பெண்ணியம் என்னும் வியாபாரம்!
வணக்கம் வாசகர்களே! இன்றைய காலகட்டத்தில் பெண்ணியம் குறித்து அதிகம் பேசப்படுகிறது. பல்வேறு தளங்களில் இது குறித்த விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அச்சு ஊடகத் துறையில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பெண்களுக்கான பங்களிப்பு பற்றி பேசப்படுகிறது. சிநேகிதி, அவள் விகடன், அழகி, மங்கையர் மலர் என பெண்களுக்கான இதழ்கள் அதிகம்.அண்மையில் இலங்கையின் பிரபல வார இதழான 'மித்திரன்' உடன் 'பெண்ணியம்' என்னும் இலவச இணைப்பைக் காணக் கிடைத்தது.
அதன் மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை 20. அதில் அட்டைப்படம், முழுப்பக்க விளம்பரங்கள் என 10 பக்கங்கள். வாசகர் கருத்து 1 பக்கம். "பெண்களின் நாகரீக வளர்ச்சியில் செல்பி" என்று செல்பி (Selfie) பெண்களின் வளர்ச்சியில் எவ்வாறு முக்கிய பங்கு ( ????? ) வகிக்கிறது என்பதை விளக்கும் கட்டுரை 1.5 பக்கம். குழந்தையில்லாப் பிரச்சினை தொடர்பிலான கட்டுரை 2 பக்கம். 'விளக்கேந்திய பெருமாட்டி ப்ளோரன்ஸ் நைட்டிங் கேள்' பற்றிய கட்டுரை 1.5 பக்கம். பெண்களுக்கு யோகா கலையின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை 1 பக்கம். பெண்களின் சமூகப் பிரச்சினைகள் மற்றும் சாதித்த பெண்கள் குறித்த கட்டுரை 2 பக்கம். காகிதத்திலான ஆபரணங்கள் பற்றிய கட்டுரை 1 பக்கம். இவ்வளவுதான் அந்தப் 'பெண்ணியம்' இதழ்.
"பெண்ணியம்" என்ற மகுடத்தைத் தாங்கி பெண்ணியம் பேசப்போவதாய்ப் புறப்பட்டிருக்கும் இவ்விதழில் பெண்ணியம் எங்கே, எத்தனை பக்கங்களில் பேசப்பட்டுள்ளது? அழகுக் குறிப்பு, சமையல் குறிப்பு, விளம்பரங்கள் - இவைதானா பெண்ணியம்? செல்பி (Selfie) எடுப்பது தான் பெண்ணியத்தை வளர்க்கிறதா? ஆபரணங்களை அணிந்தால் பெண்ணியம் மலர்ந்துவிடுமா? இந்த அச்சு ஊடகங்கள் இவைதான் பெண்ணியம் என்பதும் பெண்களும் அதற்கு அழகுக் குறிப்புகளை எழுதி அனுப்புவதுமாய்.... என்ன நடக்கிறது ஊடகத் துறையில்? பெண்ணியம் முன்னோக்கிச் செல்லாமல் பின்னோக்கி அல்லவா செல்கிறது?
இவ்வளவு காலமும் ஆண்கள் அடிமைப்படுத்துவதாய் சொல்லிவந்த பெண்கள் இன்று ஊடகங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.தங்கள் பெயர் ஒருமுறையேனும் அச்சில் வந்துவிடவேண்டும் என்றும் தானும் ஒரு 'பிரபலம்' ஆக வேண்டும் என்ற பேராசையிலும் பெண்கள் செய்யும் செயல்கள் பெண்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சமையல் கட்டிலிருந்து வெளிவரத்துடிக்கும் பெண்களுக்கு சமையல் குறிப்பு எதற்கு? விடுதலைப் பெண்களுக்கு ஊடக அடிமைத்தனம் எதற்கு?
இங்கே வியாபாரப் பொருளாகியிருப்பது பெண்ணியம் மட்டுமல்ல, பெண்களும் தான். இது போன்ற விடயங்களை உணராதவரையில் பெண்ணியத்தின் வெற்றி சந்தேகத்திற்கிடமானதே.

அவர்களே உணரவும் வேண்டும்...
ReplyDeleteஉண்மை. மிக்க நன்றி நண்பரே.
Deleteஅதுவும் சரி பாரதி்
ReplyDeleteமுதலில் பெண்ணியம் என்றால் என்ன என்று சில பெண்களுக்கே புரிவதில்லை்
ஆண் செய்வதலெல்லாம் பெண்கள் செய்வதே பெண்கள் செய்வதே பெண்ணியம் என்று ஆகிவிடாது ்
நீங்கள் சொல்வதும் மிகச்சரியே்
வாழ்த்துக்கள் பேசுவோம்
மிக்க நன்றி. பெண்களிடம் பெண்ணியம் குறித்த புரிதலை கொண்டு செல்ல நாம் இன்னும் அதிக வீச்சுடன் செயலாற்ற வேண்டி உள்ளது. பேசுவோம்.
Delete