அன்புடன் பாரதி!
வணக்கம் வலைத்தள வாசகர்களே! அனைவரும் நலமா? என்னடா இது, பாரதிய இவ்ளோ நாளா காணோமேன்னு நீங்கல்லாம் தேடிருப்பீங்க. எனது நிதிநிலைமை அதல பாதாளத்தில் வீழ்ந்ததனால் என்னால் வலைப்பதிவுக்கு வரமுடியாது போய்விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன். நண்பன் ஒருவனுக்கு உதவி செய்யப் போனதால் தான் எனக்கு இவ்வளவு கஷ்டமும் வேதனையும் வந்து சேர்ந்தது. பணம் இன்று வரும், நாளை போகும். ஆனால் நமது மனிதத் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா? அதனை அந்த நண்பர் செய்யத் தவறிவிட்டார். பரவாயில்லை. காலம் தன் கடமையைச் செய்யும். அதுவரை நலம் வாழ வாழ்த்துக்கள்.

இந்தப் பதிவை நான் ஒரு கணினி மையத்தில் (Net Cafe) தட்டச்சு செய்து கொண்டிருக்கும் தருணத்தில் கணினி மையத்திற்கு அருகில் வாகன விபத்தொன்று இடம்பெற்றது. முச்சக்கர வண்டியொன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதிக் கொண்டன. யார் மீது தவறென்பதை விட வாகனங்களிலும் பாதையிலும் பயணிக்கும் பாதசாரிகளின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனால் நாம் இதற்காக "இனி வாகனங்களில் பயணிக்க மாட்டேன்" என்று சபதம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நம் பயணத்தை நம் பாட்டில் தொடரத்தான் போகிறோம். இரண்டு நாட்களுக்கு மட்டும் வீதியில் எச்சரிக்கையாய் பயணிப்போம். மூன்றாம் நாள் எதையும் கணக்கெடுக்கப் போவதில்லை. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்?
நம் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் சோதனைகள் வந்தாலும் நம்மோடு தோள் கொடுத்து நிற்க யாரேனும் இருந்தால் நம்முடைய வாழ்க்கை என்றுமே சிறப்பாக அமையும். ஏதாச்சும் சொல்லனும்னு தோணிச்சு. அதான் இத சொன்னேன். இனி அடிக்கடி சந்திப்போம். வணக்கம் உள்ளங்களே!
// இரண்டு நாட்களுக்கு மட்டும் வீதியில் எச்சரிக்கையாய் பயணிப்போம். மூன்றாம் நாள் எதையும் கணக்கெடுக்கப் போவதில்லை. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்?//
ReplyDeleteஉண்மை.சாலையில் விபத்தை பார்க்கும்போது அடுத்த நாள் ஹெல்மெட் போட்டு செல்வேன். இரண்டு கழித்து எப்பவும் போல் தான் பயணம்.
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. உண்மையை தானா ஒத்துக்கிட்டீங்களே? நம்முடைய இயல்பு அதுதான் என்றாலும் மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லவா? சந்திப்போம் நண்பரே!
Deleteஎந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இருந்தால், வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையும்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
வாங்க திண்டுக்கல் தனபாலன் அவர்களே. உண்மைதான். ஆனால் எதிர்பார்ப்ப்புகளை உதறித் தள்ள முடியவில்லையே? வாழ்த்துக்களுக்கு நன்றி. சந்திப்போம் உள்ளமே.
Delete//நம் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் சோதனைகள் வந்தாலும் நம்மோடு தோள் கொடுத்து நிற்க யாரேனும் இருந்தால் நம்முடைய வாழ்க்கை என்றுமே சிறப்பாக அமையும். //
ReplyDeleteஉண்மை நண்பரே... சிறப்புடன் தொடர வாழ்த்துகள்.
நன்றி நண்பரே. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
Delete//நம் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் சோதனைகள் வந்தாலும் நம்மோடு தோள் கொடுத்து நிற்க யாரேனும் இருந்தால் நம்முடைய வாழ்க்கை என்றுமே சிறப்பாக அமையும்.
ReplyDelete//
100% true
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி உள்ளமே!
DeleteNanban meendu(m) vanthathil mahizhchi... Nanum viraivil vanthuviduven ena nambugiren... Santhippom viraivil...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநம் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் சோதனைகள் வந்தாலும் நம்மோடு தோள் கொடுத்து நிற்க யாரேனும் இருந்தால் நம்முடைய வாழ்க்கை என்றுமே சிறப்பாக அமையும்.
ReplyDeleteசிறப்பான ஆக்கம் ..பாராட்டுக்கள்..
நமக்கு நாம் தான் பாரதி இறுதித்துணை.இறுகப்பற்றிக்கொள்ளுங்கள் உங்களை.வாழ்த்துக்கள் பாரதி.சந்திப்போம்.
ReplyDelete