கற்பிழந்தவள்
கனவில் கூட
கண்டதில்லை இப்படியொரு
காட்சியை
எண்ணியும் பார்க்கவில்லை
எனக்கிப்படி நேருமென்று
அன்பு காட்டி
அரவணைத்த கை
காமம் கொண்டு
கட்டியணைக்கும் என்று
பிறந்தநாள் பரிசாக - எனக்குப்
பிடித்த ஆடையைப்
பரிசாக அளித்தவரே - அதைப்
பறித்து துச்சாதன வேடம் கொள்வாரென்று
பள்ளிக்கூடம் சென்று வந்தேன்
பல கலைகள் கற்றுவந்தேன்
அனைவரிலும்
அன்பு பாராட்டினேன்
நல்லவர்கள் எல்லாம்
நம்மோடு தான் இருக்கிறார்கள் என
நம்பிக்கை கொண்டிருந்தேன்
பொய்முகம் கொண்டிங்கு
போலி வாழ்க்கை வாழ்வதேனோ
சொந்தம் என்று உறவாடும் நீங்களே
சுகம்தேடி எம்மேனி தொடலாமா
சிறுமியர் நாங்கள்
சிறுபாவமும் அறியாதவர்கள்
உலகத்தை
உங்கள் மூலம்
அறிந்துகொள்ள
ஆவலாய் இருந்தோம்
ஆனால் நாங்கள் சுயமாகவே
அறிந்துகொண்டோம் உங்கள்
அனைவரின் முகத்திரைகளும்
அகற்றப்பட்டதன் மூலம்
கன்னித்தன்மை
கொண்டவளைத்தான்
கல்யாணம் செய்யவேண்டும்
என்று
எதிர்பார்க்கும் நீங்கள்
எங்கள்
கன்னித்தன்மையை
களவாட முனைந்தது உங்கள்
கயமைத்தனம் அல்லவா
பிறந்தது முதல்
இறப்பது வரை
ஏதோவொரு சொந்தம்
எம்முடன் வந்தவண்ணமே
இருக்கிறது
எல்லா சொந்தங்களையும்
எம்மால் சந்தேகிக்க முடியாது
சாதிக்க வேண்டும் நாங்கள்
சிதைத்து விடாதீர்கள்
வாழ்க்கையை வாழவேண்டும்
வடுவாக்கி விடாதீர்கள்
நாளை
எல்லோரும் என்னைச்
சொல்லலாம்
"கற்பிழந்தவள்" என்று
ஆனால் அவர்கள்
அறிந்திருக்கமாட்டார்கள்
பத்து வயதிலேயே - நான்
பட்ட வேதனைகளை!
இக்கவிதை பாலியல் ரீதியாக உறவுகளாலேயே துன்புறுத்தப்பட்ட ஒரு பெண் குழந்தையின் குரலாக இங்கு பதியப்பட்டுள்ளது. இதற்கான தகுந்த பிரதிபலிப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
சிகரம்பாரதி.
பதிவு வெளியிடப்பட்டது: 28 நவம்பர், 2012
திருத்தப்பட்டது: 02 பெப்ரவரி , 2019
இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான 'மெட்ரோ நியூஸ்' இன் வாரப் பதிப்பில் 'முத்திரைக் கவிதைகள்' பகுதியில் 01-02-2019 அன்று 'மெட்ரோ Plus - B 12' பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பதிவு வெளியிடப்பட்டது: 28 நவம்பர், 2012
திருத்தப்பட்டது: 02 பெப்ரவரி , 2019
இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான 'மெட்ரோ நியூஸ்' இன் வாரப் பதிப்பில் 'முத்திரைக் கவிதைகள்' பகுதியில் 01-02-2019 அன்று 'மெட்ரோ Plus - B 12' பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கொடுமை... ரொம்ப கொடுமை...
ReplyDeleteவலிமிகுந்த விடயம் மனிதம் தொலைந்து கிடக்கு
ReplyDeleteதெரிந்தது சில தெரியாதது பல என பெண் குழந்தைகள் மீதான வன்முறையை ஒழிக்க முன்வரவேண்டும் ஒவ்வொருவரும் இல்லை என்றால் நாளைய தலைமுறை அழிந்துவிடும் அழுத்தமான படைப்பு நன்றி
அருமையான அறிவுறுத்தல் சிகரம் ... இதனை என் முக நூலிலும் பகிர்கிறேன்
ReplyDeletepainful Lines...
ReplyDeletenica Bharathi.
நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய செய்தியைத் தாங்கள் பதிந்து பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
அன்பின் சிகரம் பாரதி - பாலியல் பலாத்காரத்தின் கொடுமைகளைப் பற்றிய கவிதை நன்று - படிக்கும் அனைவரும் கொடியவர்களத் திருத்த முயல் வேண்டும் - பாலியல் பலாத்காரத்தினை அடியோடு ஒழிக்க வேண்டும் - நல்வாழ்த்துகள் சிகரம் பாரதி - நட்புடன் சீனா
ReplyDeleteபொட்டிலடிக்கும் விதமாக அமைந்த வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete