Posts

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

Image
வணக்கம் வாசகர்களே! வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? என்ன கேள்வி இது? இது கேள்வியல்ல. நான் அண்மையில் வாசித்து ரசித்த காதல் கவிதைகள் அடங்கிய நூலொன்றின் தலைப்பு. தபூ சங்கர் என்பவர் எழுதி 2008 இல் வெளியான நூல் இது. நூலுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்பைத் தவிர உள்ளே அடங்கியிருக்கும் எந்தவொரு கவிதைக்கும் தலைப்பிடப்படவில்லை. எல்லாக் கவிதைகளுமே உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் போலவே அமைந்திருப்பது நம்மை ரசிக்க வைக்கிறது. தனது நூலை தபூ சங்கர் இப்படி அறிமுகம் செய்து வைக்கிறார். இது வெறும்  புத்தகமல்ல. இதைத்  தொடுபவன்  காதலனாகிறான்  தொடுபவள்  காதலியாகிறாள். அறிமுகமே நம்மை ஈர்த்து நூலுக்குள்ளே இழுத்துச் செல்கிறது. இந்த வரிகளைத் தவிர தபூ சங்கர் தனியானதொரு முன்னுரையை நூலுக்கு வழங்கவில்லை. ஆயினும் கவிஞர் அறிவுமதி, நா.முத்துக்குமார்  போன்றோரின் நூல் மதிப்புரைகள் காணப்படுகின்றன.   இந்நூலானது இரண்டு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதி காதலன் தன் காதலைப் பற்றி கவிதை கூறுவது போலவும், இரண்டாம் பகுதி காதலி தன் காதலைப் பற...

#100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays

Image
                        உங்களால் 100 நாட்கள் தொடர்ச்சியாக மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா? முடியாது என்பதே உங்கள் பதிலாக இருக்கலாம். காரணம் நாம் வாழும் இயந்திர மயமான வாழ்க்கை. ஆனாலும் முடியும் என்கிறார்கள். இதனை ஒரு சவாலாகவே நம் முன் வைக்கிறார்கள். தொடர்ச்சியாக உங்களால் 100 நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமெனின், இந்த சவாலுக்கு நீங்கள் தயாரெனின் உடனே 100happydays இணையத் தளத்துக்கு சென்று சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள்.                 சரி. சவால் என்பதையெல்லாம் தாண்டி 100 மகிழ்ச்சியான நாட்கள் பற்றி நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம்.                             கல்வி, வேலை, குடும்பம், சமூகம் என ஒவ்வொருவரைச் சுற்றியும் ஆயிரத்தெட்டு பொறுப்புக்கள். காலை கண்விழித்தது முதல் இரவு கண்ணுறங்கப் போகும் வேளை வரை தினமும் வித்தியாசமான மனி...

கந்தசாமியும் சுந்தரமும் - 02

Image
"கந்தசாமி அண்ணே.. கந்தசாமி அண்ணே..." என்று தன்னை அழைக்கும் குரல் கேட்க தொலைக்காட்சியிலிருந்து தன் கவனத்தை வாசலை நோக்கி திருப்பினார் கந்தசாமி. வேறு யார்? நம்ம சுந்தரம் தான். "வாப்பா சுந்தரம், உட்கார்." "டிவி ல சித்திரைக் கொண்டாட்டம் இன்னும் முடியலையோ?" - ஆசனத்தில் அமர்ந்தபடியே கேட்டார் சுந்தரம். "அதில்லப்பா.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் கூத்துக்களைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்." "அதுவா? இந்த உள்ளூர் அலைவரிசைகள் போதாதுன்னு போன வாரம் நம்ம பிள்ளைங்க Sun Direct ஆன்டனாவை வாங்கிப் போட்டாங்க. போட்டு என்ன பிரயோசனம்? எல்லாம் தேர்தல் மயமா இருக்கு." "உண்மை தான். நல்ல நல்ல நிகழ்ச்சிகள் போய்க்கிட்டிருந்த நேரத்துல எல்லாம் இந்த பொல்லாத தேர்தல் கூத்துகள் தான் போகுது சுந்தரம்." "அது சரிண்ணே... 2014 ஆம் ஆண்டுக்கான இந்திய நாடாளுமன்ற தேர்தல்ல யார் வெற்றி பெறுவாங்கன்னு நினைக்கிறீங்க?" "யாரப்பா சொல்றது? மக்கள் அறிவு பூர்வமா மட்டும் வாக்களிக்கறவங்களா இருந்தா உறுதியா சொல்லலாம். ஆனா நிலைமை அப்படி இல்லையே....?" ...

டுவிட்டர் @newsigaram - 02

Image
# உரிய நேரத்தில் உரிய இடத்தில் வெளிப்படுத்தப்படாத கோபமும் பாசமும் பின்னர் வேறெப்போதும் பயனற்றது ; தேவையற்றது ; பாசாங்கானது. # சிறிய துன்பங்களை மறக்கச் செய்வது பெரிய துன்பங்களே! # கடந்த காலம் நமக்கு பாடமாய் இருக்க வேண்டும், பாரமாய் இருக்க கூடாது. # உலகத்தை திரும்பிப்பார்க்க வைக்க ஒரே வழி, உலகத்தின் பின் நின்று கொள்வது தான்..! # விவசாயம் பொய்த்துப்போன வயலினால் ஏற்படும் சோகத்தை 'வயலினால்' சொல்லிவிடமுடியாது! # நெருங்கிய உறவினர்களினால் வரும் பாலியல் துன்புறுத்தல்கள் மிகவும் கொடுமையானவை. மற்ற உறவுகளைக் காப்பாற்ற பெண் பொறுமை காக்கவேண்டியுள்ளது. # நீண்ட இடைவெளிக்குப்பின் ஆற்றில் நீர் வந்தால் காய்ந்த மணல் உறிஞ்சிக்கொள்வது போலே உன்னை ஒரு பிரிவுக்குப்பின் பார்க்கையில் விழிகள் நனைகின்றன. # இங்கு காணாமல் போன விமானம் ,கப்பல் ,ராக்கெட் எங்கே இருக்கு?னு மை போட்டுப்பார்த்து சொல்லப்படும் - கொல்லிமலை சித்தர்! #   நியூசிலாந்து நாட்டில்....... # கடவுளைத் தவிர வேறு எவரையும் எல்லா நேரத்திலும் நேசிக்க முடியாததுதான் மனிதனின் மகத்தான பலவீனம் -பபி. #காதல் நோயை குணப்படு...

மலேசிய விமானம் - தொடரும் மர்மங்கள்!

Image
    12 நாடுகளின் 42 கப்பல்கள் மற்றும் 39 விமானங்கள் தீவிரத் தேடலில்...   அத்தனை பேரின் எண்ணங்களும் மார்ச் 08, 2014 அன்று காணாமல் போன மலேசிய விமானம் எங்கே என்பதில் தான். ஆறு நாட்கள் கடந்துவிட்டன. 239 பேரின் உறவுகள் கண்ணீரோடு காத்திருக்கின்றனர். என்ன நடக்குமோ? விபத்துக்குள்ளாகியிருக்கலாம், தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம், கருந்துளைக்குள் சென்றிருக்கலாம், வேற்றுக்கிரக வாசிகளின் கைவரிசையாக இருக்கலாம் இப்படியாக பல்வேறு அனுமானங்கள். நாளாக நாளாக அனுமானங்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறதே தவிர விடை கிடைத்தபாடில்லை.      மேலே நீங்கள் காண்பது போலிக் கடவுச் சீட்டின் மூலம் குறித்த விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படும் இருவரினதும் புகைப்படங்கள். ஈரானியப் பிரஜைகளான இவர்கள் இருவரும் தீவிரவாதிகள் இல்லை என இண்டர்போல் செய்தி வெளியிட்டுள்ளது.   பீஜிங் விமானநிலையத்தில், விமானங்களின் வருகையைக் காட்டும் அறிவிப்புப் பலகையில் மேலே சிவப்பு நிறத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான வருகை தாமதம் என்ற அறிவிப்பு காட்டப்படுகிறது. முழு உலகமும் விமானம் கிடைக...

இலங்கையின் சுதந்திரத்திற்கு வயது அறுபத்தாறு!

Image
                        வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் நீண்ட இடைவெளிக்குப் பின்னரான அன்பான வணக்கங்கள்.                         இன்று இலங்கையின் 66 வது சுதந்திர தினம். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆயினும் மே மாதம் 22 ஆம் திகதி, 1972 இலேயே அதாவது 24 வருடங்களுக்குப் பின்னரே இலங்கை குடியரசாக்கப் பட்டது. அன்று முதல் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என அழைக்கப்பட்டு வருகிறது.                                         1948 இற்குப் பின் இலங்கை பெற்ற சுதந்திரம் சிங்களவர்களுக்கு மட்டும் என்றாகிப் போனது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழர்களுடன் ஒன்றிணைந்து போராடிய சிங்களவர்கள் சுதந்திரத்திற்குப் பின் தமிழர்கள் மீது அடக்குமுறையினைப் பிரயோகித்தனர். இலங்கையின் முத...

அன்புடன் 2014.

Image
                                              வணக்கம் நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய 2014 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பட்டாசுகள், அலங்கார மின்விளக்குகள் என பணத்தை வாரியிரைத்துவிட்டு "இந்த வருஷம் செலவு குறையணும் கடவுளே" என்று பலரும் கடவுளை வேண்டியிருப்பீர்கள். நீங்கள் நினைத்தது நடந்தால் சரிதான்...                                      வருடத்தின் முதல் நாள் முடிந்து விட்டது. இனி பழையபடி வேலைத்தலங்களுக்கோ அல்லது பாடசாலைகள் அல்லது கல்லூரிகளுக்கோ கிளம்ப வேண்டியது தான். முதலாம் வகுப்பில் சேரப்போகும் மாணவர்களுக்கும் முன்பள்ளிச் சிறார்களுக்கும் இரண்டாம் திகதி முக்கியமான தினம். அவர்களை...

நீ - நான் - காதல் - 04

Image
கருவிழியிரண்டு  கண்கொட்டாமல்  பார்க்குதென்னை பலப் பல கனவுகள்  காண்கின்றேன்  கயல்விழிகளில்  ஒரு பார்வைக்குள்  ஓராயிரம் பிரிவுகள்  வெட்கப் பார்வை  மோகப் பார்வை  அன்புப் பார்வை என  இன்னும் பல  எத்தனை தடவை  எப்படிப் பார்த்தாலும்  அத்தனையிலும் தெரிவது  அகத்தினில் தேங்கிக்கிடக்கும்  கற்கண்டு உள்ளத்தாள் கன்னியவள் காதல்!

சிகரம்பாரதியின் பிறந்தநாளும் நத்தாரும்!

Image
                                                வணக்கம் வாசக நெஞ்சங்களே! முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ் இனிய நத்தாரில் உங்கள் மனதிலிருக்கும் கவலைகள் நீங்கி இன்பங்கள் பெருகவும் எண்ணியவை எண்ணியபடி கைகூடவும் வருகின்ற நாட்கள் இனிமையாக அமையவும் மனதார வாழ்த்துகிறேன்.     அத்துடன் கிறிஸ்துமஸ் தினமான இன்று எனது பிறந்தநாளும் கூட. முதலில் எனக்கு நானே "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறிக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துக்களை மட்டுமல்ல, ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.       உங்கள்  அன்பின்  சிகரம்பாரதி.

முக நூல் முத்துக்கள் பத்து - 04

Image
01.  ♦என் தாத்தா பூமியை தோண்டிய போது அவருக்கு நிறைய தங்கம் கிடைத்ததாம் ♦என் அப்பா பூமியை தோண்டிய போது அவருக்கு நிறைய தண்ணீர் கிடைத்ததாம் ♦நான் பூமியை தோண்டிய போது எனக்கு நிறைய கண்ணிவெடிகள் கிடைத்தது ♦என் மகன் பூமியை தோண்டும்போது அவனுக்கு நிறைய எலும்புக்கூடுகள் கிடைக்கும்..... 02. கொழுப்புதான் இந்த கோவில் யானைக்கு.. எல்லோரையும் ஆசிர்வாதம் செய்துவிட்டு உன்னைமட்டும் முத்தமிடுகிறது..  #சுட்டவை 03.  வாழ்வில் நீ  வெற்றி பெறும் போதெல்லாம் உன் முதல் தோல்வி  நினைவுக்கு வந்தால் உன்னை வெல்ல யாராலும் முடியாது. 04. நீ படிக்கிற அழகை நினைத்து நினைத்து எழுத முடியாமலே போய்விட்டது உனக்கான கடிதத்தை -பழநிபாரதி (முத்தங்களின் பழக்கூடை) 05.   06. நீ வெள்ளாடை அணியும் நாட்களெல்லாம் வேண்டுமொரு வங்கக்கடலின் தாழ்வு மண்டலம்... 07. ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்! கேட்டு வாங்கிப் போனீர்கள-பின் கேடே செய்வதாய் ஆனீர்கள்! நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக நன்றா? ஒன்றா? கூறுங்கள்! க...

மரண வீதி!

Image
வணக்கம் வாசகர்களே! நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் மகிழ்ச்சியான செய்தியுடன் சந்திக்க முடியவில்லை. ஒரு விபத்து மற்றும் இரு கொலைகளால் நிகழ்ந்த மரணங்களைப் பற்றிப் பேசுவதே பதிவின் நோக்கம். முதலாவது பேரூந்து விபத்து பற்றியது. இலங்கையின் பண்டாரவளை - பூனாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பத்துப் பேர் மரணமடைந்துள்ளதுடன் இருபத்தைந்து பேர் காயமடைந்துள்ளனர். பதினாறு வயது மாணவி முதல் ஐம்பத்தைந்து வயது முதியவர் வரை பாகுபாடின்றி காலன் காவு கொண்டுள்ளான். பேரூந்தானது கடந்த நான்காம் திகதி மாலை ஏழு மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இரண்டாவது ஐந்து லட்ச ரூபாய் பணத்தை அபகரிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அடுத்தது, யாழில் இளம் பெண்ணொருவர் ஐந்து பேரினால் கடுமையான பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப் பட்டு கிணற்றில் வீசப்பட்டமையினால் மரணமடைந்துள்ளார். பெற்றோர், ஊரார் மற்றும் மகளிர் அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை ந...

கந்தசாமியும் சுந்தரமும் - 01

Image
"கந்தசாமி அண்ணே ஏன் அமைதியா உக்காந்திருக்கீங்க?" - வீட்டு முன்றலில் நாற்காலியில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்த கந்தசாமியிடம் வினவினான் சுந்தரம். "யாரு சுந்தரமா? வாப்பா... அது ஒண்ணுமில்ல, இன்னிக்கு உலக அமைதி தினமில்லையா? அதான்." - என்று குசும்பாகக் கூறினார் கந்தசாமி. "உலக அமைதி தினம் - மாகாண சபைத் தேர்தல்! ஆஹா என்ன ஒரு பொருத்தம்?" "ஆமா சுந்தரம். நானும் அத தான் யோசிச்சேன். நீயே சொல்லிட்ட." "ஆமாண்ணே யாருக்கு வாக்களிச்சீங்க?" "தேர்தல் முடிவு வரட்டும், சொல்றேன்." "ஏன் அப்படி சொல்றீங்க?" "செவுத்துக்குக் கூட காதிருக்கும். யார் காதுல சரி விழுந்தா விவகாரமாகிப் போகுமடா." "அதுவும் சரிதாண்ணே! இந்த மாகாண சபைத் தேர்தல் பத்தி என்ன நினைக்கிறீங்க?"    "ஒரு முடிவோட தான் வந்திருக்க போல?" "நம்ம என்ன முடிவெடுக்குறது? மக்கள் அவங்களோட முடிவ சொல்றதுக்கான 9 மணித்தியால கால அவகாசம் முடிஞ்சு போச்சு. நம்ம மன ஆறுதலுக்காக எதுனாச்சும் பேசலாமேன்னு தான் கேட்டேன்." ...

கற்பிழந்தவள்

Image
வணக்கம் நண்பர்களே! நான் எழுதிய கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை விரைவில் வெளியிடும் எண்ணம் தற்போது சற்றே துளிர் விட்டிருக்கிறது. எனவே, அதற்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக இதுவரை "சிகரம்" வலைத்தளத்தில் வெளியான கவிதைகளை வரிசைக்கிரமமாய் அவற்றுக்கான இணைப்புகளுடன் இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு இணைப்புகளையும் தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த முன்னோட்ட முயற்சிக்கும் சரி, வெளிவரவிருக்கும் நூலுக்கும் சரி தற்போதைக்கு "கற்பிழந்தவள்" என்றே நாமமிட்டிருக்கிறேன். சரி, அதிகம் பேசாமல் கவிதைத் தொகுதிக்குள் நுழைவோம். 01. நலம் தானா தோழர்களே? 02. வேலைக்கு போறேன்!. 03. குருவியின் பயணம் 04. நட்சத்திர நிலவுகள் 05. நீ-நான்-காதல் - 01 06. நீ-நான்-காதல் - 02 07. நீ-நான்-காதல் - 03 08. மறுபடியும் வருவேன் 09. கற்பிழந்தவள் 10. பிரிவோன்றே முடிவல்ல 11. காத்திருப்பு உங்கள் அங்கீகாரத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.பூச்செண்டோ கல்லடியோ எதற்கும் தயாராய் இருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லுங்...

நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதியா?

Image
வணக்கம் வாசகர்களே! இந்த வாரம் புதன் கிழமையன்று [2013-09-11] மாலை மூன்று மணி. எமது தொழிற்சாலையின் தேநீர் இடைவேளை. தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த தருணம். அந்த இடத்தில் தமிழன் என்ற வகையில் நான் மட்டுமே இருக்க, மீதமிருந்த நான்கு பேரும் சிங்களவர்கள். அப்போது அவ்விடத்தில் நவநீதம்பிள்ளை குறித்த பேச்சொன்று எழுந்தது.   அப்போது கருத்துரைத்த 60 வயது மதிக்கத்தக்க சக அலுவலர் கூறிய கருத்து "நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதி" என்பதாகும். மேலும் அவர் கூறுகையில் "நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதி. அதனால் தான் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். தமிழர்களுக்கு அரசு எத்தனை சலுகைகளை வழங்கியுள்ளது? சொகுசு பேரூந்துகள், தொலைக்காட்சித் திரையுடன் கூடிய புகையிரதம், பாதை, கல்வி என பல விடயங்களை அரசு வழங்கி வருகிறது. புலிகள் காலத்தில் கஷ்டப்பட்ட மக்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள். இவ்வளவு செய்தும் மக்கள் ஏன் நவநீதம்பிள்ளைக்கு ஆதரவாக பேசுகிறார்கள்? மக்கள் இன்னும் உண்மையை உணராதவர்களாக உள்ளனர்." - என்று குறிப்பிட்டா...

புகையிரதப் பேரூந்து

Image
  வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். மேலேயுள்ள புகைப்படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? இரண்டு பேரூந்துகளை ஒன்றிணைத்து புகையிரதமாக்கியுள்ள புதுமையே அது. ஆம், இலங்கையின் "மதவாச்சி" என்னும் இடத்திலிருந்து "மடு றோட்" என்னும் இடத்திற்கே இப் புகையிரதப் பேரூந்து பயணிக்கிறது. மதவாச்சியிலிருந்து புறப்பட்டு செட்டிகுளம் வழியாக மடு றோட் நோக்கிப் பயணிக்கிறது. புறப்படும் இடம், நிறுத்துமிடம் அடங்கலாக மொத்தமே மூன்று தரிப்பிடங்கள் மட்டுமே.     மே  மாதம் 14 ஆம் திகதி, 2013 இலேயே இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 45 கி.மீ தூரம் கொண்ட பயணப் பாதைக்கான பயணக்கட்டணம் ரூ 45 மட்டுமே. மணிக்கு 90 கி.மீ என்ற வேகத்தில் "புகையிரதப் பேரூந்து" பயணிக்கிறது.  புகையிரதப் பேரூந்தின் உட்புறம்  தற்போது அப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவையான போக்குவரத்துத் தேவையினை இது பூர்த்தி செய்து வருகிறது. ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் வீதம் மதவாச்சி மற்றும் மடு வில் இருந்து செயற்படுகிறது. புதிதாக அமைக்கப் பட்டுள்ள இந்த புகையிரதப் பாதையானது ...