நுட்பம் - தொழிநுட்பம் - 02 | கூகுள் சாட் (Chat) | ஓகே கூகுள் | கூகுள் பிக்ஸல்

உலகம் என்று தோன்றியதோ அன்றே தொழிநுட்பமும் தோன்றிவிட்டது. தானாகக் கீழே விழுந்த பழங்களை எடுத்து உண்ட மனிதன் மரத்தில் ஏறிக் கனியைப் பறித்து உண்டது தொழிநுட்ப முன்னேற்றம் தான். கல்லில் இருந்து நெருப்பை உண்டாக்கிய மனிதன் விறகைக் கொண்டு சமைத்ததும் தொழிநுட்ப முன்னேற்றம் தான். ஓலைச்சுவடியில் எழுதிய காலம் முதல் தாள், தட்டச்சு இயந்திரம், கணினி, வாசிப்பு கருவி (கிண்டில் போல) வரை எல்லாம் தொழிநுட்ப வளர்ச்சி தான். இப்படியாக காலத்துக்குக் காலம் தொழிநுட்பம் வளர்ந்து கொண்டே வருகிறது. தொழிநுட்ப வளர்ச்சி எப்போதும் தடைப்படுவதில்லை. யாராலும் தடை செய்யவும் முடியாது. ஆகவே நாம் நாள்தோறும் தொழிநுட்ப உலகில் நடைபெறும் மாற்றங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. 

எதிர்காலத்தில் பணப்பரிமாற்றம் இணையம் மூலமாகவே நடைபெறும். குறுஞ்செய்திகள் இணையவழிக்கு மாறும். எல்லோர் கையிலும் திறன்பேசி இருக்கும். எழுத்தறிவில்லாதவரும் குரல்வழி திறன்பேசியையும் கணினியையும் தன் தாய் மொழியிலேயே பயன்படுத்தக் கூடியதாகவிருக்கும். சரி, இன்றைய தொழிநுட்பச் செய்திகளைப் பார்ப்போமா?

கூகுளின் Chat, ஆப்பிளுக்குப் போட்டி!

ஆப்பிள் ஐபோன் IMessage குறித்து அறிந்திருப்பீர்கள். அதற்குப் போட்டியாக விரைவில் கூகுள் களமிறக்கவிருக்கும் வசதிதான் இந்த Chat. நீங்கள் தினமும் உங்கள் கைப்பேசியில் இருந்து யாருக்கேனும் குறுஞ்செய்தி அனுப்புவீர்கள். குரல் அழைப்புகளை எடுத்து உரையாடுவீர்கள். இந்த செயல்கள் GSM தொழிநுட்பத்தின் மூலம் நடைபெறுகின்றன. இன்னும் சொல்லப் போனால் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் ஊடாகத்தான் குறுஞ்செய்திகளும் குரல் அழைப்புகளும் பரிமாற்றப்படுகின்றன.



நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தி பெறுநருக்குக் கிடைத்ததா என அறிய முடியும். ஆனால் அதைப் பெறுநர் வாசித்தாரா என அறிய முடியாது. புகைப்படங்களைப் பரிமாற முடியாது. இதற்கெல்லாம் தீர்வைத் தந்தது இணையம். ஆனால் நாளொரு செயலியும் பொழுதொரு தேடலுமாகத் திரிய வேண்டியிருந்தது. இந்தக் கவலைகளைப் போக்க கூகுள் முடிவெடுத்துவிட்டது. ஆம், இனி நீங்கள் தினம் தினம் ஒரு செயலியைத் தேடிச் செல்ல  வேண்டியிருக்காது.







SMS எனப்படும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலாக RCS என்னும் அரட்டை (Chat) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆனால் இது கூகுள் அரட்டை (Google Chat) கிடையாது. ஏனெனில் இது ஒரு தனி செயலி கிடையாது. 'அரட்டை (Chat)' என்பது செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு வசதி மட்டுமே. நீங்கள் இதுவரை சாதாரணமாக பயன்படுத்தி வந்த குறுஞ்செய்திச் சேவையைப் போன்றே இந்த 'அரட்டை (Chat)'  வசதியைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் செய்திகள், படங்கள், ஒலி மற்றும் ஒளி பதிவுகள் ஆகியவற்றை பரிமாறிக்கொள்ள முடியும். ஆனால் இது உங்கள் இணைய இணைப்பின் மூலமாகவே நடைபெறும். ஆகவே RCS தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் திறன்பேசியை நீங்கள் கொண்டிருப்பது அவசியமாகும். 


ஓகே கூகுள் (OK Google)

நீங்கள் 'ஓகே கூகுள்' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், கூகுள் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். இது 'கூகுள் அசிஸ்டென்ட் (Google Assistant)' என அழைக்கப்படுகிறது. நீங்கள் இப்போதைக்கு கூகுள் அசிஸ்டென்ட் உடன் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட முடியும். வருங்காலத்தில் ஏனைய மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இப்போது எட்டு வரையான மொழிகளையே கூகுள் அசிஸ்டென்ட் இனால் புரிந்துகொள்ள முடிகிறது. 2018 இறுதிக்குள் 30 மொழிகளை கூகுள் அசிஸ்டென்ட் புரிந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






உங்கள் தொடர்புப் பட்டியலில் (Contact List) உள்ளவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்துதல், குறுஞ்செய்தி அனுப்புதல், கூகுள் வரைபடத்தில் வழிகாட்டுதல், இசைக் கோப்புகளை இயக்குதல், இணையத்தில் தேடுதல் என ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை உங்கள் குரல் கட்டளைக்கு பணிந்து 'சொல்லுங்க எஜமான்' என்று மறுக்காமல் செய்யும். 




உங்கள் திறன்பேசியில் கூகுள் அசிஸ்டன்ட் செயலி இல்லாவிட்டால் இப்போதே தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். எங்கே எல்லோரும் சொல்லுங்க பார்ப்போம் 'ஓகே கூகுள்'!


கூகுள் பிக்ஸல் 3 - Google Pixel 3 

கூகுள் ஆண்ட்ராய்டு உலகிற்கு அறிமுகப்படுத்திய திறன்பேசிதான் இந்த 'கூகுள் பிக்ஸல் (Google Pixel)'. Pixel, Pixel XL, Pixel 2 மற்றும் Pixel 2 XL ஆகிய நான்கு திறன்பேசிகளை கூகுள் இதுவரை வெளியிட்டுள்ளது. கூகுள் திறன்பேசி தயாரிப்பில் களமிறங்கிய பிறகு திறன்பேசிக்கு அவசியமான தொலைபேசி அழைப்பு (Dialler), குறுஞ்செய்தி உள்ளிட்ட அனைத்து செயலிகளையும் தானே தயாரித்து வெளியிட்டுவருகிறது. 



கூகுள் பிக்ஸல் திறன்பேசி வரிசையில் 2018 இல் வெளியாகவுள்ள திறன்பேசிதான் Pixel 3 மற்றும்  Pixel XL. கூகுள் பிக்ஸல் திறன்பேசிகளின் விலை ஆப்பிளுக்குப் போட்டியாக இருந்து வருகிறது. ஆகவே இந்த வருடம் Pixel 3s என்னும் பெயரிலான நடுத்தர விலையிலான திறன்பேசி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெயரிடப்படாமல் உருவாக்கப்பட்டுவரும் Android  P (ஆண்ட்ராய்டு P) எனப்படும் Android 9.0 இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது. இவ்வருடம் ஆகஸ்ட் மாதமளவில் வெளியாகவுள்ளது Pixel 3!

#சிகரம் #தொழிநுட்பம் #மைக்ரோசாப்ட்ஆபிஸ் #எக்ஸியோமி #வாட்ஸப் #SIGARAM #MSOFFICE2019 #XIAOMI #MI6 #WHATSAPP #TECHSIGARAM

Comments

  1. தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!