காத்திருப்பு!
பள்ளிக்கூடம் போகணும்
பாதை சரியில்லே
கல்விக்கு வழியில்லே
கவனிக்க யாருமில்லே
அமைச்சர் சாமிகளெல்லாம்
அருளும் குடுக்கலே
ஐயா கனவான்களே
ஐயமின்றி நம்புங்களே
பாதையை செஞ்சித்தாங்க - விழி
பார்த்திருக்கேன் நானுங்க!
குறிப்பு: கவிதை எழுதப்பட்டது - 2010.05.30
பாதை சீரின்மை காரணமாக கல்வி கேள்விக்
குறியாகிப் போன ஒரு பிஞ்சு உள்ளத்தின் குமுறலாக
இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
அன்புடன்,
சிகரம்பாரதி.
ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்குப் பின்னும்
ReplyDeleteஅதே நிலை தொடருகிறது எனில்
கஷ்டம்தான்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இது தான் இலங்கை மலையக தமிழ் மக்களின் (தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்) நிலை.
Deleteகவலைப்பட வேண்டிய தகவல்...
ReplyDeleteவணக்கம் தனபாலன். இது வெறும் தகவலாக மட்டுமே இருந்து விடக் கூடாது. எதிர்கால சந்ததிக்கேனும் நன்மை கிட்ட ஆவண செய்ய வேண்டும். வருகைக்கு நன்றி.
Deleteஐநா சபையின் பார்வைக்கு அனுப்புங்க பாரதிஜி !விமோசனம் பிறக்கட்டும் !
ReplyDeleteபுதியவரின் வருகை நல்வரவாகட்டும். ஐ.நா சபையெல்லாம் தேவையில்லை. நம்ம ஊர் அரசியல் வாதிகள் உணர்ந்தாலே போதும். சந்திப்போம் நண்பரே.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
தேர்தல் வரும்போது கவனத்தில் வைத்தால் சரி அரசில் வாதிகளின் அசமந்தப் போக்கு......மக்கள் வீதியில் இறங்கி போராடவேண்டும்
அருமையான தகவலை கவிதையாக புனைந்த விதம் அருமை வாழ்த்துக்கள்
சகோதரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் சகோதரி அல்ல. சகோதரன். போலி அரசியலை என்று எதிர்த்துப் போராடுகிறார்களோ அன்று தான் மக்களுக்கு உண்மையான விடிவு. சந்திப்போம்.
Deleteஅழகான கவிதை பாரதி...
ReplyDeleteஇன்றும் அதே நிலை என்பதில் வருத்தம தான்... அழகான வரிகள்... பாராட்டுகள்...
வணக்கம் வெற்றி. வெற்றியோட வாழ்த்து இல்லாமப் போயிடுமா என்ன? வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழா.
Deleteஉண்மையைப் படம்பிடித்துக் காட்டியது கவிதை.
ReplyDeleteஅன்பான வருகைக்கும் அழகான ரசனைக்கும் நன்றி தோழா. மீண்டும் சந்திப்போம்.
Deleteஉண்மையை நயம்பட உரைத்திருக்கிரீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நூல் வெளியிட