Posts

டுவிட்டர் @newsigaram - 08 - பாகுபலி!

Image
# பாகுபலி படம் பார்க்கும் போது நம் பாப்கார்னை பக்கத்தில இருக்கிறவங்க எடுத்துச் சாப்பிட்டாக் கூடத் தெரியாது.! # பாயும் புலி ஓசையே பாகுபலி மாதிரி இருக்கிறது! - லிங்குசாமி நீங்க திரும்ப ஒரு ரவுண்டு வருவிங்கன்னு உள்மனசு சொல்லுது சார்... # பாகுபலி 3,நாள் ல 250 கோடி வசூல் ங்கறதை என்னால நம்ப முடியலை. ஓஹோ.நீங்க எதை நம்புவீங்ணா? புலி ஒரே நாள் ல.100 கோடின்னா நம்புவேன் # பாகுபலி ல ஹீரோ சிவலிங்கத்தைத்தூக்கிட்டு வந்ததைப்பெருசா பேசறாங்க.சாணக்யா ல சரத் நமீதாவையே தோள்ல தூக்கிட்டு அசால்ட்டா வருவாரு. # பாகுபலி பார்த்த யாரும் இந்த வருசம் செத்துறாதீக! எந்த ஆத்மாவும் சாந்தியடையாது.. # பாகுபலி பாருங்கள். எனக்கு இலங்கையும் பிரபாகரனும் மனம் முழுக்க. துரோகம் வேதனை. # # பாகுபலி -யும் # புலி -யும் ஒன்ன ரிலீஸ் ஆகி இருந்தா பாகுபலி படம் ஓடுற தியேட்டர்-ல teaser மாதிரி புலி-ய பத்து நிமிசம் ஒட்டி இருப்பானுவ! # பாகுபலி இரண்டாம் பாகம்தான் நல்லாருக்கும்னு நம்ப வச்சதுதான் இப்ப வந்துருக்கற பாகுபலியோட வெற்றி் இன்னும் என்னன்ன கிறுக்குத்தனம் பண்ணபோறீங்களோ? # நிஜமாகவே ரம்யாகி...

பெண்ணியம் என்னும் வியாபாரம்!

Image
வணக்கம் வாசகர்களே! இன்றைய காலகட்டத்தில் பெண்ணியம் குறித்து அதிகம் பேசப்படுகிறது. பல்வேறு தளங்களில் இது குறித்த விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அச்சு ஊடகத் துறையில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பெண்களுக்கான பங்களிப்பு பற்றி பேசப்படுகிறது. சிநேகிதி, அவள் விகடன், அழகி, மங்கையர் மலர் என பெண்களுக்கான இதழ்கள் அதிகம்.அண்மையில் இலங்கையின் பிரபல வார இதழான 'மித்திரன்' உடன் 'பெண்ணியம்' என்னும் இலவச இணைப்பைக் காணக் கிடைத்தது.               அதன் மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை 20. அதில் அட்டைப்படம், முழுப்பக்க விளம்பரங்கள் என 10 பக்கங்கள். வாசகர் கருத்து 1 பக்கம். "பெண்களின் நாகரீக வளர்ச்சியில் செல்பி" என்று செல்பி (Selfie) பெண்களின் வளர்ச்சியில் எவ்வாறு முக்கிய பங்கு ( ????? ) வகிக்கிறது என்பதை விளக்கும் கட்டுரை 1.5 பக்கம். குழந்தையில்லாப் பிரச்சினை தொடர்பிலான கட்டுரை 2 பக்கம். 'விளக்கேந்திய பெருமாட்டி ப்ளோரன்ஸ் நைட்டிங் கேள்' பற்றிய கட்டுரை 1.5 பக்கம். பெண்களுக்கு யோகா கலையின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை 1 பக்கம். பெ...

அது என்ன தளம்?

Image
                வணக்கம் வாசகர்களே! நீங்கள் உங்கள் வலைத்தளத்தை அல்லது இணையத் தளத்தை வடிவமைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள்? வடிவம், உள்ளடக்கம் போன்றவை தொடர்பில் எவ்வளவு சிந்தித்திருப்பீர்கள்? ஆனால் இவை எவையுமே இல்லாமல் ஒரு இணையத்தளம் உலகைக்  கலக்கிக் கொண்டிருக்கிறது. பிரத்தியேக வடிவமைப்பு இல்லை. அதுகூட பரவாயில்லை என்றால், உள்ளடக்கம் என்ற ஒன்றே இல்லை. அது என்ன தளம்?                  Most Exclusive Website என்னும் இணையத் தளமே அது. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அந்த இணையத்தளத்தின் உள்ளடக்கத்தைப் பார்வையிட முடியும். அந்த ஒருவருக்கும் 60 விநாடிகள் மட்டுமே அதாவது ஒரு நிமிடம் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அவரைத் தொடர்ந்து தொடர்ந்து இத்தளத்துடன் இணைப்பில் இருக்கும் அடுத்த நபருக்கு வாய்ப்பு வழங்கப்படும். தளத்தை மூடிவிட்டு மீண்டும் திறந்தாலோ அல்லது பக்கத்தை Refresh செய்தாலோ அல்லது இணைய இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் இணைத்தாலோ உங்...

ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் !

Image
வணக்கம் வாசகர்களே! இலங்கையில் "சிறந்த பொய்யுரைஞர்கள் 225 பேரை தேர்ந்தெடுக்கும் மாபெரும் விழா" எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதிகூடிய பொய்யுரைஞர்களை பெறும் கூட்டணி க்கு "பிரதமர்" பரிசும் வழங்கப்படும். இது என்னடா புதுசா இருக்கேன்னு பாக்குறீங்களா? அட , ஒன்னுமில்லீங்க. நாடாளுமன்றத் தேர்தலைத்தான் அப்படிச் சொன்னேன். 225 என்கிற எண்ணிக்கையை சற்று தீவிரமாக சிந்தித்திருந்தால் உங்களுக்கு உடனே பிடிபட்டிருக்கும்.              2015.06.26 ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தற்போது தொங்கு நாடாளுமன்றமே காணப்படுகின்றது. இவ்வருடம் ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி கொண்டதன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. தனது வெற்றிக்கு உதவியதன் பேரில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கினார் மைத்திரிபால. ஆயினும் பிரதமர் பதவியை ரணில் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் ஆகஸ்டில் ந...

ஆபீஸ் முதல் ரெட்டை வால் குருவி வரை...

Image
வணக்கம் வாசகர்களே! நீங்கள் நலமா? நான் நலம். நான்  இன்று பேசப்போவது எனக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பற்றி. என்ன டிவி சீரியல் பத்தியா? அட ஆமாங்க. இந்த தொலைகாட்சி தொடர்களையே விரும்பாதவன் நான். ஆனால் விதி யாரை விட்டது? என்னையும் சில தொடர்கள் கவர்ந்தன. விஜய் டிவி இன் ஆபீஸ் தொடர் அதில் முதன்மையானது. ஒரு அலுவலக சூழலை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இத்தொடர் தான் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.                கார்த்திக் , ராஜி , விஷ்ணு , லக்ஷ்மி , விஸ்வநாதன் சார் என்று ஒவ்வொரு கதா பாத்திரமும் என்னைக் கவர்ந்திருந்தது. விறுவிறுப்பாக நகர்ந்தது  கதையின் முன்பாதி. கார்த்திக் - ராஜி இன் காதலும் மோதலும் மிகவும் ரசிக்க வைத்தது. விஸ்வநாதன் சாரின் பாத்திரம் நமக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது. விஷ்ணு - லக்ஷ்மி காதல் கலகலப்பாக இருந்தது. இந்த நால்வரின் நட்பும் நல்ல நட்பைக் காட்டியது. இரண்டாம் பாதி சற்றே அறுவையாய் இருந்தது. விஷ்ணு - லக்ஷ்மி பிரிவு , கார்த்திக் - ராஜி பிரிவு , கமல் இன் வருகை இதெல்லாம் சோகம். அலுவலக ...

டுவிட்டர் @newsigaram - 07

Image
# ஆசை க்கு ஒரு பெண் குழந்தை ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை - இது பழசு . ஆசைக்கு ஒரு ஆண்ட்ராய்டு போன் சார்ஜ் க்கு ஒரு சாதா போன் - இது புதுசு # நியாயத்தை கேட்கும் / பேசும் பெண்களுக்கு இந்த சமூகம் வாயாடி என பெயர் வைத்திருக்கிறது ! # கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் தோற்றம் மறைவு வருடங்களை கூட்டிக் கழித்து பார்த்து விடைக்கேற்ப வருந்திவிட்டு நகர்கிறது மனசு!!! # ஒருவருக்கு நம்மை இப்போதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் ...... பெரும்பாலும் நம்மிடம் அவருக்கான தேவைகள் முடிந்து விட்டதாகவும் இருக்கலாம் .....! # நீ யாருக்கோ செய்த மவுன அஞ்சலியை பார்த்ததும் எனக்கும் செத்து விட தோன்றியது -தபூசங்கர் # இன்றையத் தேவைக்குப் பேனாவைத் தேடுகையில் நேற்று தேடிய பென்சில் கிடைக்கும். தேடினால் ஏதாவது கண்டிப்பாகக் கிடைக்கும். தேடுங்கள். # எது உண்மையில் தோல்வி என்றால், எமக்கு ஏற்படும் தோல்வியில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளாதது தான்!! # பேசிப் பேசியே கழிந்தன ஐம்பதாண்டுகள் பேசியவை பிழையென இனி பேசலாம் -யுகபாரதி # நண்பர் 1 : மொட்டை மாடில தூங்க போறேன்னு ஸ்டேட்டஸ் போட்டது தப்ப போச்...

விண்டோஸ் 10 வருகிறது!

Image
வணக்கம் வாசகர்களே! இதோ அதோ என்றிருந்த மைக்ரோசொப்ட் இன் விண்டோஸ் 10 ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியாகவுள்ளது. விண்டோஸ் 9, விண்டோஸ் ப்ளூ என பல்வேறு வதந்திகள் கடந்த காலங்களில் இருந்திருந்தாலும் விண்டோஸ் 10 இனை மைக்ரோசொப்ட் கடந்த வருட இறுதியில் உறுதி செய்தது. வழமைக்கு மாறாக தொழிநுட்ப முன்பார்க்கைப் பதிப்பொன்றை வெளியிட்டு மக்களின் பங்களிப்போடு விண்டோஸ் 10 உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 ஆனது விண்டோஸ் 7 மற்றும் 8 இன் குறிப்பிட்ட தரமான பதிப்புகளுக்கு முதல் வருடம் இலவசமாகக் கிடைக்கவுள்ள அதே நேரம் முதல் வருடத்தினுள் இற்றைப் படுத்தப்படும் பதிப்புகளுக்கு வாழ்நாள் சேவையினையும் வழங்கவுள்ளது. விண்டோஸ் 10 குறித்து நாம் இன்னும் பேசலாம். அதுவரை இந்த முகவரியில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்! https://www.microsoft.com/en-us/windows

அகவை பத்தில் சிகரம்!

சிகரம்   அகவை பத்து ! ஒன்பது ஆண்டுகளாய் எமக்கு  அன்பும் ஆதரவும்  அளித்த அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகள்! சிகரம்                          அனைவருக்கும் வணக்கம்! இதோ என் இலட்சியப் பயணத்தில் அடியெடுத்து வைத்து ஆண்டுகள் ஒன்பது ஓடி விட்டன. நான்காவது ஆண்டாக வலைத்தளம் மூலமாக "சிகரம் தினம்" ஐ நினைவு கூறுவதில் பெருமகிழ்ச்சி. இந்த ஒன்பது ஆண்டுகளில் கற்றதும் பெற்றதும் எண்ணிலடங்காதவை. "சிகரம்" எனக்கு மட்டுமல்ல எனது சமுதாயத்திற்கே ஒளிவிளக்காக திகழ வேண்டும் என்பதே என் அவா.                      இவ்வேளையில் "சிகரம்" கடந்து வந்த பாதையைத் தெளிவாகக் கூறும் பதிவை இங்கு பகிர விரும்புகிறேன்: அகவை ஒன்பதில் சிகரம்    இன்று முதல் புத்துணர்ச்சியோடு வீறுநடை போடத் தயாராகி விட்டது நமது "சிகரம்". வரும் "சிகரம் ஆண்டு" ஏராளமான குறிக்கோள்களைச் சுமந்து வரப்போகிறது. அத்தனை குறிக்கோள்களையும் அடைந்திட நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். முக்கியம...

கொஞ்சம் பேசுவோம்!

                 வணக்கம் வாசகர்களே! ஒரு கவலைக்குரிய விடயம் பற்றி உங்களுடன் பேச வேண்டியுள்ளது. அண்மைக்காலமாக சிறுவர்கள் , பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களே அதுவாகும்.                       அண்மையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவு பிரதேச மாணவி வித்தியா என்பவர் 10 பேர் கொண்ட கும்பலினால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். மாணவியின் உயிர்? வாழ்க்கை??                        ஆங்கில அறிஞர் ஒருவர் இப்படிச் சொல்கிறார் "நான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நான் முழு நிர்வாணமாக வீதியில் நடந்து செல்லும் சூழலில் கூட உங்களில் யாருக்கும் என்னைக் கற்பழிக்கும் உரிமை இல்...

மனமே.... மனமே.....

Image
                      வணக்கம் நண்பர்களே! மனதில் தோன்றிய சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.  முதலாவது நமது வலைத்தள நண்பர் வெற்றிவேல் அவர்களின் "வானவல்லி" புதினம் பற்றியது. வலைத்தளத்தில் வெளிவந்து பின், இடைநிறுத்தப்பட்டு முழுமையாக புத்தகமாகவே வெளியிடுகிறேன் என்று வெற்றிவேலினால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வருட துவக்கத்தில் வெளிவரவிருந்தது. என்றாலும் இன்னும் வெளியீட்டுத் திகதி உறுதிப்படுத்தப்படவில்லை. "வானவல்லி"யின் வரவுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன். கல்கியின் "பொன்னியின் செல்வன்"ஐப் போல ஒரு பெரிய வரலாற்றுப் புதினம் இது. நாளும் பொழுதும் இதனை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் வெற்றிவேல். விரைவில் "வானவல்லி சிறப்பு நேர்காணல் - உங்கள் வெற்றிவேல்" உடன் சிகரம் வலைத்தளத்தில் வெளியாகும். அடுத்தது , நான் எனது வலைத்தளத்தினை மேம்படுத்துவதற்காக பேஸ்புக் (facebook ) பக்கம் ஒன்றை ஆரம்பித்திருப்பது நீங்கள் அறிந்ததே. நான் கடந்த ஆறு மாதங்களாக வலைத்தளப் பக்க...

டுவிட்டர் @newsigaram - 06

Image
# அவ்வளவு பயங்கரமான பேய் இரவு நம் தலைமேட்டில் உள்ள விளக்குமாத்துக்கு பயப்படும்னு நினைப்பது தான் மூடநம்பிக்கை # ஒன்றை ஓகோவெனத் தூக்கிப் பிடித்து ஆடுவதும் பின் அதையே தூக்கிப் போட்டு மிதிப்பதுமே இன்றைய சமூகத்தின் இயல்பு வாழ்க்கை.... # சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பதில்கள் "ஆம்" மற்றும் "இல்லை"!! # தூக்க மாத்திரை கண்டுபிடிப்பதற்கு முன்னால் நம் முன்னோர்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்து வைத்திருந்தார்கள் அயராத உழைப்பு # பேசிக்கொண்டே இருந்தால் நம் பலவீனமும்.... மவுனமாக இருந்தால் அடுத்தவர் பலவீனமும் தெரியவரும்... # 'ஏதாவது செய்ய வேண்டும்'என நினைக்காதவர்களே இல்லை, ஆனா என்ன செய்ய வேண்டுமென்ற புரிதல் மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கிறது!   # "இத நீயா உடைச்ச?"எனக்கேட்டு குழந்தை ஆமாம் என்று உண்மையை சொன்னால் அடிக்காதீர்கள் பிறகு உண்மை பேசினால் அடிப்பார்கள் என பயந்து பொய்பேச பழகும்!   # அறிவை விட அறியாமையே நிறைய கற்றுத் தருகிறது   ...

ஏன்? ஏன்?

                      வணக்கம் வாசக நெஞ்சங்களே! மிக நீண்ட இடைவேளைக்குப் பின் - 181 நாட்களுக்குப் பின் - 6 மாதங்களுக்குப் பின் - அரை வருடத்துக்குப் பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சரி.. சரி... அரை வருசத்துக்குப் பிறகு வந்தா என்ன, ஆறு வருசத்துக்குப் பிறகு வந்தா என்ன? விசயத்த சொல்லணும். அதானே? சொல்றேன்யா....            முதலில் இனிய சித்திரைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். "சித்திரைப் புத்தாண்டு" என்று சொல்வதா, இல்லையா என்று தெரியவில்லை. முதலாவது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்கவில்லை. அடுத்து, நமது சமூக வலைத்தளப் போராளிகள் கூட இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர்.         அடுத்து, ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கார் இன் பிறந்த நாளாமே? சன் டிவி , கே டிவி லயெல்லாம் ஒரு சிறப்பு நிகழ்ச்சி கூட இல்லையே, ஏன்?             ...

மன்னிக்க வேண்டும்!

Image
மன்னிக்க வேண்டும்! எனது வலைத்தள நண்பர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர விரும்புகிறேன். ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு குறித்து facebook இல் நான் வெளியிட்ட இரு பதிவுகளைத் தொகுத்து " மாண்புமிகு முதலமைச்சர்! " என்ற தலைப்பில் "சிகரம்" வலைப்பதிவில் பதிவிட்டிருந்தேன். ஆனால் அதற்கு தீய எண்ணம் கொண்டவர்களால் தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் 51 பின்னூட்டங்கள் [ Comments ] வழங்கப்பட்டிருந்தன. சுமார் 26 மணித்தியாலங்களுக்குப் பின்னரே அதனை நான் பார்த்தேன். உடனடியாக அனைத்தையும் எனது பக்கத்தில் இருந் து நீக்கிவிட்டேன். எனது வலைத்தள நண்பர்கள் யாரேனும் இதனைக் கண்ணுற்றிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த நாசகார வேலைக்கு நான் பொறுப்பல்ல என்றாலும் மிகக் கேவலமான , தரமற்ற , தவறான வார்த்தைப் பிரயோகங்களுடனான பின்னூட்டங்கள் உங்கள் மனங்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதே என் எண்ணம். இத்தகைய நாசகார வேலையை செய்தவர்களுக்கு அதற்கான பலனை காலம் நிச்சயம் வழங்கும். சிகரம்பாரதி இதழியலாளர் / எழுத்தாளர் / ஆசிரியர் வலைப்பதிவுகள் : சிகரம், சிகரம் 3 , தூறல்கள். http://newsigara...

மாண்புமிகு முதலமைச்சர்!

Image
# சிட்டிசன் படம் பார்த்திருக்கிறீர்களா? அதன் இறுதிக்காட்சி நினைவிருக்கிறதா? அதில் மக்களுக்கு துரோகம் இழைத்த அரசியல்வாதிகளுக்கு கதாநாயகன் வழமையான முறையில் அல்லாமல் வித்தியாசமான ஒரு தண்டனையைக் கோருவார். படம் பார்க்கும் பலருக்கும் அது மிகைப்படுத்தப்பட்ட காட்சியாகவே தோன்றியிருக்கும். ஆனால் இன்று அ.இ.அ.தி.மு.க வின் தானைத் தலைவியின் வழக்கையும் அதன் தீர்ப்பை ஒட்டி தமிழகத்தில் நடைபெறும் அக்கிரமங்களையும் பார்க்கும் போது அந்தக் காட்சி மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்பது புரியும். ஜெயலலிதாவை கைது செய்யாமல் இப்படி தண்டனை வழங்கியிருந்தால் என்ன? * இந்தியாவின் எந்தவொரு தேர்தல்களிலும் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ ஆயுட்காலத்தடை. * ஊழல் பணம் மற்றும் அதன் மூலம் பெற்ற வருமானம் அதன் மூலம் பயன் பெற்றோரின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். * இந்த ஊழலில் கட்சியினர் சம்பந்தப் பட்டிருந்தால் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஊழலுக்குத் துணை போனவர்களுக்கும் ஆயுட்கால அரசியல் தடை. * இந்த ஊழலுக்கு துணை போன அரசு அதிகாரிகள், ஊழல் வழக்கை திசை திருப்ப முயன்ற போலி சாட்சிகள், வழக்கை தாமதப்...

டுவிட்டர் @newsigaram - 05

Image
# நம் காதல் முதல்காதலாக இருப்பதை விட, அதுவே கடைசிக்காதலாகவும், கடைசிவரை வரும் காதலாகவும் இருப்பது தான் ரொம்ப முக்கியம். # அன்பு வைப்பது தவறில்லை , ஆனால், அந்த அன்பிற்கு காதல் எனும் பெயர் வைப்பதுதான் தவறு என்கின்றனர் பலரும் # பார்வையற்றோர் பாட்டு பாடி உதவி கேட்டார்கள்! அப்பொழுதுதான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட காதுகேளாதோர் அதிகம் என்று # திறமைசாலி எனப் பெயர் வாங்கிய பின் திமிர்பிடித்தவர் எனப் பெயர் வாங்குவது அப்படியொன்றும் கஷ்டமில்லை # ஒரு விழிப்புணர்வு முயற்சி... # யாரேனும் ஒருவருக்காக எல்லாரையும் வரவேற்று கொண்டிருக்கிறது "மின்மயானம்"!! # பயம் என்பது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திற்கான ஒரு உடனடி சலனம் -படித்தது # சரியானவர்களை தவறான நேரத்திலும், தவறானவர்களை சரியான நேரத்திலும் அறிமுகப்படுத்தி காலம் தன் குரூர முகத்தைக் காட்டுகிறது # கெட்டவனுக்கு மட்டுமாவது கெட்டவனா இருந்தால் தான் நல்லவனுக்கு மட்டுமாவது நல்லவனா இருக்க முடியும்! # கடன் என்பது தூரத்திலிருக்கும் துன்பம் #படித்தது