சிகரம் பாரதி - 42 / 50 - கடைசித் தமிழன் ( கவிதை )

தமிழ் மொழியின்
தலைமகன்
தாய்மொழியை
தனக்குச் சுமையென்று
முதியோர் இல்லத்தில்
மூத்த குடிமக்களுடன்
மிகுதிக் காலத்தைக்
கழித்திருக்கட்டும்
என்றெண்ணி
விண்ணப்பப் படிவத்தில்
கையொப்பமிட்டுவிட்டு
'தேங்க்ஸ்' என்று
கைகுலுக்கிப் பிரிந்தான்
கடைசித் தமிழன்
விக்கித்து நின்றாள்
தமிழ்த்தாய்!

- இக்கவிதை டிசம்பர் 2016 இல் என்னால் எழுதப்பட்டது.


Comments

  1. தமிழை தன் உயிரே போல் போற்றும் தமிழர்கள் இன்னும் மீதம் இருக்கத்தான் செய்கிறார்கள்
    இருப்பினும் தங்களின் உள்ளக் குமுறலை உணர முடிகிறது

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete

  3. அருமையான வரிகள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்