சிகரம் பாரதி 44 / 50
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இதோ 2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். நாம் நினைத்ததில் இந்த ஆண்டு நடந்தது எத்தனை, நடக்காதது எத்தனையோ? வரும் ஆண்டாவது நமது வாழ்வில் ஒளியேற்றும் என நம்பியிருப்போமாக.
'சிகரம்' இணையத்தளத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இணையத்தள வடிவமைப்பாளர் ஒருவரை சந்தித்து அவரிடம் பணியை ஒப்படைத்துள்ளேன். ஜனவரியில் 'சிகரம்' இணையத்தளத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களும் பங்களிக்கும் வகையில் இணையத்தளம் அமையவுள்ளது. பேஸ்புக் போன்றதொரு சமூக வலைத்தளமாக வடிவமைக்க வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் அதற்கான முதலீடு மிக அதிகம் என்பதால் எளிமையான வடிவமைப்பில் அதே நேரம் நண்பர்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்கும் வகையில் 'சிகரம்' உங்களை நாடி வரவுள்ளது. உங்கள் அனைவரினதும் மேலான ஆதரவைத் தருவீர்கள் என்னும் நம்பிக்கையில் களம் புகுகின்றேன். வெற்றித் திலகமிடுங்கள்!
சிறப்பாக அமைய வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteகாத்திருக்கிறோம்