வாங்கையா வாங்க!

அண்மையில் எனது Google plus தளத்தில் எனக்கு ரசிக்கக் கிடைத்த 5 புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம். அனைத்து புகைப்படங்களுமே இயற்கை சார்ந்தவை. ஏதோ ஒரு வகையில் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் என நம்புகிறேன். மேலும் இப் பதிவின் மூலம் வாசகர்களுடன் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அழகிய புகைப் படங்களை ரசித்த படியே இவற்றையும் இடைக்கிடை வாசித்துக் கொள்ளுங்கள். நான் இந்த 'சிகரம்' வலைப் பதிவை பல கனவுகளுடன் தொடர்ந்து நடத்தி வருகிறேன். ஆயினும் மனதில் ஒரு சின்ன குறை. நான் வலைப் பதிவை ஆரம்பித்து முதலாவது பதிவை வெளியிட்ட ஓரிரு நிமிடங்களில் வாசகர் ஒருவர் தனது கருத்தினை (Comment) 'சிகரம்' வலைத்தளத்தில் பதிவு செய்தார். அது எனக்கு மனதில் ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் தொடர்ந்து வந்த பதிவுகளுக்கு வாக்குகள் கிடைத்தாலும் கருத்துரைகள் பதிவு செய்யப் படுவது அரிதாகவே நடை பெற்றது. எனது பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வாகுகளை வழங்குவதுடன் உங்களை கவர்ந்த பகுதியையும் மறக்காமல் கோடிட்டுக் காட்டிவிட்...