வலைப்பதிவு வழிகாட்டி - 04

பிளாக்கர் (Blogger) துணையுடன் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது பற்றி இதுவரை நாம் பார்த்தோம். Image Credit: Google அதன் படி முறைகளை நீங்கள் கீழ்வரும் இணைப்புகளில் ஒழுங்குமுறையில் காணலாம். வலைப்பதிவு வழிகாட்டி - 01 வலைப்பதிவு வழிகாட்டி - 02 வலைப்பதிவு வழிகாட்டி - 03 சரி, வலைப்பதிவை உருவாக்கிவிட்டோம். இனி எழுதப் போகலாமே என்பது உங்கள் எண்ணமாக இருக்கும். ஆனால் அதை விட முக்கியமான சில படிமுறைகள் இருக்கின்றன. அவற்றையும் செய்த பின்னர் நாம் எழுதத் துவங்குவோம். வலைப்பதிவு அமைப்புகளை (Settings) கட்டமைக்க வேண்டும். உங்கள் வலைப்பதிவின் கட்டுப்பாட்டு பகுதியில் (Dashboard) இடது பக்கத்தில் கீழே இந்த Settings காணப்படும். Settings இனை தெரிவு செய்யுங்கள் இங்கு 'Basic' என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவின் அடிப்படை விவரங்களை மீண்டும் மாற்றி அமைக்கலாம். Title என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவு தலைப்பை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உங்கள...