BB Tamil 2 | Week 07 | Day 45 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07 | நாள் 45 | ராணி மகா ராணி

'ராணி மகா ராணி' போட்டியின் சர்வாதிகாரியான ஐஸ்வர்யா இன்னும் உக்கிரமாக உள்ளார். 44ஆம் நாள் காட்சிகள் தொடர்கின்றன. இரவில் அனைத்துப் போட்டியாளர்களையும் அழைத்து கூட்டம் போடுகிறார். ரித்விகாவை நடனமாட வைக்கிறார். இரவு 08.30 மணிக்கு போட்டி நடைபெறும் அறையில் கூட்டம் போட்டு சர்வாதிகாரிகள் மூவரும் பேசுகின்றனர். 

இரவு 09.30 மணிக்கு ஜனனி போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஐஸ்வர்யா கொடுத்த பணிகளைக் கூறுகிறார். இரவு பத்து மணிக்கு சென்றாயன் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருக்கிறார். இன்று இரவு உணவு சுரைக்காயும் சப்பாத்தியும். சென்றாயன் மட்டும் தான் சமைக்க வேண்டும். மும்தாஜ் சிறையில் அடைக்கப்படுகிறார். 




பாலாஜி இரவு சாப்பிடவில்லை. அவரை வற்புறுத்தி சாப்பிட வைக்குமாறு மஹத்துக்கு ஐஸ்வர்யா சொல்கிறார். மஹத் ஊட்டியதை பாலாஜி துப்பி விடுகிறார். இரவு சர்வாதிகாரிகள் மூவரும் மட்டும் தனியறையில் உறங்குகின்றனர். 

45ஆம் நாள். 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ' பாடலுடன் காலைப் பொழுது விடிகிறது. காலை ஒன்பது மணிக்கு பொதுமக்களுக்கு உடற்பயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர் அனைவரும் 'ராணி மகா ராணி' பாடலைப் பாடுகின்றனர். பின்னர் சிரிக்கும் பயிற்சி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. பாலாஜி மட்டும் அமைதியாக நிற்கிறார். 

சென்றாயன் காலைத் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா அதைப் பிடுங்கி கொட்டி விடுகிறார். இது ஐஸ்வர்யாவுக்கும் சென்றாயனுக்கும் இடையில் கடும் வாக்குவாதமாக நடக்கிறது. நீண்ட நேரம் இருவரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுகின்றனர். சென்றாயனுக்கு இன்று முழுவதும் உணவு எதுவும் வழங்கக் கூடாது என்று ஐஸ்வர்யா உத்தரவிடுகிறார். 




Who will be saved for Week - 07 | நீங்கள் யாரைக் காப்பற்றப் போகிறீர்கள்?

பொன்னம்பலம் - Ponnambalam
மும்தாஜ் - Mumtaz
மஹத் - mahath
ரித்விகா - Riythvika
பாலாஜி - Bhalaji
ஷாரிக் - Shariq


தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் சென்றாயனை லூசு என்று தான் கூப்பிட வேண்டும் என்று ஐஸ்வர்யா உத்தரவிடுகிறார். சென்றாயன் அதற்கு கோபப்படுகிறார். சென்றாயன் கோபப்பட்டு பேசியதற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறார் ஐஸ்வர்யா. சென்றாயன் மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவரை முற்றத்துக்கு வரவழைத்து தண்ணீரை அவர் மீது ஊற்றச் செய்கிறார். 

காலை பதினோரு மணி. மஹத் வரவேற்பறையில் கீழே படுத்து உறங்கி விட நாய் குலைக்கிறது. அதற்கு ஐஸ்வர்யா மஹத்தை முற்றத்தில் முட்டிக்கால் போட்டு நிற்க வைக்கிறார். அதன் போது மஹத் டேனியை எதிர்த்துப் பேசியதால் மஹத்தை சிறையில் அடைக்கின்றனர். அப்போதும் மஹத் சிறைக்குள்ளும் முட்டிக்கால் போட்டு இருக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா உத்தரவிடுகிறார். 




உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா YASHIKA
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் ANANTH
ரம்யா RAMYA
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMaker


உண்மையில் மிகக் கொடூரமாக இருக்கிறது இந்தப் போட்டி. ஐஸ்வர்யா இதனைப் போட்டியாகப் பார்க்காமல் தனக்கு அனைவரையும் பழி வாங்கக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு எப்போது முடிவுரை எழுதப்படும்? இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கின்றன. வெள்ளிக்கிழமை சர்வாதிகாரியின் சிலையை பொதுமக்கள் உடைக்க வேண்டும். உடைத்தால் பொதுமக்கள் வெற்றி. இல்லாவிட்டால் சர்வாதிகாரிகள் வெற்றி. 

இன்னும் 45ஆம் நாள் காட்சிகள் முடியவில்லை. இன்னும் எந்தெந்த கோணத்தில் போட்டி நகரப்போகிறதோ தெரியவில்லை. 45ஆம் நாளுக்காக மூன்று காணொளிகள் விஜய் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டன. அவற்றில் ஒன்றுக்கான காட்சிகள் மட்டுமே இன்று காண்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு முன்னோட்டக் காணொளிகளே மிச்சமிருக்கும் சூழலில் இன்னும் கொடுமையான காட்சிகள் எல்லாம் அரங்கேறக் காத்திருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்...

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!