முக நூல் முத்துக்கள் - 03
வணக்கம் வலைத்தள வாசகர்களே. இன்று வெளிவரவிருந்த நேற்றைய பதிவின் தொடர்ச்சியை தவிர்க்க முடியாத காரணங்களினால் (நண்பன் ஒருவனின் தந்தையாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள செல்லவேண்டியுள்ளது.) இவ்வார இறுதிக்குள் வெளியிட தீர்மானித்திருக்கிறேன். அவசரமாகத் தயார் செய்த பதிவு இது என்றாலும் உங்கள் மனதைக் கவரும் என்று நம்புகிறேன். நேற்றைய பதிவினை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்: அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்! 01. பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”. சிறுவன் முகத்தில் வியப்பு. “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார். சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”. நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...! 02. நல்லதையே செய்து வாழும் நல்லவர்க்கு நாணமதை சொத்தெனவே கொண்டவர்க்கு கொல்லுகின்ற துன்பம் ஒ...