நானறியேன்...!
உன்னைப் பார்க்கையில்
பிரமிப்பாக இருக்கிறது
சிறு குழந்தை
நீயெனக் கருதி
நான் அசரும் நேரத்தில்
நீ கூறும் வார்த்தைகள்
திடுக்கிடச் செய்கின்றன
![]() |
Image credit to its respective owners only |
மூன்று வயதில்
உன்னிடம் இருந்து
முத்து முத்தாய் வார்த்தைகள்...
மகிழ்ச்சிதான்...
ஆனாலும்,
அவை
உன் மூளையின்
இயற்கை வளர்ச்சியினாலா
என்றால்
இல்லை தானே?
திறன்பேசியும்
தொலைக் காட்சியும்
கற்றுத்தரும் மாயங்கள்
வெளிப்படுகின்றன
உன் சொற்களில்...
பெருமைப்படுவதா
கவலைப்படுவதா?
நானறியேன்...!
-----------------------------------------------------------------------------------
நானறியேன்...!
https://newsigaram.blogspot.com/2020/03/naanariyen.html
அதானே...?
ReplyDelete- என்று சொல்ல வைக்கிறது...
ஆம். நம் சமூக அமைப்பு முற்றாகவே மாறிவிட்டது.
Deleteஅலைபேசியிடமும்
ReplyDeleteதொலைக்காட்சியிடமும்
மழலைகள் முற்றாய் தங்களை இழந்துதான் விட்டார்கள்
காரணம் பெற்றோர்கள்
ஆம். அலைபேசியை மையமாகக் கொண்ட சமூக அமைப்பில் இவ்வாறான நிகழ்வுகளே இடம்பெறுகின்றன.
Deleteநல்ல கவிதை. ஆதங்கம் மட்டுமே மிச்சமாக இருக்கிறது.
ReplyDeleteநிச்சயமாக. அரசாங்கம் இவற்றை கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.
Deleteஅம்மா என்று குழந்தைகள் விளிக்கும்காலம்போய் இன்று ''சித்தி'' என்று சொல்லி முழிக்கும் காலம் வந்துவிட்டது ... இந்த தொலைக்காட்சியால் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDeleteஆம். இதனை தடுக்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் பெற்றோர்.
Deleteஉன்மைதான்.. பெற்றோரின் தவறுதான் என நினைக்கிறேன். ஏகப்பட்ட வியாபார கிருமிகள் சூழ்ந்திருக்கும் நிலையில் பெற்றாறும் என்னதான் செய்ய இயலும். நானறியேன்!
ReplyDeleteஅதேதான். பெற்றோராகிய நாங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறோம்.
Delete