அண்மைக்காலமாக நாம் அதிகம் கேள்விப்படுவது சிசுக்கொலைகள் பற்றிய செய்திகளாக இருக்கின்றன. பிறந்த சில மணிநேரத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தை, பிறந்த ஒரு வாரத்தில் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட குழந்தை, கிணற்றில் தள்ளிவிடப்பட்ட மூன்று வயதுக் குழந்தை என வித்தியாசமான செய்திகளை நாம் காண்கிறோம். பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்? தவறான உறவு, பொருளாதார சூழல், குடும்ப சண்டை, ஆண் - பெண் பேதம், வெள்ளை - கறுப்பு வித்தியாசம் என ஆயிரம் காரணங்களை சொல்லலாம். Image Credit: https://www.financialexpress.com or Respective Owners only. அத்துடன், தாயோ, தந்தையோ அல்லது வேறு எவருமோ காவல்துறையினரால் கைது செய்யப்படுவதுடன் அந்த செய்தி குறித்த நமது தேடலும் முடிந்து போய்விடும். மீண்டும் அடுத்த வாரம்.... கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட குழந்தை என மற்றொரு செய்தி வரும். இதற்கு என்ன தீர்வு? கொலையாளியைக் கைது செய்வதால் தீர்வு கிட்டிவிடுமா? அல்லது படங்களில் காட்டப்படுவதைப் போல கொலையாளியை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விடலாமா? ...