Wednesday, 5 October 2016

சிகரம் பாரதி 7/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

2016.10.02

மலையகம். இலங்கையின் வஞ்சிக்கப்பட்ட மக்கள் வாழும் பூமி. தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கே போராட்டம் நடத்த வேண்டிய நிலை. இலங்கையில் மலையகத் தமிழர் , ஈழத் தமிழர் என இரு பிரிவினர் உள்ளனர். ஈழம் கடல்சார் உற்பத்திகள், தென்னை மற்றும் பனை போன்ற உற்பத்திகளுடன் விவசாயத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளது. மலையகம் தேயிலை மற்றும் மரக்கறி உற்பத்திகளில் சிறந்து விளங்குகின்றது. 200 ஆண்டுகளாய் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மலையகத்தின் தேயிலைத்துறையினூடாக பங்களிப்புச் செய்து வந்திருக்கின்றனர் இம்மலையக மக்கள்.

மலையகத்தின் பிரதான விளைபொருள் தேயிலை ஆகும். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய மலையகத் தேயிலைத் தோட்டங்களை இலங்கை  சனநாயக சோசலிசக் குடியரசு தனியாருக்கு குத்தகை என்னும் பெயரில் தாரை வார்த்தது. இதனால் மலையக மக்களுக்கு பல்வேறு உரிமைகள் பறிபோயின. முக்கியமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இலங்கை அரசினாலோ அல்லது வேறு எவரினாலுமோ தலையிட முடியாதுள்ளது. காரணம் கூட்டொப்பந்தம் ஒன்றின் மூலமே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப் படுகிறது.

2016.10.03
தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மூன்று தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையில் இரண்டு வருட காலப் பகுதிக்கான சம்பளம் கூட்டொப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கப் படுகிறது.

தோட்டத் தொழிலாளர்கள் அண்மைக்காலமாக தமது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தும்படி கோரி வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். ஆனால் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு ஒப்புக்கொள்ள மறுப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் போராட்டம் தொடர்ந்தவண்ணமுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று...

2016.10.04
இந்தியா - எதிர் - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நிறைவுக்கு வந்திருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டில் வெற்றி பெற்று இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளதுடன் டெஸ்ட் தரப்படுத்தலில் இழந்த முதலாம் இடத்தை மீண்டும் பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றை வென்று பத்து வருடங்கள் ஆகிறதாம். வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு!

2016.10.05
'வானவல்லி' - சரித்திரப் புதினம். நமது வலைத்தள நண்பர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் கருவாகி கைவண்ணத்தில் உயிராகி வெளிவந்திருக்கும் வரலாற்றுப் புதினம். தற்போது 'வானவல்லி' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நான் 'வானவல்லி'யை நம்மபுக்ஸ் என்னும் இணையத்தளத்தின் மூலம் கொள்வனவு செய்தேன். ஆனால் நூலை இலங்கைக்கு தருவிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதோ இப்போது 'வானவல்லி' என் வாசிப்பில். வானவல்லியை வாசித்துவிட்டு என்னுடைய கருத்துக்களை தவறாது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது வெற்றியின் அன்புக் கட்டளை. நண்பா.... இதோ வந்துவிட்டேன்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...