Thursday, November 22, 2012

நீ - நான் - காதல் - 02

நான்
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த
நடுநிசி வேளைதனில்
என்னை யாரோ
எழுப்ப முயல்கின்றனர்.
எதேச்சையாய்
உறக்கம் கலைந்து
விழித்துப் பார்த்த போது - என்
விழிகளையே நோக்கியபடி
என் அருகில் நீ!

"அன்பே, இந்நேரத்தில்
அருகில் வந்தமர்ந்து
அழைத்ததேனோ?"
வினவுகிறேன்.

"கண்ணாளனே உனைக்
காணவே வந்தேன்"
மறுமொழி தருகிறாள் என்
மனம் கவர்ந்த தேவதை

"கனவிலும் நாம்
காதல் செய்வோமே,
நடுநிசி தாண்டிய
நள்ளிரவு வேளையில்
நாடிவரக்
காரணம் என்னவோ?"

"கனவு என்பதே
பொய்தானே? - ஆதலால்
நிஜம் காண வந்தேன்"

"சந்தேகிக்கிறாயா?"

"ஐயோ.......
இல்லை அன்பே,
இல்லை...."
படபடக்கிறாள் என் தேவதை

"அச்சம் வேண்டாம்
அன்பே,
அருகில் அமர்ந்து
ஆறுதலாய்ப் பேசு"என் வீட்டின்
எழில் கொஞ்சும்
பூந்தோட்டத்தின் மத்தியில்
பூமரங்கள் சுற்றியிருக்க
நமக்காய் ஒரு ஆசனம்
நன்றாய் செய்திருந்தேன்

ஆசனத்தின் மீது நான்
என் மடி மீது நீ
சம்பாஷிக்கத் துவங்குகிறோம்
கைவிரல்களைக்
கோர்த்தபடி

"சொல் அன்பே - நான்
செய்ய வேண்டியது என்ன?"

"சந்தேகம் கொண்டிங்கு
சந்திக்க வரவில்லை.
கனவுக் காட்சியெல்லாம்
மெய்யாகக் காண விரும்பி,
உன் இருப்பிடம் தேடி
உரைக்க வந்தேன்."

"கல்யாணம்
காட்சி என்று நமக்குக்
கட்டுப்பாடுகள் அதிகம்.
தகர்த்தெறிதல் 
தகாது பெண்ணே"

"தகர்த்தெறியும் யோசனை
தர வரவில்லை அன்பே!
தாலி கொண்டு - என்னை
தாரமாக்கிக் கொள் என
தவம் புரிய வந்தேன்."

புன்னகை
பூக்கிறேன் நான்.

தலை கோதி
நெற்றி வருடி
இதழோடு இதழ் பதித்து
"தவத்திற்குத்
தகுந்த வரம் தந்தேன்"
என்றுரைத்த போது
எனையணைத்து
எழுமாறாய் முத்தங்கள் நீ
தந்த போது
எழுந்து கொண்டேன்
உண்மையான
உறக்கத்திலிருந்து....

அட....
அதுவல்ல,
இதுதான் நிஜமோ?
இருந்தாலென்ன,
எழுகதிர் பூமியை
எட்டிப் பிடிக்கும் முன்னே
என்னவளின் முகம் கண்டு வரலாம்
என விரைந்தபோது
என் வீட்டு வாசலில்
எனக்காய் நீ.......!!!

எனது நேற்றைய கவிதைப் பதிவான "மறுபடியும் வருவேன்" கவிதையின் இணைப்பு 'பரிதி முத்துராசன்' என்னும் பதிவரின் "ஒரு சாமிதான் கொன்னுடுச்சு" என்னும் பதிவில் இணைக்கப் பட்டுள்ளது. இணைப்பை வழங்கியமைக்காக 'பரிதி' அவர்களுக்கும் நேற்றைய கவிதைக்கு வெற்றி மகுடம் சூட்டிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

9 comments:

 1. கனவு நனவாகி... முடிவில் இன்ப அதிர்ச்சி... ரசித்தேன்...

  ReplyDelete
 2. ஏனோ இந்தக் கவிதையைப் படிக்கும்போது பூம்புகார் படத்தில் திருமணம் முடிந்ததும் கோவலன் கண்ணகியிடம் பேசும் நிகழ்வு நினைவிற்கு வந்தது. கவிதை அழகு

  ReplyDelete
 3. உ ங்க ள் க வி ஆ ர் வ ம் மே லு ம் வ ள ர என் வா ழ் த் துக்கள்.

  ReplyDelete
 4. கனவு நனவாகி கனவு தேவதையை கை பிடிக்க என் வாழ்த்துக்கள் . உங்கள் கவி வரிகள் சிறப்பாக அமைந்துள்ளது.

  ReplyDelete
 5. அழகான வரிகள் பாஸ் அருமையாக இருக்கு

  ReplyDelete
 6. மனதில் உள்ள எண்ணங்களே கனவாகி...

  கனவினில் தன் மனதுக்கு உகந்தவளை தேவதையாக்கி....

  கற்பனையில் லயித்து கவிதை வரிகள் படைத்திருப்பது மிக அழகு....

  கோர்வையான ரசிக்கவைத்த வரிகள் பாரதி....

  அன்புவாழ்த்துகள் அழகிய கவிதைவரிகளுக்கும் கனவு நனவாவதற்கும்பா...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?