Posts

மரண வீதி!

Image
வணக்கம் வாசகர்களே! நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் மகிழ்ச்சியான செய்தியுடன் சந்திக்க முடியவில்லை. ஒரு விபத்து மற்றும் இரு கொலைகளால் நிகழ்ந்த மரணங்களைப் பற்றிப் பேசுவதே பதிவின் நோக்கம். முதலாவது பேரூந்து விபத்து பற்றியது. இலங்கையின் பண்டாரவளை - பூனாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பத்துப் பேர் மரணமடைந்துள்ளதுடன் இருபத்தைந்து பேர் காயமடைந்துள்ளனர். பதினாறு வயது மாணவி முதல் ஐம்பத்தைந்து வயது முதியவர் வரை பாகுபாடின்றி காலன் காவு கொண்டுள்ளான். பேரூந்தானது கடந்த நான்காம் திகதி மாலை ஏழு மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இரண்டாவது ஐந்து லட்ச ரூபாய் பணத்தை அபகரிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அடுத்தது, யாழில் இளம் பெண்ணொருவர் ஐந்து பேரினால் கடுமையான பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப் பட்டு கிணற்றில் வீசப்பட்டமையினால் மரணமடைந்துள்ளார். பெற்றோர், ஊரார் மற்றும் மகளிர் அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை ந...

கந்தசாமியும் சுந்தரமும் - 01

Image
"கந்தசாமி அண்ணே ஏன் அமைதியா உக்காந்திருக்கீங்க?" - வீட்டு முன்றலில் நாற்காலியில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்த கந்தசாமியிடம் வினவினான் சுந்தரம். "யாரு சுந்தரமா? வாப்பா... அது ஒண்ணுமில்ல, இன்னிக்கு உலக அமைதி தினமில்லையா? அதான்." - என்று குசும்பாகக் கூறினார் கந்தசாமி. "உலக அமைதி தினம் - மாகாண சபைத் தேர்தல்! ஆஹா என்ன ஒரு பொருத்தம்?" "ஆமா சுந்தரம். நானும் அத தான் யோசிச்சேன். நீயே சொல்லிட்ட." "ஆமாண்ணே யாருக்கு வாக்களிச்சீங்க?" "தேர்தல் முடிவு வரட்டும், சொல்றேன்." "ஏன் அப்படி சொல்றீங்க?" "செவுத்துக்குக் கூட காதிருக்கும். யார் காதுல சரி விழுந்தா விவகாரமாகிப் போகுமடா." "அதுவும் சரிதாண்ணே! இந்த மாகாண சபைத் தேர்தல் பத்தி என்ன நினைக்கிறீங்க?"    "ஒரு முடிவோட தான் வந்திருக்க போல?" "நம்ம என்ன முடிவெடுக்குறது? மக்கள் அவங்களோட முடிவ சொல்றதுக்கான 9 மணித்தியால கால அவகாசம் முடிஞ்சு போச்சு. நம்ம மன ஆறுதலுக்காக எதுனாச்சும் பேசலாமேன்னு தான் கேட்டேன்." ...

கற்பிழந்தவள்

Image
வணக்கம் நண்பர்களே! நான் எழுதிய கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை விரைவில் வெளியிடும் எண்ணம் தற்போது சற்றே துளிர் விட்டிருக்கிறது. எனவே, அதற்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக இதுவரை "சிகரம்" வலைத்தளத்தில் வெளியான கவிதைகளை வரிசைக்கிரமமாய் அவற்றுக்கான இணைப்புகளுடன் இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு இணைப்புகளையும் தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த முன்னோட்ட முயற்சிக்கும் சரி, வெளிவரவிருக்கும் நூலுக்கும் சரி தற்போதைக்கு "கற்பிழந்தவள்" என்றே நாமமிட்டிருக்கிறேன். சரி, அதிகம் பேசாமல் கவிதைத் தொகுதிக்குள் நுழைவோம். 01. நலம் தானா தோழர்களே? 02. வேலைக்கு போறேன்!. 03. குருவியின் பயணம் 04. நட்சத்திர நிலவுகள் 05. நீ-நான்-காதல் - 01 06. நீ-நான்-காதல் - 02 07. நீ-நான்-காதல் - 03 08. மறுபடியும் வருவேன் 09. கற்பிழந்தவள் 10. பிரிவோன்றே முடிவல்ல 11. காத்திருப்பு உங்கள் அங்கீகாரத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.பூச்செண்டோ கல்லடியோ எதற்கும் தயாராய் இருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லுங்...

நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதியா?

Image
வணக்கம் வாசகர்களே! இந்த வாரம் புதன் கிழமையன்று [2013-09-11] மாலை மூன்று மணி. எமது தொழிற்சாலையின் தேநீர் இடைவேளை. தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த தருணம். அந்த இடத்தில் தமிழன் என்ற வகையில் நான் மட்டுமே இருக்க, மீதமிருந்த நான்கு பேரும் சிங்களவர்கள். அப்போது அவ்விடத்தில் நவநீதம்பிள்ளை குறித்த பேச்சொன்று எழுந்தது.   அப்போது கருத்துரைத்த 60 வயது மதிக்கத்தக்க சக அலுவலர் கூறிய கருத்து "நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதி" என்பதாகும். மேலும் அவர் கூறுகையில் "நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதி. அதனால் தான் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். தமிழர்களுக்கு அரசு எத்தனை சலுகைகளை வழங்கியுள்ளது? சொகுசு பேரூந்துகள், தொலைக்காட்சித் திரையுடன் கூடிய புகையிரதம், பாதை, கல்வி என பல விடயங்களை அரசு வழங்கி வருகிறது. புலிகள் காலத்தில் கஷ்டப்பட்ட மக்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள். இவ்வளவு செய்தும் மக்கள் ஏன் நவநீதம்பிள்ளைக்கு ஆதரவாக பேசுகிறார்கள்? மக்கள் இன்னும் உண்மையை உணராதவர்களாக உள்ளனர்." - என்று குறிப்பிட்டா...

புகையிரதப் பேரூந்து

Image
  வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். மேலேயுள்ள புகைப்படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? இரண்டு பேரூந்துகளை ஒன்றிணைத்து புகையிரதமாக்கியுள்ள புதுமையே அது. ஆம், இலங்கையின் "மதவாச்சி" என்னும் இடத்திலிருந்து "மடு றோட்" என்னும் இடத்திற்கே இப் புகையிரதப் பேரூந்து பயணிக்கிறது. மதவாச்சியிலிருந்து புறப்பட்டு செட்டிகுளம் வழியாக மடு றோட் நோக்கிப் பயணிக்கிறது. புறப்படும் இடம், நிறுத்துமிடம் அடங்கலாக மொத்தமே மூன்று தரிப்பிடங்கள் மட்டுமே.     மே  மாதம் 14 ஆம் திகதி, 2013 இலேயே இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 45 கி.மீ தூரம் கொண்ட பயணப் பாதைக்கான பயணக்கட்டணம் ரூ 45 மட்டுமே. மணிக்கு 90 கி.மீ என்ற வேகத்தில் "புகையிரதப் பேரூந்து" பயணிக்கிறது.  புகையிரதப் பேரூந்தின் உட்புறம்  தற்போது அப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவையான போக்குவரத்துத் தேவையினை இது பூர்த்தி செய்து வருகிறது. ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் வீதம் மதவாச்சி மற்றும் மடு வில் இருந்து செயற்படுகிறது. புதிதாக அமைக்கப் பட்டுள்ள இந்த புகையிரதப் பாதையானது ...

தேன் கிண்ணம் - பாரப்பா பழனியப்பா.......

Image
அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். எத்தனை தான் புதிது புதிதாக பாடல்கள் வந்து கொண்டே இருந்தாலும் பழைய பாடல்கள் என்றால் அதற்கு நிகர் சொல்ல ஏதுமில்லை. ஆனாலும் புதிய பாடல்களிலும் பல அருமையான பாடல்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. நீங்கள் எப்படியோ நான் அறியேன். ஆனால் நான் பழைய பாடல்களின் பரம ரசிகன். இந்தப் பதிவானது தமிழ்த் திரைப்படப் பாடல்களை ஒரு கருப்பொருளின் அடிப்படையில் தேடிப்பார்க்கும் ஒரு பதிவாகும். கருப்பொருளாக பின்வரும் பாடலடிகளில் இருந்து ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. "பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் ஊரப்பா பெரியதப்பா..... உள்ளம் தான் சிறியதப்பா...... ஊரப்பா பெரியதப்பா..... உள்ளம் தான் சிறியதப்பா......"                                                                                   ...

காத்திருப்பு!

Image
பள்ளிக்கூடம் போகணும் பாதை சரியில்லே குண்டும் குழியுமாயிருக்கு குதிரையோடிய தடமிருக்கு கல்விக்கு வழியில்லே கவனிக்க யாருமில்லே அமைச்சர் சாமிகளெல்லாம் அருளும் குடுக்கலே ஐயா கனவான்களே ஐயமின்றி நம்புங்களே பாதையை செஞ்சித்தாங்க - விழி பார்த்திருக்கேன் நானுங்க! குறிப்பு: கவிதை எழுதப்பட்டது - 2010.05.30 பாதை சீரின்மை காரணமாக கல்வி கேள்விக் குறியாகிப் போன ஒரு பிஞ்சு உள்ளத்தின் குமுறலாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிக்கு, அன்புடன், சிகரம்பாரதி.

ஒரு கனவு நனவாகிறது.

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! ஒரு குறுகிய பதிவொன்றினூடாக எனது வலைத்தள மீள் பிரவேசத்திற்கு அடியிட்டுச் செல்ல வந்திருக்கிறேன்.   2013.09.01 ஞாயிறன்று எனக்கான மடிக்கணினியை இலங்கை ரூபாய் மதிப்பில் 86000 க்கு கொள்வனவு செய்துள்ளேன். இதன் மூலம் தொடர்ந்து வலைப்பதிவுகளை இடவும் நண்பர்களின் தளங்களுக்கு கருத்துரை இடவும் வசதியாக அமையும். இதற்காகவே இத்தனை நாள் காத்திருந்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மாதாந்த தவணை முறையில் தான் கொள்வனவு செய்துள்ளேன். கட்டணத்தை முழுமையாக செலுத்தி முடிக்கும் வரை திருப்திப் பட்டுக் கொள்ள இயலாது என்றாலும் முழுமையாக செலுத்தி முடிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, இனி தொடர்ந்து என்னிடமிருந்து நீங்கள் பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்பதை கூறிக் கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுவது, சிகரம்பாரதி.

சாதனைகளும் சோதனைகளும்......

Image
அன்பார்ந்த வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நேற்று நீண்ட நாட்களுக்குப் பின் பதிவிட்ட போது நீங்கள் தந்த உற்சாக வரவேற்பு என்னை இன்றும் பதிவுலகின் பக்கம் அழைத்து வந்திருக்கிறது. நேற்று நான் ஊடகப்  பாதையில் பயணிக்க ஆரம்பித்து 7 வருடங்கள் பூர்த்தி ஆனதையிட்டு பதிவிட்டிருந்தேன். அதன் போது குறிப்பிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த இன்னுமொரு மைல்கல்லை மறந்துவிட்டேன். இந்த "சிகரம்" வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் கடந்த மே மாதம் இரண்டாம் திகதியோடு பூர்த்தி ஆகியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவும் ஆசிகளும் எனக்குத் தேவை. மனதில் எத்தனை எத்தனையோ ஆசைகளும் கனவுகளும்.... அத்தனையையும் நிறைவேற்ற எண்ணினால் திரும்பும் பக்கமெல்லாம் சிக்கல்கள். சிக்கல்களைத் தீர்த்துவிட்டு நிமிர்ந்தால் காலம் எல்லை கடந்து விட்டிருக்கும். எதிர்காலத்தை நினைத்தால் மலைப்பாகத் தான் இருக்கிறது. ஆனால் எதனையும் விட்டுவிட முடியாது. போராடவேண்டும். போராடலாம்..... எத்தனை காலத்திற்கு? மாற்றுத் திறனாளிகளே எவ்வளவோ சாதிக்கும் போது நம்மால் முடியாதா என்ன? அதுவும் உங்களைப் போன்றோர் துணையிருக்கும் ப...

அகவை எட்டில் தடம் பதிக்கும் "சிகரம்" !

Image
"சிகரம்"  வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் சிகரம்பாரதியின் பணிவான மற்றும் அன்பான வணக்கங்கள் உரித்தாகட்டும். பொருளாதார சிக்கல் மற்றும் பல காரணிகள் காரணமாக வலைத்தளத்தினை இடைவிடாது நடாத்திச் செல்ல இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். இந்த 2013 ஆம் ஆண்டுக்கு இது தான் இரண்டாவது பதிவு. அதுவும் முக்கியமான பதிவு. இதே போன்றதொரு ஜூன் - முதலாம் நாளில் தான் எனது சுய முயற்சியில் உருவான "சிகரம்" கையெழுத்துச் சஞ்சிகை ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் வெளியானது. இந்த வலைத்தளம் உருவாகவும் அதுதான் அடிப்படை. ஆகவே "சிகரம்" அகவை ஏழினை நிறைவு செய்து அகவை எட்டில் கால் பதிக்கிறது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் இங்கு கூற விழைகிறேன். அந்த நாளை நினைவு கூர்வதில் உள்ள மகிழ்ச்சியே தனிதான். இதே நாளில் "சிகரம்" வலைத்தளத்தில் கடந்த வருடம் நான் இட்ட பதிவு இதோ: அகவை ஏழில் தடம் பதிக்கும் 'சிகரம்' அந்த பதிவில் நான் முக்கியமான தவறொன்றை இழைத்திருப்பதை நான் தற்போது தான் அவதானித்தேன். பாடசாலைக் காலத்தில் சரியாக 100 இதழ்களை கையெழுத்திலேயே தயாரித்து வெளியிட்டிருந்தேன். "சிகரம...

அன்புடன் பாரதி!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! அனைவரும் நலமா? என்னடா இது, பாரதிய இவ்ளோ நாளா காணோமேன்னு நீங்கல்லாம் தேடிருப்பீங்க. எனது நிதிநிலைமை அதல பாதாளத்தில் வீழ்ந்ததனால் என்னால் வலைப்பதிவுக்கு வரமுடியாது போய்விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன். நண்பன் ஒருவனுக்கு உதவி செய்யப் போனதால் தான் எனக்கு இவ்வளவு கஷ்டமும் வேதனையும் வந்து சேர்ந்தது. பணம் இன்று வரும், நாளை போகும். ஆனால் நமது மனிதத் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா? அதனை அந்த நண்பர் செய்யத் தவறிவிட்டார். பரவாயில்லை. காலம் தன் கடமையைச் செய்யும். அதுவரை நலம் வாழ வாழ்த்துக்கள். இந்தப் பதிவை நான் ஒரு கணினி மையத்தில் (Net Cafe) தட்டச்சு செய்து கொண்டிருக்கும் தருணத்தில் கணினி மையத்திற்கு அருகில் வாகன விபத்தொன்று இடம்பெற்றது. முச்சக்கர வண்டியொன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதிக் கொண்டன. யார் மீது தவறென்பதை விட வாகனங்களிலும் பாதையிலும் பயணிக்கும் பாதசாரிகளின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனால் நாம் இதற்காக "இனி வாகனங்களில் பயணிக்க மாட்டேன்" என்று சபதம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நம் பயணத்தை நம் பாட்டில் தொடரத்தான்...

போய்வா நண்பனே.....!

Image
வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இது. இந்த ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திருக்கும். ஒருவாறு உலக அழிவுப் பீதி ஒழிந்துவிட்டது. அப்படியும் அதை விடாமல் 2017 ஜனவரி 01 அன்று உலகம் அழியும் எனக் கூறிக் கொண்டு ஒரு குழு புறப்பட்டிருப்பதாகத் தகவல். வேணா... விட்டுருங்க...... உலகம் அழுதுரும்..... என்னளவில் மத்திம பலன்களைத் தந்த வருடம் இது. எண்ணியதில் நடக்காமல் போனவை பல, நடந்தவை சில. வழமைக்கு மாறாக ஆண்டிறுதி சிக்கல் தருவதாக அமைந்து விட்டது. வலைத்தளத்திற்கு மீள் அறிமுகம் தந்து உள்நுழைந்த போது ஆரோக்கியமான முன்னேற்றம் இவ்வருடத்தில் கிட்டியுள்ளது. வலைத்தளம் பல புதிய நண்பர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இன்னும் இனிக்கும் நினைவுகளும் கசக்கும் தருணங்களும் மனதில் முகம் காட்டிச் செல்கின்றன. இந்த ஆண்டு எனக்கு சில பாடங்களையும் கற்பித்துச் சென்றிருக்கிறது. சற்றே பயத்துடன் 2013 ஐ வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த வருடத்தைப் போலவே அடுத்த வருடத்தின் மீதும் பலநூறு எதிர்பார்ப்புகள். எவை எவை நனவாகும் எ...

உங்களுடன் சில நிமிடங்கள்.....!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே. நலமா? நலம் வாழ வாழ்த்துக்கள். கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நமது தொடர் பதிவை ஆரம்பித்தோம். கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 40 பதிவுகள். 46 பதிவுகளை இடுவதாக இருந்தபோதும் 40 பதிவுகளை மட்டுமே இட முடிந்தது. கிட்டத்தட்ட நினைத்ததை முடித்துவிட்ட திருப்தி. தொடர் பதிவுக்கான நிறைவுப் பதிவாக இது அமைகிறது. இத்தொடர் பதிவு எனக்கு பல அனுகூலங்களை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. சில தரப்படுத்தல்களில் முன்னேற்றம் கண்டிருக்கிறேன். தரப்படுத்தல்களுக்காக எழுதவில்லை என்றாலும் அதனூடான முன்னேற்றத்தில் மனதோரமாய் ஒரு மகிழ்ச்சி. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. புதிய நண்பர்களை "சிகரம்" தளத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன். எனது இரு பதிவுகள் 4tamil media என்கிற இணையத்தளத்தில் மறுபிரசுரம் கண்டிருக்கின்றன. அத்தளத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இரு பதிவுகளும் அத்தளத்தின் இணைப்புடன் இங்கே: 01. எனது பதிவு: எதிரே மின்னஞ்சல் திருடர்கள் கவனம்! - இணையம் ஒரு தகவல்  4tamil media தளத்தில்: எதிரே மின்னஞ்சல் திருடர்கள்! பாதுகாப்பான இணையப் பாவன...

வாசிக்க.... நேசிக்க.....

Image
வணக்கம் வாசகர்களே. இன்றைய பதிவில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் இன்று நான் பார்த்த தளங்களில் எனக்குப் பிடித்த பதிவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். முடிந்தால் சென்று பார்த்து அங்கும் கருத்துரையுங்கள். 01. பாரதியும் சூப்பர் ஸ்டாரும் - கவிதை. தளம்: தீதும் நன்றும் பிறர் தர வாரா. 02. உங்களால் முடியும்! என்னால் முடியாது!! (நகைச்சுவை) - நகைச்சுவைப் பதிவு. தளம்: அருணா செல்வம்  03. உலகம் அழியப்போகுதாம்! பயமா இருக்கு! - உரைநடைப் பதிவு. தளம்: நினைவில் சில.... கனவுகள்! 04. மாற்றுத் திறனாளிகள் - கட்டுரை  தளம்: வெங்கட் நாகராஜ்  இன்னிக்கு இது போதும். (இன்னும் வேணும்னாலும் நா இவ்ளோ தான் வாசிச்சேன்.) மீண்டும் சந்திப்போம். (மீண்டுமா? :) ) அன்புடன், சிகரம்பாரதி.

டுவிட்டர் @newsigaram

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே. இன்று நான் ரசித்த சில ட்வீட்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். படித்து ரசியுங்கள். பிடித்தவர்கள் என்னைப் பின் தொடருங்கள். @#  காபியின் சுவைக்கு சிக்கரி கலப்பது போல்தான்...வாழ்க்கைக்கு கடவுள்...#புதுமைப்பித்தன் @#  உண்மையான பயணிக்குத் தான் எங்குச் செல்கிறோமென்று தெரியாது#காலச்சுவடு @#  7+8=ஏழெட்டு... 8+7=????:-) @#  சிறை அறையிலிருந்து தூக்கு மேடைக்கு அழைத்து செல்லும் பொழுதே கண்களை மூடி விடுவார்கள் # படித்தது! @#  புள்ளியை மிக சிறிய வட்டமென்போர் வட்டத்தை பெரிய புள்ளி என்றும் ஒப்புக்கொள்ள வேண்டும் @#  புனிதர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள்.,அவர்களுக்கு தெரியவில்லை அவர்கள் கை பட்டதும்தான் அவை கல்லாகின என்று ! @#  காதலுக்கு நேர்ந்து விட்ட ஆடு நான். கண்களெனும் கத்தி ஏந்தி காத்து நிற்கும் கடவுள் நீ @#  யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். @#  அம்மாவின் சந்தோஷம் துக்கம் இரண்டிலும் என் மீது எறியப்படும் வார்த்தைகள்..ஏன்டா என் வயித்துல பொறந்து தொ...