Friday, December 7, 2012

சொய்............... சொய்...............

வணக்கம் அன்பு சொந்தங்களே! இன்று அண்மையில் வெளியான என் மனம் கவர்ந்த பாடல்கள் பற்றி பகிர்ந்துகொள்ளப் போகிறேன். வாருங்கள் போகலாம்.

"கும்கி" இதுதான் இன்றளவில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படப் பாடல்கள் இடம்பெற்றுள்ள திரைப்படம். 5 காதல் பாடல்கள். அத்தனையும் அழகான மெல்லிசைப் பாடல்கள். டி.இமானின் இசையில் பிரபுசாலமனின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படமே கும்கி.  நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் நடிகை லட்சுமி மேனனும் அறிமுகமாகும் திரைப்படம் இது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து வெளியிடுகின்றன.

இதுவரை கேட்டதில் இரண்டு பாடல்கள் என்னைக் கவர்ந்துள்ளன. ஒன்று சொல்லிட்டாளே அவ காதல பாடலும் மற்றையது சொய்... சொய்... பாடலும் தான். இரண்டுமே அருமையான காதல் கானங்கள். இந்த வருடத்தின் முத்தான பாடல்கள் இவைதான் என்றால் கூட மிகையில்லை. சொல்லிட்டாளே அவ காதல பாடலை ரஞ்சித் மற்றும் ஸ்ரேயா கௌஷல் ஆகியோரும் சொய்.. சொய்.. பாடலை மகிழினி மணிமாறனும் பாடியுள்ளனர்.யுகபாரதியின் பாடல் வரிகள் அருமை.

ஏனைய பாடல்கள்:
01. அய்யய்யோ..... ஆனந்தமே.....
02. நீ எப்போ புள்ள....
03. ஒன்னும் புரியல 

இப்போதைக்கு இப்பாடல்களைக் கேட்டு ரசிப்பதற்கான இணைப்பைத் தருகிறேன். நேரம் வாய்த்தால் பாடல் வரிகளுடன் சந்திப்போம்.

01. எல்லாப் பாடல்களையும் ரசிக்க.......
02. சொல்லிட்டாளே அவ காதல......
03. சொய்.... சொய்.....
04. கதாநாயகியின் நேர்காணல்.....

05. கும்கி இசை வெளியீட்டுவிழா.....
05. திரை முன்னோட்டம்.... (Trailer)
அன்புடன்,
சிகரம்பாரதி.

3 comments:


  1. வணக்கம்!

    நினவே போதும் மச்சான்!சொய்!
    நெஞ்சுள் நிலைத்த திரைப்பாடல்!
    கனவே என்று சிலநொடிகள்
    காதில் கமழ்ந்த நிறைபாடல்!
    மனமே மயங்கி நடமாட
    மதுசோ் போதை தரும்பாடல்!
    இனமே மகிழ இவ்வலையில்
    இசைத்த பாடல்! வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  2. அனைத்து பாடல்களையும் கேட்டு ரசித்தேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரொம்ப காலத்திற்குப் பிறகு இளையராஜாவின் மெலடிகள் கேட்பது போன்ற அதே உணர்வு. என் முக நூலிலும் பகிர்ந்துள்ளேன். பாடல்கள் வெளியானதிலிருந்து இதே பாடல்கள்தான் என் வீட்டில் .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?