Posts

வலைப்பதிவு வழிகாட்டி - 03

Image
பிளாக்கர் (Blogger) துணையுடன் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  Image Credit : Google  பிளாக்கர் வலைப்பதிவு ஒன்றை உருவாக்க ஜிமெயில் (GMail) மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருப்பது அவசியம். ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கு இதுவரை உங்களிடம் இல்லையென்றால் இப்போதே அதனை உருவாக்கிக் கொள்ளுங்கள்.  அடுத்து https://www.blogger.com என்னும் முகவரிக்கு சென்று உங்களுக்கான வலைப்பதிவை உருவாக்க ஆரம்பியுங்கள். உங்களுக்கான பயனர் பெயரை உருவாக்கிக் கொள்ளுங்கள். கூகிள் பிளஸ் (Google Plus) சமூக வலைத்தள கணக்கை உருவாக்கவோ அதனை பிளாக்கருடன் இணைக்கவோ இனி முடியாது என்பதைக் கவனிக்கவும்.  வலைப்பதிவை உருவாக்குதல்   இப்போது நாம் படம் - 06இல் காட்டப்பட்டுள்ள திரையில் இருக்கிறோம்.  படம் - 06  இப்போது 'CREATE NEW BLOG' என்னும் பொத்தானை சொடுக்குங்கள்.  அடுத்து உங்களுக்கு கீழ் காட்டப்பட்டுள்ள திரை காட்சியளிக்கும்.  படம் - 07  இது மிக முக்கியமான இடம். அவசரத்தில் தவறிழைத்துவிடாதீர்கள்!   இ...

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு? - 02

Image
இதோ இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நாளை (2019.04.16) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வரவிருக்கின்றன. வேட்பாளர்கள் அனைவரும் இறுதிக் கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.  யாருக்கு உங்கள் வாக்கு? முடிவு செய்துவிட்டீர்களா? எந்த அடிப்படையில் நீங்கள் வாக்களிப்பதற்கான வேட்பாளரை தெரிவு செய்திருக்கிறீர்கள்?  ஆண்டாண்டாய் நம்மை மாறி மாறி ஆண்டு வரும் அதிமுக, திமுக கட்சிகளுக்கா உங்கள் வாக்கு? அல்லது உங்கள் உறவினர்களும் நண்பர்களும் போட்டியிடும் கட்சிகளுக்கா உங்கள் வாக்கு? இலவசங்களை அள்ளி வழங்குபவர்களுக்கா உங்கள் வாக்கு? அல்லது வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கா உங்கள் வாக்கு?  Image Credit: Google  வாக்களிக்க முன் சற்று சிந்தியுங்கள். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லக் கூடிய கட்சிக்கு உங்கள் வாக்கை அளியுங்கள். தமிழர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களை தேர்ந்தெடுங்கள். பல தசாப்தங்களாய் நம்மை ஆண்டு வரும் கட்சிகளுக்கு சற்று ஓய்வளிப்போம்.  அதாவது அதிமுக, திமுக கட்...

கேபிள் டிவி / டிஷ் டிவி நேயர்களே உடன் உஷார் ஆகுங்கள்!!!

Image
நீங்கள் உள்ளூர் தொலைக்காட்சி சேவை வழங்குநர் (கேபிள் ஆபரேட்டர் / Cable Operator) ஊடாகவோ அல்லது டிஷ் டிவி அல்லது டிஷ் ஆன்டனா எனப்படும் செய்மதித் தொலைக்காட்சி சேவை ஊடாகவோ உங்களுக்கான தொலைக்காட்சி இணைப்பினை பெற்றிருக்கலாம்.  இப்போது கேபிள் தொலைக்காட்சி சேவைகள் பெரும்பாலும் இல்லை. பெரும்பாலானோர் செய்மதித் தொலைக்காட்சிகளையே பயன்படுத்துகிறோம்.  கடந்த வருட இறுதியில் ட்ராய் (TRAI) எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செய்மதித் தொலைக்காட்சிகளுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அந்த நடைமுறைகள் பிப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தன.  முன்னர் Package எனப்படும் பொதிகளாகவே நமக்கு அலைவரிசைகள் வழங்கப்பட்டன. அதாவது 150 ரூபாய்க்கு 100 அலைவரிசைகள் அல்லது 450 ரூபாய்க்கு 500 அலைவரிசைகள் என வழங்கப்பட்டன. இவற்றில் நமக்கு தேவைப்படும் அல்லது நாம் பார்க்கும் அலைவரிசைகள் நமக்கு வழங்கப்படும் அலைவரிசைகளில் 25% கூட இருக்காது.  Image Credit : Google / Zee News இதனை மாற்றுவதற்காக ட்ராய் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன் மூலம் நீங்க...

வலைப்பதிவு வழிகாட்டி - 02

Image
நாம் முதலில் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று பிளாக்கர் (Blogger) வழியாகப் பார்க்கலாம்.  வலைப்பதிவை உருவாக்க உங்களிடம் மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருப்பது அவசியம். இன்றைய காலத்தில் நம்மில் பெரும்பாலானோரின் கைகளில் திறன்பேசிகள் (Smart Phones) இருக்கின்றன. பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தவும் இணைய விளையாட்டுக்களில் பங்கேற்கவும் மற்றும் அலுவலகத் தேவைகளுக்கும் மின்னஞ்சலைப் பயன்படுத்துவதால் நம்மிடம் மின்னஞ்சல் கணக்கொன்று கட்டாயம் இருக்கும். ஆகவே மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி என்று தனியாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை (யாருக்கேனும் அந்த சந்தேகம் இருந்தால் கருத்துரைப் பெட்டியில் பதிந்தால் தனிப்பதிவு வழியாக விளக்குகிறேன்).  வலைப்பதிவு உருவாக்கம்   உங்கள் இணைய உலாவியை (Browser) திறந்து கொள்ளுங்கள் (Chrome/ Firefox, Etc).  முகவரிப் பட்டியில் (Address Bar) பிளாக்கர் முகவரியை உள்ளிடுங்கள்.  https://www.blogger.com   உங்களுக்கு இவ்வாறானதொரு திரை கிடைக்கும்.  படம் - 01  நீங்கள் ஏற்கனவே வலைப்பதிவை...

NEWS TODAY - 13-04-2019 | WORLD NEWS WIRE

Image
BBC                                                                                                                                Sudan coup leader Awad Ibn Auf steps down   The head of Sudan's military council has stood down a day after leading a coup that toppled long-time leader Omar al-Bashir amid a wave of protests. Defence Minister Awad Ibn Auf announced his decision on state TV, naming as his successor Lt-Gen Abdel Fattah Abdelrahman Burhan. The army has said it will stay in power for two years, followed by elections.   READ FULL STORY   The Guardian                     ...

சவூதி அதிகாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுக்கு கஷோக்கி குடும்பத்தினர் மறுப்பு

Image
நீதிமன்றத்திற்கு வெளியில் சவூதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், மகன்மார் பணம் பெற்றுக் கொண்டதாகவும் வெளியான குற்றச்சாட்டுகளை, படுகொலை செய்யப்பட்ட சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் குடும்gத்தினர் நிராகரித்துள்ளனர்.  “இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. யாருடனும் எந்தக் கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை” என சாலாஹ் கஷோக்கி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் நேற்று (10) தெரிவித்தார்.  Photo Credit: Google / Washington Post சாலாஹ் உள்ளிட்ட கஷோக்கியின் பிள்ளைகள் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான டொலர்கள் அதிகாரிகளினால் வழங்கப்படுவதாகவும் அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கடந்த முதலாம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.  சவூதி அரேபிய அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, கடந்த வருடம் அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்து, சவூதியினால் அனுப்பப்பட்ட 15 பேர் கொண்ட முகவர் குழுவினரால் படுகொலை செய்யப...

பாங்கொக் வணிக வளாகத்தில் தீ விபத்து - மூவர் பலி!

Image
பாங்கொக்கிலுள்ள வணிக வளாகமொன்றில் இன்று (10) ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.  56 மாடிகளைக் கொண்ட சென்டெரா கிராண்ட் ஹோட்டல் கட்டடத்தின் எட்டாவது மாடியில், உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து, சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  குறைந்தபட்சம் ஒருவர் கட்டடத்தில் இருந்து வீழ்ந்ததனால் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  Photo Credit: thethaiger.com  குறித்த பாரிய வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.  மாலை நேரத்தில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக சம்பவ இடத்தை சென்றடைவதற்கு தீயணைப்புப் படையினர் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.  தீ விபத்தினால் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் இருவர் வைத்தியசாலையில் பலியானதாக பாங்கொக் ஆளுநர் அஸ்ஸாவின் க்வான்முவாங் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  தீ விபத்து ஏற்பட்டமைக்கான க...

பிரெக்ஸிட்டை 2020 வரை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

Image
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லையை 2020 வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது.  கடந்த மாதம் 29ஆம் திகதியுடன் முடிவடைந்த பிரெக்ஸிட்டுக்கான கால எல்லையை இம்மாதம் 12ஆம் திகதிவரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்திருந்தது.  எனினும் பிரித்தானிய பிரதமர் தெரெசா மேயின் பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஆதரவளிக்கவில்லை. இதனால் மேலுமொரு குறுகிய கால நீட்டிப்பை தெரெசா மே எதிர்பார்த்திருந்தார்.  Photo Credit: Google / BBC எனினும் குறுகிய கால நீட்டிப்பை பெற்றுக் கொள்வதற்கான தெரெசா மேயின் பேச்சுவார்த்தைகளின் மீதான நம்பிக்கையற்ற தன்மை காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பிரித்தானியாவுக்கு கால அவகாசம் வழங்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்ட் டஸ்க் எதிர்பார்த்துள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய 27 நாடுகளின் மத்தியிலும் பிரெக்ஸிட்டை நீண்டகாலத்துக்கு தாமதப்படுத்துவதற்கான ஆதரவு அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது.  இவ்வாண்டு டிசம்பர் அல்லது 2020 மார்ச் ஆகிய ...

உலகம் | அல்ஜீரிய இடைக்கால ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Image
புதிய இடைக்கால ஜனாதிபதிக்கு எதிரான போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக அல்ஜீரிய பொலிஸார் தண்ணீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.  அல்ஜீரியாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்து வந்த அப்தலசீஸ் போடேஃபிலிகா, பல வார தொடர் ஆர்ப்பாட்டங்களையடுத்து தான் பதவி விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.  Photo Credit: Google / BBC / Reuters இதனையடுத்து, நாடாளுமன்ற மேல் சபையின் சபாநாயகரான அப்தெல்காதெர் பென்சலாஹ் புதிய இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.  ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும்வரை பதவி வகிக்கவுள்ள பென்சலாஹ், தான் மக்களின் நலன்களுக்காகப் பணியாற்றவுள்ளதாகக் குறிப்பிட்டார்.  எனினும் மக்களில் பலர் இன்னும் தீவிரமான மாற்றத்தை விரும்புகின்றனர்.  “மக்களுக்கான சொல்லை கூடிய விரைவில் மீண்டும் கொண்டு வருவதற்காக உண்மையுடனும் அர்ப்பணிப்புடனும் கடுமையாக உழைப்பதற்காக இக் காலப்பகுதியில் இந் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அரசியலமைப்பை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என பதவியேற்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.  பென...

சிகரம் வலைப்பூங்கா - 03

Image
வலைப்பதிவு : கலையும் மௌனம்  பதிவு : அப்பெல்லாம் எப்படி தெரியுமா?  அப்பெல்லாம் எப்படி தெரியுமா ? அந்தகாலத்துல நாங்கெல்லாம்.., அது ஒரு காலம்யா.. என்றெல்லாம் சிலாகித்து பெரியவர்கள் தங்களுடைய "அந்தநாள்" விசயங்களை சொல்லக் கேட்டிருப்போம்.  முழுமையாக வாசிக்க Photo Credit : Google / moneyhomeblog.com வலைப்பதிவு : காளிகபாலி  பதிவு : வாசம் வீசும் நேரம்   "வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம்..." "வாசமில்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது......" வாசம், வாசனை, நறுமணம், மணம் என்றதும் உங்களுக்குச் சட்டென்று மனதில்தோன்றும் வாசம் எது?  முழுமையாக வாசிக்க வலைப்பதிவு : திண்டுக்கல் தனபாலன்  பதிவு : நல்லவர் யார்...? கெட்டவர் யார்...?  திருவள்ளுவரின் குறளும் அதற்குப் பொருத்தமான பாடல்களும் அடங்கிய பதிவு  முழுமையாகப் படிக்க வலைப்பதிவு : எங்கள் Blog  பதிவு : திங்கக்கிழமை : மோர் ரசம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி - மோர் ரசம் மோர் ரசம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கும். இந்த வ...

மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்

Image
"மலையகத் தமிழர்களுக்கும் நிலையான பெருந்தோட்டத் தொழிலும் நிலவுரிமையும் அமையுமானால் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய நிலை உருவாகும். ஆகவே அந்த நிலை உருவாகிவிடாமல் தடுப்பதில் பேரினவாதிகள் மிகக் கவனமாகவே இருக்கிறார்கள். என்றாலும் பிரச்சினை இருக்கிறது என்பதற்காக அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருக்கவும் முடியாது. மலையகத் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை குறித்து இதுவரை எந்தவொரு மலையகத் தலைவர்களும் வாய் திறக்கவில்லை."  முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்   குறிப்பு: இக்கட்டுரை என்னால் எழுதப்பட்டு சனிக்கிழமை, மார்ச் 16, 2019 ஆம் திகதிக்குரிய 'மக்கள் பத்திரிக்கை' இரு வார இதழில் வெளியான கட்டுரையாகும்.   மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்  https://sigaram2.blogspot.com/2019/04/malaiyagath-thamilargalum-suya-nirnaya-urimaiyum.html   #மலையகம் #ஈழம் #சுயநிர்ணயம் #சுயாட்சி #சம்பளப்_போராட்டம் #1000ரூபாய் #விடுதலை #உரிமை #தமிழ் #தமிழர் #அரசியல் #இலங்கை

வலைப்பதிவு வழிகாட்டி - 01

Image
வலைப்பதிவொன்றை உருவாக்குவது எப்படி? வலைப்பதிவை உருவாக்க பிளாக்கரா அல்லது வேர்ட்பிரஸ்ஸா சிறந்தது? வலைப்பதிவு உருவாக்குவது சிறந்ததா அல்லது இணையத்தளம் உருவாக்குவது சிறந்ததா? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்ல வருகிறது நமது 'வலைப்பதிவு வழிகாட்டி' தொடர்.  தமிழ் வலைத்தள உலகில் முன்னணியில் இருப்பவை இரண்டு தளங்கள் மட்டுமே. ஒன்று பிளாக்கர் (Blogger), மற்றையது வேர்ட்பிரஸ் (WordPress). எது சிறந்தது என்ற ஒப்பீட்டை மேற்கொள்வது சற்றுக் கடினம். இரண்டிலுமே நமக்கு சாதகமான அம்சங்களும் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் வேர்ட்பிரஸை விட பிளாக்கர் இலகுவானது என ஒப்பீட்டளவில் கூறலாம். பட உதவி: கூகிள் Image Credit: Google  அல்லது பிளாக்கர் ஆரம்ப நிலை வலைப்பதிவர்களுக்கானது எனவும் வேர்ட்பிரஸ் இடைநிலை வலைப்பதிவர்களுக்கானது எனவும் வரையறுக்கலாம். அத்துடன் இன்றைய நிலையில் (2019) கணினியில் பயன்படுத்த பிளாக்கர் இலகுவானதாகவும் திறன்பேசியில் பயன்படுத்த வேர்ட்பிரஸ் இலகுவானதாகவும் இருக்கிறது. பிளாக்கரின் ஆன்ட்ராய்டு செயலி 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இற்றைப் படுத்தப்படவில்லை. வேர்ட்ப...

அரசியல் | தமிழ் தேசியம் என்றால் என்ன? அது சாத்தியமா? | ராஜசங்கீதன் ஜான்

Image
கேள்வி : தமிழ் தேசியம் என்றால் என்ன? அது சாத்தியமா? அனைத்து சித்தாந்தம் பேசும் தலைவர்களும் தமிழ் தேசியம் பேச வேண்டும் என எதிர்பார்க்கப்படுவது எதனால்? சரியா? தமிழ் தேசியம், சாதி தேசியமா? தமிழ் தேசிய அரசியல் இன்றை தலைமுறை இளைஞர்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?, தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்குமா? பதில் : தமிழ் தேசியம் சாத்தியமா என கேட்டால் நிகழ்சூழலை கவனிப்பவர்களுக்கு சாத்தியமில்லை என்றுதான் தோன்றும். இந்திய அரசின் அதிகாரம், பன்னாடுகளுடனான இந்தியாவின் உறவு, உலக மூலதனத்துக்கான பெருஞ்சந்தையாக இந்தியா இருத்தல் போன்ற விஷயங்களை அவதானித்தால் தமிழ்தேசியம் சாத்தியமில்லை என்றே படும். உண்மை என்னவெனில், இந்தியா போன்ற ஒரு பெரும் அசாத்தியமே சாத்தியப்பட்டிருக்கையில், இங்கு எதுவுமே சாத்தியம் என்பதுதான். தமிழ்தேசியம் என்னும் அசாத்தியம் மட்டும் சாத்தியப்படாதா என்ன? தமிழ்தேசியத்துக்கான பலவகை கருத்தியல்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. எந்த கருத்தியலை போலவும் தமிழ்தேசியத்துக்கும் இடது, வலது உண்டு.  இடது தமிழ்தேசியத்தை கூர்மையாக்கியவர் பெரிய...

NEWS TODAY - 18-03-2019 | WORLD NEWS WIRE

Image
BBC                                                                                                  Ethiopian Airlines: 'Clear similarities' with Indonesia crash Flight data from the Ethiopian Airlines disaster a week ago suggest "clear similarities" with a crash off Indonesia last October, Ethiopia's transport minister has said. Both planes were Boeing 737 Max 8 aircraft. Last Sunday the Ethiopian Airlines jet crashed after take-off from Addis Ababa, killing all 157 people on board.  READ FULL STORY   AFP                                                          ...