சிகரம் பாரதி 24 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்! தீபாவளித் திருநாளான சனிக்கிழமையும் தொடர்ந்த ஞாயிறுமாக இரண்டு விடுமுறை நாட்களுக்குப் பின் ஒரு வேலை நாளை நிறைவு செய்து விட்டு வந்திருக்கிறேன். நாளை முதலாம் திகதி. எனது வேலைத் தளத்தில் மாதாந்த இருப்புக் கணக்கெடுப்பு நாள். காலை முதல் மதியம் வரை நீளும் கணக்கெடுப்புச் செயற்பாடு தலைவலியை வரவழைத்துவிடும். காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் வேறு தன் பங்கிற்கு தலைவலியை இன்னமும் அதிகப்படுத்தும். தினசரி வேலை, பின்பு வீடு என்று ஒரே சுழற்சியில் இயங்கிக் கொண்டிருப்பது மனதளவில் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஐந்து வருடங்கள் கடந்து ஆறாவது வருடமாக ஒரே வேலையில் நிலைத்திருக்கிறேன். தற்போதைய வருமானத்திற்கு குடும்பச் செலவுகள் பழக்கப்பட்டுவிட்டதால் வேறு வேலையும் தேட முடியாத நிலை. கல்வியும் இடை நடுவில். க.பொ.த உயர்தரம் ( தரம் 13 ) வரை கல்வி கற்றேன். உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கும் தெரிவானேன். அனுமதிக்கான சகல செயற்பாடுகளையும் நிறைவு செய்துவிட்டு அழைப்புக்காகக் காத்திருந்தேன். அந்த சந்தர்ப்...