Nokia 5 திறன்பேசிக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 மேம்படுத்தல்!
Nokia 5 திறன்பேசிக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 மேம்படுத்தலை HMD குளோபல் நிறுவனம் அதிரடியாக இவ்வாரம் வழங்கியிருக்கிறது. கடந்த 2017இல் HMD குளோபல் நிறுவனத்துடன் கைகோர்த்து திறன்பேசிச் சந்தையில் தனது மீள்வருகையைப் பதிவு செய்தது நோக்கியா. 2017 நடுப்பகுதியில் Nokia 5, Nokia 6 மற்றும் Nokia 8 திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
நோக்கியா திறன்பேசிகள் ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட் இயங்குதளத்துடன் விற்பனைக்கு வந்திருந்தன. 2 வருட மேம்படுத்தல் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2017 நவம்பரில் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்திற்கு நோக்கியா 8 (Nokia 8) திறன்பேசி மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து Nokia 5, Nokia 6 திறன்பேசிகளும் 2018 ஜனவரியில் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்கு தளத்திற்கு மேம்படுத்தப்பட்டன.
2018 பிப்ரவரியில் Nokia 8 திறன்பேசி ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்திற்கு மேம்படுத்தப்பட்டது. எல்லாவற்றையும் முன்னறிவிப்போடு செய்த நோக்கியா இப்போது அதிரடியாக Nokia 5, Nokia 6 திறன்பேசிகளுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதள மேம்பாட்டை வழங்கி அசத்தியிருக்கிறது.
நோக்கியா இயங்குதள மேம்பாட்டை மட்டுமன்றி கூகுளின் மாதாந்த பாதுகாப்பு மேம்பாட்டையும் தவறாது வழங்கி வருகிறது. ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்திற்கும் 8.1 இயங்குதளத்திற்கும் தோற்ற ரீதியாக பாரிய வேறுபாடு இல்லையென்றாலும் இயங்குதள திறன் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
தற்போது ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் P பரீட்சார்த்த நிலையில் கூகிளினால் சோதிக்கப்பட்டு வருகிறது. 2019 ஜனவரி அளவில் நோக்கியா திறன்பேசிகளுக்கு ஆண்ட்ராய்டு 9.0 P நிச்சயம் கிடைத்துவிடும்!
தகவலுக்கு நன்றி.
ReplyDelete