சிகரம் டுவிட்டர் - 01
#தூளியிலிட்டுப்பாடி ஆட்டினால் குழந்தை தூங்கிவிடும் என்பது... ‘உத்தர’வாதம்!
#தனிமனிதனால்
எதையும் சாதித்து விட முடியாது என்ற எண்ணம் காலங்காலமாக நம்மிடம் உள்ளது,
ஆனால் இது முழுப் பொய். இன்று எல்லா சாதனைகளும் வளர்ச்சிகளும் ஏதோ ஒரு தனி
மனிதனின் ஆசையும் போராட்டமும் தான்.
#முயன்றால்முடியும்.
#குறைகளை சுட்டி காட்டும் போது
வார்த்தைகள் சுடுவதில்லை.
ஆனால் குத்தி காட்டும்போதுதான்
மனமே காயங்களால் நிலை குலைந்து போய்விடுகிறது.
#கூகுளில் தேடுவதை விட சிரமமானது,
கூட்டத்தில் விட்ட நம் செருப்பை தேடுவது.! - சப்பாணி - @manipmp
#எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை, ஆனால் அதை யாரிடமும் கற்றுக்கொள்ள முடியாது.! - முகிலன் - @MJ_twets
#"இது உங்களுக்கு புரியாது" என பேரகுழந்தைகள் தாத்தா/பாட்டியிடம் கூறுவதில் வளர்ந்திருக்கிறது அறிவியல்..!
#அறிவியல் #கால_மாற்றம்
#வரதட்சணை வேண்டாமென்று கூறி பெண் பார்க்கச் சொல்லும் ஆண்கள் பலர் வந்துவிட்டனர். 👏
ஆனால், பண வசதி இல்லாத ஆண்களை மணமுடித்து வைக்க பெண் வீட்டார்கள் தயாராக இல்லை.. 😌😌
#நீ சுத்த ஏமாளி.
உன்னை அழகுபடுத்திக்கொள்ள
நீ விலை கொடுத்து வாங்கிய
எல்லாப் பொருட்களுமே
உன்னைக்கொண்டு
தங்களை
அழகுபடுத்திக்கொள்கின்றன!
#என்னவளே
#குறுக்கு வழிகள் அனைத்தையும் முயற்சி செய்து அதில் தோற்றபின் கடைசியில் நேர்மையான வழிக்கு வருவதே பலருக்கு வாடிக்கையாகிவிட்டது...
#உண்மை
#பெண்ணே!
நான்
பார்க்கும் போதெல்லாம்...
நீ...!
'கேள்விக் குறி'யாக
நிற்கும் வரை...
என் வாழ்க்கை
'ஆச்சிரியக் குறி'யாக
மாறப் போவதில்லை....
சிகரம் டுவிட்டர் - 01
பதிவு : சிகரம்
#சிகரம் #டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்