பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 02)
அடுத்த நாளும் நண்பனுக்கு வேலை நாளாக இருந்தது. அன்றே நான் புறப்படவும் வேண்டியிருந்தது. அன்றைய தினம் எழுத்தாளர் யாழ் பாவாணன் அவர்களை சந்திக்க சென்றேன். அவரை சந்தித்த பின் அவரது நட்பு எழுத்தாளரான 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் வேலணையூர் தாஸ் அவர்களை சந்திக்க அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.
பின்னர் யாழ் பொது நூலகம் சென்றேன். பத்திரிகை வாசிப்புப் பிரிவுக்கு சென்று அன்றைய நாளிதழ்களைப் படித்தேன். இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நூலகத்திற்குள் அடியெடுத்து வைப்பதே பெருமை தரும் உணர்வாக இருந்தது.
அதன் பின்னர் யாழ் பாவாணன் அவர்கள் என்னை யாழ் பேரூந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். அங்கிருந்து எனது நண்பியின் இல்லம் அமைந்துள்ள வவுனியாவுக்கு சென்றேன். வவுனியா பேரூந்து நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் அவரது வீட்டைச் சென்றடைந்தேன்.
அன்று இரவு அங்கு தங்கினேன். தோழியின் உபசரிப்பு மிகவும் பிடித்திருந்தது. அவரும் அவரது கணவரும் நன்றாக உபசரித்தனர். தோழியின் மகனின் குறும்புகள் எனது ஒரு வயது மகளை நினைவு படுத்தின.
பள்ளிக் கதைகளும் பழைய நினைவுகளும் இழந்த வாழ்க்கையை நினைவூட்டின. அதெல்லாம் ஒரு கனாக்காலம். எந்தவொரு பொறுப்புகளும் நிர்ப்பந்தங்களும் இல்லாமல் பட்டாம்பூச்சிகளாய் பள்ளியில் சுற்றித் திரிந்த காலமெல்லாம் இனி வரப்போவதில்லை.
2018/06/15
அடுத்த நாள் இரவு வரை தோழியின் வீட்டிலேயே இருந்தேன். வெளியில் எங்கும் செல்லும் வாய்ப்பு அமையவில்லை.
இரவு முன்பதிவு செய்திருந்த புகையிரதம் மூலம் வவுனியாவில் இருந்து கொழும்புக்கு வந்தேன். இரவு நேரத் தபால் புகையிரதம் அது. அது பயணித்த வேகம் கொஞ்சம் அச்சமூட்டுவதாய் இருந்தது. புகையிரதம் காற்றில் பறப்பதைப் போன்றதொரு உணர்வு எனக்குள்.
2018/06/16
அடுத்த நாள் அதிகாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வந்திறங்கினேன். அதிகாலை 05.12 மணிக்கு புகையிரதம் கொழும்பை வந்தடைந்தது.
பின்னர் அங்கிருந்தே கொழும்பில் இருந்து பதுளை நோக்கி அதிகாலை 05.55 மணிக்குப் புறப்படும் புகையிரதம் ஊடாக எனது ஊரான கொட்டகலையை வந்தடைந்தேன்.
பின்னர் அங்கிருந்தே கொழும்பில் இருந்து பதுளை நோக்கி அதிகாலை 05.55 மணிக்குப் புறப்படும் புகையிரதம் ஊடாக எனது ஊரான கொட்டகலையை வந்தடைந்தேன்.
பின் குறிப்பு: 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி வரை நான் மேற்கொண்ட பயணங்களின் தொகுப்பே இது.
இதனை சுமார் ஒன்றரை வருடம் கழித்து உங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்பதற்கு மன்னிக்கவும். 80 வீதமான பதிவை முன்னரே எழுதிவிட்டேன். ஆனால் மீதம் 20 வீதத்தை எழுதி பூரணப்படுத்தி உங்களுக்கு வழங்க சந்தர்ப்பம் அமையாமல் போய்விட்டது.
இருந்தாலும் எனது பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்து இதனை இச்சந்தர்ப்பத்தில் உங்கள் முன் வைக்கிறேன்.
நன்றி!
பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 02)
https://newsigaram.blogspot.com/2020/02/PAYANANGAL-PALAVIDHAM-09-PART-02.html
#கொட்டகலை #கொழும்பு #யாழ்ப்பாணம் #வவுனியா #பயணம் #அனுபவம் #இலங்கை #Kotagala #Colombo #Jaffna #Vavuniya #Travel #Experience #LK #LKA #Lanka #SriLanka












ரசித்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteநல்லதொரு பயணம். தொடரட்டும் பயணங்கள்.
ReplyDeleteபயணப் பதிவுகளை எழுதுவதே தனி இன்பம் தான். தொடர்வோம் நண்பரே.
Deleteதொடரட்டும் பயணங்கள்
ReplyDelete-கில்லர்ஜி
நிச்சயமாக. பயணங்கள் முடிவதில்லையே...
Delete2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி வரை
ReplyDeleteஎன்று எழுதாமல் 2018 ஜூன் 11 முதல் 18 வரை என்று எழுதினாலே போதுமே!
பயண விவரங்கள் சிறப்பு. யாழ் நூலகத்தைத்தானே முன்பு எரித்தார்கள்?
நிச்சயமாக. அடுத்த பதிவில் இருந்து தங்கள் ஆலோசனையைக் கருத்திற் கொள்கிறேன்.
Deleteநன்றி நண்பரே.
ஆம். யாழ் நூலகம் தான் எரிக்கப்பட்டது.