Posts

Showing posts from April, 2018

டுவிட்டர் @newsigaram - 11

சமூக வலைத்தள ஊடகமான டுவிட்டரில் தற்போது அதிகளவானோர் ஈடுபாடு காட்டி வருகின்றனர். பிரபலங்கள் எல்லாம் டுவிட்டர் கணக்கு வைத்திருப்பதும் முக்கியமான விடயங்கள் உடனடிப் பிரபலமாவதும் இதற்குக் காரணம். டுவிட்டரும் அதிகளவான வாசகர்களைக் கவர்வதற்காக பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சரி, இப்போது நாம் நமது கண்ணில் பட்ட சில அற்புதமான டுவிட்டுகளை இங்கே பார்ப்போமா? உலகத்தில ஒரு திரைப்படம் மாதிரியே ஏழு படம் இருக்கும் — ச ப் பா ணி (@manipmp) March 30, 2018 பொண்ணுங்க பேசணும்னு முடிவு பண்ணிட்டா ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் மனசு விட்டு கொட்டுவாங்க😍 அதே பேச கூடாது ன்னு முடிவு பண்ணிட்டா, ஒத்த வார்த்தை வாங்கிட முடியாது🙄 pic.twitter.com/LGHDoLPzek — ◦•●◉✿ ƖƝƁƛƝ ✿◉●•◦ (@Inban_Ofl) March 28, 2018   துரோகம் செய்தவர்களுக்கும் நன்மை செய்ய விதைகளால் மட்டுமே முடியும்.! — முகிலன்™ (@MJ_twets) April 1, 2018 சும்மா ஒரு டிரை... பிடிச்சருந்தா ஆர்டி பண்ணி ஊக்குவீங்க😊😊 pic.twitter.com/Cl2hTsRaj3 — CSK சரக்கஸம் (@I_Purusho) March 31, 2018 வாழ்ந...

முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02

Image
முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் முனைவர் இரா. குணசீலன். ' வேர்களைத் தேடி ' என்னும் வலைப்பதிவின் மூலம் தமிழ் மொழியின் வேர்களைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியிருக்கிறார். உலக அளவில் தொழிநுட்பத் தமிழைக் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக உழைத்து வருகிறார். ' சிகரம் ' இணையத்தளத்துக்காக நேர்காணல் என்றதும் மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இதோ முனைவர் இரா. குணசீலன் அவர்களுடனான நமது நேர்காணலின் இரண்டாம் பகுதி உங்களுக்காக:   சிகரம் : தமிழில் விஞ்ஞானம், தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு நவீன துறைகளுக்கான தமிழ்ச் சொற்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. இதை சரிசெய்வது எப்படி? குணசீலன் : இயன்றவரை ஒவ்வொரு தமிழரும் தம் துறை சார்ந்த சொற்களைத் தமிழில் கலைச்சொல்லாகப் பயன்படுத்தவேண்டும். என் மாணவர்கள் நான் பயன்படுத்தும் கணினிசார்ந்த சொற்களைத் தமிழிலேயே பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் முகநூல்...

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 03

Image
வாரம் 02 - 2018/04/21 - 2018/04/27 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல்  அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி  சன் ரைசர்ஸ் ஹைதராபாத்    |  போட்டி -  06 |  வெற்றி -  04 |  தோல்வி -  02 |  புள்ளி -  08 |  சராசரி  +0.492  சென்னை சூப்பர் கிங்ஸ்  |  போட்டி -  05 |  வெற்றி -  04 |  தோல்வி -  01 |  புள்ளி -  08 |  சராசரி  +0.742  கிங்ஸ் இலவன் பஞ்சாப்  |  போட்டி -  06 |  வெற்றி -  05 |  தோல்வி -  01 |  புள்ளி - 10  |  சராசரி  +0.394 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  |  போட்டி -  06 |  வெற்றி -  03 |  தோல்வி -  03 |  புள்ளி -  06 |  சராசரி +0.572 ராஜஸ்தான் ராயல்ஸ்  |  போட்டி -  06 |  வெற்றி -  03 |  தோல்வி -  03 |  புள்ளி -  06 |  சராசரி  -0.801 மும்பை இந்தியன்ஸ்     ...

ஐ.பி.எல்-2018 | டெல்லியை வென்று முதலிடத்தைப் பிடித்தது பஞ்சாப்!

Image
வணக்கம் நண்பர்களே. ஐபிஎல் 2018 மிக மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்கள் கடந்து மூன்றாவது வாரத்திலும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது.  நேற்று ஐபிஎல்2018 இன் 22வது போட்டியாக இடம்பெற்ற கிங்ஸ் இலவன் பஞ்சாப் எதிர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி மிக விறுவிறுப்பாக இடம்பெற்றது.  டெல்லி டேர்டெவில்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்வு செய்தது. ட்ரென்ட் போல்ட் 02 விக்கெட்டுகள், அவேஷ் கான் 02 விக்கெட்டுகள் மற்றும் லியாம் ப்ளன்கட் 03 விக்கெட்டுகள் என சிறப்பாகப் பந்து வீசிய  டெல்லி டேர்டெவில்ஸ் அணி  கிங்ஸ் இலவன் பஞ்சாப்பை 143 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது.  லோகேஷ் ராகுல் 23, மாயங்க் அகர்வால் 21, கருண் நாயர் 34 மற்றும் டேவிட் மில்லர் 26 என வீரர்களின் பங்களிப்புடன் 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை  கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி பெற்றுக்கொண்டது.  144 என்னும் இலகுவான ஓட்ட இலக்குடன் களமிறங்கிய  டெல்லி டேர்டெவில்ஸ் அணியை  கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி தனது சிறப...

எங்கள் ஔவை!

Image
ஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை! செந்தமிழ் மொழியின் சிறப்பானவர் ஔவை, சீர்மிகுத் தமிழில் கனிவானவர் ஔவை, கம்பன் வீட்டில் கட்டுத்தறிதான் கவிபாடும்-ஔவை யென்றால் அணுக்களும் அஞ்சி வாய்மூடும்! மூதுரையின் மூதாட்டி எங்கள் ஔவை, நன்னூல் நான்மணியினிற்  கோவை அவர், பிங்கல நிகண்டின் இலக்கணமும் அவர்! ஆத்தியைச் சூடியே அறம்வளர்த்த அன்னையவர்! அதியனின் அரிய நெல்லிக்கனி ஔவை, பாரிமகளிரை மணம் செய்வித்த மாதரசியவர், நெறிபல உரைத்துக் கவிபல படைத்து போர்களைத் தடுக்கும் புலவரு மவர்! கம்பனை கதறிட செய்தவர் ஔவை-பதில் கவிகளால் பதறிட செய்தவர் ஔவை, பக்தியில் திழைத்த ஞானப்பழமு மவர், தமிழ்சக்தியாய் திகழ்ந்த ஞானசெருக்கு மவர்! மறத்தமிழ் புறத்தையும் உரைத்தார்  மனங்களின் உணர்வில் காதல் அகத்தையும் வடித்தார், வள்ளுவன் குறளினை அணுவென குறைத்தார், சமகால புலவர்களையும் கவிதையில் வடித்தார்! அகத்திலும் புறத்திலும் உணர்வினை வடித்தார், நற்றிணைக் குறுந்தொகையினை நயம்பட உ...

எங்கிருந்து வந்தாய்?

Image
எங்கிருந்து என்னுள் வந்தாய்! கண்ணே யெந்தன் கனவுக்குள் வந்தாயா? எந்தன் கண்களாக வந்தாயா? கோடையில்கூட தேகம்  குறுக்குகிறேன்! பெண்ணே தென்றலாய்  வந்தாயா-குளிர் நீராய்  நனைத்தாயா? எந்தன் உயிருக்குள்  எப்படிநீ நுழைந்தாய்! அன்பே உதிரத்தில் கலந்தாயா? எந்தன் உணர்வினில் கலந்தாயா! எந்தன் மழலையின்  நினைவு என்னிடத்தில் உயிரே தாயென வந்தாயா-மனக் கருவினில் சுமந்தாயா? அயர்ந்து நிற்கிறேன் உனைக்கண்டு! மலரே சிலையென  வந்தாயா? சித்திரமாய் வந்தாயா? விழிநீர் சொரிகிறேன் உந்தன் அதட்டல்களில் தாயே குருவென வத்தாயா-எந்தன் குருதியாய் வந்தாயா? வேண்டிடும் வரங்கள்  நீதந்தாய்! கனிவே எந்தன் இறையென வந்தாயா இவன் இடமென  வந்தாயா? பதிவர் : கவின்மொழிவர்மன் #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #tamil #poem #kavinmozhivarman #சிகரம் #sigaram #sigaramco

கற்றோரை மதி!

Image
கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்" என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். "பத்தாயிரம்" என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அது போ...

நுட்பம் - தொழிநுட்பம் - 02 | கூகுள் சாட் (Chat) | ஓகே கூகுள் | கூகுள் பிக்ஸல்

Image
உலகம் என்று தோன்றியதோ அன்றே தொழிநுட்பமும் தோன்றிவிட்டது. தானாகக் கீழே விழுந்த பழங்களை எடுத்து உண்ட மனிதன் மரத்தில் ஏறிக் கனியைப் பறித்து உண்டது தொழிநுட்ப முன்னேற்றம் தான். கல்லில் இருந்து நெருப்பை உண்டாக்கிய மனிதன் விறகைக் கொண்டு சமைத்ததும் தொழிநுட்ப முன்னேற்றம் தான். ஓலைச்சுவடியில் எழுதிய காலம் முதல் தாள், தட்டச்சு இயந்திரம், கணினி, வாசிப்பு கருவி (கிண்டில் போல) வரை எல்லாம் தொழிநுட்ப வளர்ச்சி தான். இப்படியாக காலத்துக்குக் காலம் தொழிநுட்பம் வளர்ந்து கொண்டே வருகிறது. தொழிநுட்ப வளர்ச்சி எப்போதும் தடைப்படுவதில்லை. யாராலும் தடை செய்யவும் முடியாது. ஆகவே நாம் நாள்தோறும் தொழிநுட்ப உலகில் நடைபெறும் மாற்றங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது.  எதிர்காலத்தில் பணப்பரிமாற்றம் இணையம் மூலமாகவே நடைபெறும். குறுஞ்செய்திகள் இணையவழிக்கு மாறும். எல்லோர் கையிலும் திறன்பேசி இருக்கும். எழுத்தறிவில்லாதவரும் குரல்வழி திறன்பேசியையும் கணினியையும் தன் தாய் மொழியிலேயே பயன்படுத்தக் கூடியதாகவிருக்கும். சரி, இன்றைய தொழிநுட்பச் செய்திகளைப் பார்ப்போமா? கூகுளின் Chat, ஆப்பிளுக்குப் போட்டி! ஆப்பிள...

இணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM!

Image
நீங்கள் வானொலிப் பிரியரா? வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயமாகியிருக்கிறது  Style FM !  இலங்கைக்கு பழமையான வானொலி வரலாறு உண்டு. இலங்கை வானொலி என்றால் அந்நாட்களில் தமிழகத்தில் கூட வெகு பிரபலம். இப்போது வரலாறு மட்டுமே இருக்கிறது. வானொலிகள் ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும் என தாங்களாகவே வரையறை செய்துகொண்டு ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகின்றன.  இளம் அறிவிப்பாளர்கள், புதுமையான சிந்தனை என சாதனை படைக்க புறப்பட்டிருக்கிறது  Style FM . இப்போது ஒலித்தெளிவுக்கான பரீட்சார்த்த ஒலிபரப்பு  http://styleno1fm.com/ என்னும் இணைய முகவரி வழியாக இடம்பெற்று வருகிறது.  விரைவில் உத்தியோகபூர்வ ஒலிபரப்பு ஆரம்பமாகவுள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் புதிய, புதுமையான வானொலிக் கலாச்சாரத்தை Style FM உருவாக்கவுள்ளது.  இது மட்டுமல்ல, Style TVயும் விரைவில் உதயமாகவிருக்கிறது. காதுகளுக்கு மட்டுமல்ல உங்கள் கண்களுக்கும் விருந்தளிக்க Style TV தயாராகி வருகிறது....

நுட்பம் - தொழிநுட்பம் - 01

Image
வணக்கம் நண்பர்களே! தொழிநுட்ப உலகில் நொடிக்கு நொடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. அந்த மாற்றங்களை உங்கள் கைவிரல் நுனியில் தொகுத்துத் தருவதே இந்தத் தொடர். வாங்க போகலாம்! கணினி  மைக்ரோசாப்ட் ஆபிஸ் - 2019 இந்த வருட இறுதியில் வெளியிடப்படவுள்ளது. இந்த பதிப்பானது விண்டோஸ் 10 கணினிகளில் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னமும் உலகிலுள்ள 30 வீதத்திற்கும் அதிகமான கணினிகள் விண்டோஸ் XP பதிப்பிலேயே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 10க்கான பயனாளர்களை அதிகரிக்கவே மைக்ரோசாப்ட் ஆபிஸ் - 2019 செயலி விண்டோஸ் 10இல் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.   திறன்பேசி  வாட்ஸப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வாட்ஸப்பில் நீங்கள் தவறுதலாக அழித்த படங்கள், ஒளிப்பதிவுகளை மீண்டும் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. வாட்ஸப் பயனாளர்களின் படங்கள், ஒளிப்பதிவுகளை தனது நினைவகத்தில் நிரந்தரமாக சேமிக்கவுள்ளது. இதன் மூலம் அழிக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுக்க முடியும். இந்த வசதி வாட்ஸப் 2.8.113 பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ...

பயணங்கள் பலவிதம் - 01

Image
சித்திரைக் கொண்டாட்டங்கள் முடிவடைந்து விட்டன. ஒருவார கால விடுமுறையும் முடிவடைந்து விட்டது. நாளை 18ஆம் திகதி மீண்டும் வழமை போல் பணிக்குச் சமூகமளிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு எழுந்து தயாராகி வேலைக்குச் சென்றால் இரவு ஒன்பது மணிக்குத் தான் வீடு திரும்ப முடியும். ஓய்வு ஒழிச்சல் இல்லாத நரக வாழ்க்கை. தினமும் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் மாதாந்த வரவு-செலவில் துண்டு விழும்.  ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தல் போல ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்திலும் சித்திரை மாதத்திலும் தமிழரின் புத்தாண்டு தையா சித்திரையா என்று விவாதம் நடத்த வேண்டியிருக்கிறது. தைமாதம் தான் தமிழரின் புத்தாண்டு என்பதை எவ்வளவு புரிய வைத்தாலும் நம்மவர்கள் விளங்கிக் கொள்வதாக இல்லை. காலம் தான் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இம்முறை சித்திரை விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேனே தவிர கொண்டாட வேண்டும் என்று நினைக்கவில்லை. சித்திரைப் புத்தாண்டு என்று வந்து கொண்டிருந்த வாழ்த்துக்கள் ஒரு பக்கம் கடுப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தன. எங்கள் ஊரில் தொடர்ச்சியாகப் பெய்த மழையும் க...