத் தாக்கினார்.
மும்தாஜுக்கு எதிரான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காட்சி இது. ஆனால் மும்தாஜ் கோபப்படவில்லை. அமைதியாக சிரித்தபடி இருந்தார். இது மும்தாஜின் தந்திரமா இல்லை இயல்பா? பல நேரங்களில் கோபமாக எதிர்வினையாற்றும் மும்தாஜின் அமைதி ஆச்சரியப்பட வைத்தது. அனைவரும் ஓரணியில் திரண்டது காரணமோ?
இரவு 10.00 மணிக்கு பிக் பாஸ் அறிவிப்பு ஒன்றைத் தந்தார். நாளை காலை பாடல் ஒலித்ததும் சிறிது நேரத்திற்கு மட்டுமே தண்ணீர் விநியோகம் இருக்கும். அதற்குள் போட்டியாளர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீரை சேமித்து வைக்க பத்து வாளிகள் வழங்கப்படும். இது தொடர்பான போட்டி விவரங்கள் நாளை காலை அறிவிக்கப்படும்.
* நீங்கள் காப்பாற்ற விரும்பும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம்.
* உங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு சந்தர்ப்பம் வீதம் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான ஆறு நாட்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும்.
* வாக்களிப்பு முடிவுகள் திங்கள் வெளியாகும்.
61ஆம் நாள் நா யாரு என்கிற விஜய் சேதுபதி பாடலுடன் பொழுது விடிந்தது. காலை 10.45 மணி. யாரு நல்லா கழுவி ஊத்துறாங்கன்னு பார்க்கலாம் னு பிக் பாஸ் முடிவு பண்ணியிருந்தார் போல. காலையில் பத்து வாளி குடுத்திருந்தாங்க இல்லியா? அதுல அஞ்சு வாளி தண்ணிய மட்டும் தான் இந்த போட்டிக்கு பயன்படுத்தணும். போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்தனர். சில துணிகளும் பாத்திரங்களும் தரப்பட்டன. கழுவி சுத்தமாக்க வேண்டும். வைஷ்ணவியும் மஹத்தும் நடுவர்கள்.
ரின் சலவைத் தூளின் அனுசரணை. இந்த போட்டியை பார்க்கும் போது தமிழகத்தை பசுமை மாநிலமா மாத்திருவாய்ங்க போலயே? ஒரு வேளை ரின் பசுமைக் கட்சின்னு ஏதும் துவங்கிருவாங்களோ? யாருக்குத் தெரியும்? மஹத்தும் வைஷ்ணவியும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். கடமையாம்... இருக்கட்டும். பாலாஜியின் அணி 1.5 புள்ளிகளில் வெற்றி பெற்றது.
அதுக்கப்புறம் ரின் விளம்பரம் ஒளிபரப்பானது. போட்டியாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று நீர் நிறைந்த தமிழகத்தை உருவாக்குவோம் என்று கோரஸ் பாடினார்கள். இந்த வார Luxury Budget புள்ளிகள் 2000. இதற்குள்ளும் ஒரு போட்டியை வைத்தார் பிக் பாஸ். Activity Areaவில் பலூன்களில் பொருட்களின் விபரங்கள் போடப்பட்டிருந்தன. பலூனை உடைத்து துண்டுச் சீட்டை எடுத்து பொருட்கொள்வனவை செய்ய வேண்டும்.
மாலை 04.30 மணி. அடுத்த தலைவருக்கான போட்டி. யாஷிகா மற்றும் மஹத் போட்டியாளர்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும். இருவரின் ஆதரவாளர்களும் இரு அணிகளாகப் பிரிவார்கள். Garden Areaவில் போட்டிக்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். அங்கு சிவப்பு பெயிண்ட் மற்றும் பஞ்சு வைக்கப்பட்டிருக்கும். பஞ்சில் பெயிண்ட்டை தொட்டு போட்டியாளரின் மேல் ஏறிய வேண்டும். யாருடைய சட்டையில் குறைவான பெயிண்ட் இருக்கிறதோ அவரே தலைவர். யாஷிகா வெற்றி.
பிக் பாஸால மட்டும் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும். என்னமோ போங்க. இதெல்லாம் நல்லா பண்றீங்க. நிகழ்ச்சி தான் பார்க்க சகிக்கலை. மக்கள் நாம என்ன பண்ணாலும் ரசிப்பாங்கன்னு தப்ப நினைச்சுக்காதேள். அது ரொம்ப தப்பாக்கும். அப்புறம் பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லாரும் சேர்ந்து கும்பி பாகம் பண்ணிடுவாள். பார்த்துக்கோங்கோ.
மாலை 06.45. பிக் பாஸ் பஞ்சாயத்து சபை போட்டி. பஞ்சாயத்து தலைவர் பாலாஜி. பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கள் பிரச்சினைகளை முறையிடலாம். மும்தாஜ் மீதான குற்றச்சாட்டை இந்தப் பஞ்சாயத்திலும் முன்வைத்தனர். சென்றாயன் பேசியது வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மும்தாஜை குற்றவாளியாக்க தான் இந்தப் பஞ்சாயத்தா? எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதா பிக் பாஸின் நோக்கம்?
நாளை கமலின் நாள். கமலும் இந்தப் பஞ்சாயத்தைக் கிளறுவாரா? வெள்ளிக்கிழமை அத்தியாயத்தில் ஏதோ சண்டை இருப்பதாக முன்னோட்டத்தில் காண்பித்தார்கள். சாதாரண உரையாடலைக் கூட கலவரமாகக் காண்பிக்கும் திறமை விஜய் தொலைக்காட்சி Promo Teamக்கு உள்ளது. ஆகவே எதனையும் முழுமையாகப் பார்த்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த வாரம் கமலுக்கு சுதந்திர தினம், கேரளா வெள்ளம், வாஜ்பாய் மரணம் என அரசியல் வரிசை கட்டி நிற்கிறது. அரசியல் பேசி விடைபெறுவாரா அல்லது நிகழ்ச்சியைக் கவனிப்பாரா? பார்க்கலாம்.

SIGARAM | Public Opinion Poll | Week 09
* இது சிகரம் இணையத்தள வாசகர்களின் மன நிலையை அறிவதற்கான வாக்கெடுப்பு மட்டுமே.
* நீங்கள் காப்பாற்ற விரும்பும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம்.
* உங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு சந்தர்ப்பம் வீதம் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான ஆறு நாட்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும்.
* வாக்களிப்பு முடிவுகள் திங்கள் வெளியாகும்.
Bigg Boss Tamil 2 | Week 09 | Public Opinion Poll | Who Will Be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | மக்கள் வாக்களிப்பு | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்?
Created with PollMaker
61ஆம் நாள் நா யாரு என்கிற விஜய் சேதுபதி பாடலுடன் பொழுது விடிந்தது. காலை 10.45 மணி. யாரு நல்லா கழுவி ஊத்துறாங்கன்னு பார்க்கலாம் னு பிக் பாஸ் முடிவு பண்ணியிருந்தார் போல. காலையில் பத்து வாளி குடுத்திருந்தாங்க இல்லியா? அதுல அஞ்சு வாளி தண்ணிய மட்டும் தான் இந்த போட்டிக்கு பயன்படுத்தணும். போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்தனர். சில துணிகளும் பாத்திரங்களும் தரப்பட்டன. கழுவி சுத்தமாக்க வேண்டும். வைஷ்ணவியும் மஹத்தும் நடுவர்கள்.
ரின் சலவைத் தூளின் அனுசரணை. இந்த போட்டியை பார்க்கும் போது தமிழகத்தை பசுமை மாநிலமா மாத்திருவாய்ங்க போலயே? ஒரு வேளை ரின் பசுமைக் கட்சின்னு ஏதும் துவங்கிருவாங்களோ? யாருக்குத் தெரியும்? மஹத்தும் வைஷ்ணவியும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். கடமையாம்... இருக்கட்டும். பாலாஜியின் அணி 1.5 புள்ளிகளில் வெற்றி பெற்றது.
அதுக்கப்புறம் ரின் விளம்பரம் ஒளிபரப்பானது. போட்டியாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று நீர் நிறைந்த தமிழகத்தை உருவாக்குவோம் என்று கோரஸ் பாடினார்கள். இந்த வார Luxury Budget புள்ளிகள் 2000. இதற்குள்ளும் ஒரு போட்டியை வைத்தார் பிக் பாஸ். Activity Areaவில் பலூன்களில் பொருட்களின் விபரங்கள் போடப்பட்டிருந்தன. பலூனை உடைத்து துண்டுச் சீட்டை எடுத்து பொருட்கொள்வனவை செய்ய வேண்டும்.
Who is your most favourite contestant?
* உங்கள் விருப்பப் போட்டியாளருக்கு நீங்கள் வாக்களிக்கலாம்.
* ஒரு வாரத்திற்கு ஒரு வாக்கினை மட்டுமே அளிக்க முடியும்.
* இந்த பிக் பாஸ் பருவம் முடியும் வரை ஒவ்வொரு வாரமும் நீங்கள் வாக்களிக்க முடியும்.
உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?
Created with PollMaker
மாலை 04.30 மணி. அடுத்த தலைவருக்கான போட்டி. யாஷிகா மற்றும் மஹத் போட்டியாளர்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும். இருவரின் ஆதரவாளர்களும் இரு அணிகளாகப் பிரிவார்கள். Garden Areaவில் போட்டிக்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். அங்கு சிவப்பு பெயிண்ட் மற்றும் பஞ்சு வைக்கப்பட்டிருக்கும். பஞ்சில் பெயிண்ட்டை தொட்டு போட்டியாளரின் மேல் ஏறிய வேண்டும். யாருடைய சட்டையில் குறைவான பெயிண்ட் இருக்கிறதோ அவரே தலைவர். யாஷிகா வெற்றி.
பிக் பாஸால மட்டும் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும். என்னமோ போங்க. இதெல்லாம் நல்லா பண்றீங்க. நிகழ்ச்சி தான் பார்க்க சகிக்கலை. மக்கள் நாம என்ன பண்ணாலும் ரசிப்பாங்கன்னு தப்ப நினைச்சுக்காதேள். அது ரொம்ப தப்பாக்கும். அப்புறம் பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லாரும் சேர்ந்து கும்பி பாகம் பண்ணிடுவாள். பார்த்துக்கோங்கோ.
மாலை 06.45. பிக் பாஸ் பஞ்சாயத்து சபை போட்டி. பஞ்சாயத்து தலைவர் பாலாஜி. பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கள் பிரச்சினைகளை முறையிடலாம். மும்தாஜ் மீதான குற்றச்சாட்டை இந்தப் பஞ்சாயத்திலும் முன்வைத்தனர். சென்றாயன் பேசியது வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மும்தாஜை குற்றவாளியாக்க தான் இந்தப் பஞ்சாயத்தா? எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதா பிக் பாஸின் நோக்கம்?
நாளை கமலின் நாள். கமலும் இந்தப் பஞ்சாயத்தைக் கிளறுவாரா? வெள்ளிக்கிழமை அத்தியாயத்தில் ஏதோ சண்டை இருப்பதாக முன்னோட்டத்தில் காண்பித்தார்கள். சாதாரண உரையாடலைக் கூட கலவரமாகக் காண்பிக்கும் திறமை விஜய் தொலைக்காட்சி Promo Teamக்கு உள்ளது. ஆகவே எதனையும் முழுமையாகப் பார்த்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த வாரம் கமலுக்கு சுதந்திர தினம், கேரளா வெள்ளம், வாஜ்பாய் மரணம் என அரசியல் வரிசை கட்டி நிற்கிறது. அரசியல் பேசி விடைபெறுவாரா அல்லது நிகழ்ச்சியைக் கவனிப்பாரா? பார்க்கலாம்.
#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்