ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். வருடாவருடம் இந்த பதிவை எழுதுவதை தவிர, பாரிய மாற்றங்கள் எதுவும் இதுவரை நிகழ்ந்துவிடவில்லை. இருந்தாலும் சொல்லிவிடுகிறேன், பதினான்கு ஆண்டுகளைக் கடந்து பதினைந்தாம் ஆண்டில் காலடி பதித்திருக்கிறது நமது 'சிகரம்' !. 2006ஆம் ஆண்டில் ஆரம்பித்த பயணம். எங்கெங்கோ தடம்மாறிச் சென்றுகொண்டே இருடிக்கிறது. இலக்கை நோக்கிய பயணம் என்று சொல்லிக் கொண்டாலும், கண்ணுக்கெட்டிய தூரத்தில் இலக்கு காணப்படாதபோது எதை நோக்கிப் பயணிப்பது? பயணம் சில நேரங்களில் உற்சாகமாக இருந்தாலும், பல நேரங்களில் சலிப்பே மிஞ்சுகிறது. என்றாலும், மனதுக்குள் ஓர் குரலின் உந்துதல்! என்னை முன்னோக்கி தள்ளிக் கொண்டே இருக்கிறது. இதோ இலக்கை நோக்கி வந்துவிட்டோம் எனும் போதெல்லாம், இலக்கு ஒரு கானல் நீராக மாறிவிடுகிறது. என்றாலும், ஒரு தீராத தாகம்! வெற்றிபெற்றேயாக வேண்டும் எனும் ஏக்கம். ஆனால், அந்த வெற்றியைப் பெறுவது எப்போது என்பதை சிந்திக்கும் போதுதான்... ம்ம்ம்... அண்மையில் ' வலை ஓலை ' வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை, 43 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள...