அது என்ன தளம்?

                வணக்கம் வாசகர்களே! நீங்கள் உங்கள் வலைத்தளத்தை அல்லது இணையத் தளத்தை வடிவமைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள்? வடிவம், உள்ளடக்கம் போன்றவை தொடர்பில் எவ்வளவு சிந்தித்திருப்பீர்கள்? ஆனால் இவை எவையுமே இல்லாமல் ஒரு இணையத்தளம் உலகைக்  கலக்கிக் கொண்டிருக்கிறது. பிரத்தியேக வடிவமைப்பு இல்லை. அதுகூட பரவாயில்லை என்றால், உள்ளடக்கம் என்ற ஒன்றே இல்லை. அது என்ன தளம்?

                 Most Exclusive Website என்னும் இணையத் தளமே அது. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அந்த இணையத்தளத்தின் உள்ளடக்கத்தைப் பார்வையிட முடியும். அந்த ஒருவருக்கும் 60 விநாடிகள் மட்டுமே அதாவது ஒரு நிமிடம் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அவரைத் தொடர்ந்து தொடர்ந்து இத்தளத்துடன் இணைப்பில் இருக்கும் அடுத்த நபருக்கு வாய்ப்பு வழங்கப்படும். தளத்தை மூடிவிட்டு மீண்டும் திறந்தாலோ அல்லது பக்கத்தை Refresh செய்தாலோ அல்லது இணைய இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் இணைத்தாலோ உங்கள் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தளத்தில் உங்கள் பெயரை இட்டு உங்களுக்கான எண்ணைப் பெற்றுக்கொண்டு வரிசையில் காத்திருக்க வேண்டியது தான்.....

 

             இத்தளம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன் முதலில் பயனற்ற இணையத்தளங்களின் பட்டியலில் தான் இடம்பெற்றிருந்தது. அதன் மூலமாகவே பிரபலமும் ஆனது. உள்ளடக்கம் ஒன்றும் இல்லை என்பதை அறிந்திருந்தாலும் ஒரு முறையேனும் உள்ளே நுழைந்திட வேண்டும் என்று ஆளாளுக்கு வரிசையில் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். இப்பதிவு எழுதப்படும் நேரம் வரை காத்திருப்புக்காக பதிவு செய்யப்பட்ட நிமிடங்கள் 21562717 ஆகும். இது 41.03 வருடங்களுக்கு சமனானது ஆகும். ஒன்றுமில்லாததுக்கு இவ்வளவு கிராக்கியா என்று பிரமிக்க வைக்கிறது தளம்.

                 ஒரு நிமிட செல்பி, வார்த்தை விளையாட்டு, ஒரு விவாதம், டுவிட்டர் மாதிரியான ஒரு பதிவு, ஒரு நிமிட சுய அறிமுகம், தட்டச்சு வேக கணிப்பீடு போன்ற பயனுள்ள அம்சங்கள் எதையேனும் இதில் உள்ளடக்கியிருக்கலாம் என்பது என் கருத்து. எது எப்படியோ திறந்த இணைய வெளியில் ஒரு வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள் தோழர்களே! இதே மாதிரியான ஒரு தளத்தை நான் குறிப்பிட்டது போன்ற பயனுள்ள அம்சங்களோடு உருவாக்க வேண்டும் என்ற ஆசை / எண்ணம் எனக்குள்ளும் துளிர் விட்டிருக்கிறது!!!!


http://mostexclusivewebsite.com/

Most Exclusive Website

Comments

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்