இனியவை இருபது - 46/12

வணக்கம் அன்பு வாசக உள்ளங்களே. தொடர் பதிவின் மற்றுமொரு அத்தியாயத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வழமை போல அதிரடியான - காத்திரமான பதிவொன்று உங்களுக்காக காத்திருக்கிறது. உலக அழிவு தொடர்பான வாக்குப் பெட்டி வலது பக்கம் வைக்கப் பட்டுள்ளது. மறக்காமல் உங்கள் வாக்குகளையும் பதிவு செய்யுங்கள். முக நூலில் நான்: சிகரம்பாரதி. டுவிட்டரிலும்: சிகரம்.

பயணம் - 18
அது என்ன இனியவை இருபது? இதுவரை யாரும் யோசிக்காத கோணத்தில் இப்பதிவு அமைய வேண்டும் என எதிர்பார்த்தேன். ஆகவே தான் இந்த தலைப்பு. அர்த்தம்? நாம் நமது வலைப்பூவுக்கு தலைப்பு விளக்கம் ஒன்று வழங்கியிருப்போம். மகுடவாசகம் என்று கூட சொல்லலாம். சிறந்த, வித்தியாசமான மகுட வாசகங்கள் சிலவற்றை தொகுத்துத் தருவதே இப்பதிவின் நோக்கம். வாருங்கள் போகலாம்.

#வருவது வாழ்த்தும்! செல்வது மிரட்டும்! இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு! துணிந்து நடைபோடு! துரத்து உன் அவநம்பிக்கையை! உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்!!


#பகுத்தறிவின் முழக்கம்...... தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எசமானனாக இல்லாமல் - உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் - நல்வாழ்வு வாழவேண்டும் - அறிஞர் அண்ணா

முகவரி: http://oosssai.blogspot.com/

#எனது பதிவுகள் அனைத்தும் கற்பனையே. நடைமுறை உண்மைகளுக்கும் இந்தப் பதிவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தப் பதிவுகளை யார் வேண்டுமானாலும் காப்பி பேஸ்ட் செய்து தங்கள் தளத்தில் போட்டுக்கொள்ளலாம். நன்றி சொல்லத் தேவையில்லை. ஆனால் விளைவுகளுக்கு அவரவர்களே பொறுப்பு.


#தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள்,,,,

முகவரி: http://www.anbuthil.com/

#வாசிப்பது என்பது சுவாசிப்பது! வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!

முகவரி: http://jaghamani.blogspot.com/

#என் மன எண்ணங்களை எழுத்து வடிவமாக்கி வண்ண சித்திரத்துடன் கண்ட காட்சிகளையும் கனவு காட்சிகளையும் ஒருங்கிணைத்து இலக்கிய சந்தனம் பூசி, கவிதை நறுமணம் பரப்ப உங்கள் முன் பதிவு செய்கிறேன்.

முகவரி: http://www.rishvan.com/

#புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.

முகவரி: http://hooraan.blogspot.com/

இன்னிக்கு இது போதும். மீண்டும் நாளை இதன் தொடர்ச்சியோடு சந்திப்போம். அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது......

அன்புடன்,
சிகரம்பாரதி.

Comments

  1. அனைத்தும் நல்ல தளங்கள்...

    தொகுப்பிற்கு நன்றி....

    ReplyDelete
  2. அனைத்தும் அறியாத தளங்கள்...

    நன்றி...

    ReplyDelete
  3. நல்ல முயற்சி பாராட்டுகள்..

    ReplyDelete
  4. ஒட்டியில் பதிவுகளை வேகமாக தேர்ந்தெடுக்க முடிகிறது.
    இதனால் எனக்கு ஒட்டி பிடிக்கும்

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் உறவுகளே!! ஒட்டி உங்களுக்கும் பிடிக்கும்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்