கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01.2 [ திருத்தம் 02 ]
1.2 தோழிகளின் சந்திப்பு "திவ்யா...." "...................." "அடியேய் திவ்யா...." கை அனிச்சையாய் தேநீரை வாய்க்குள் ஊற்ற வாயும் அதே போல் தேநீரைப் பருக மனம் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அப்போது யாரோ என் தோளைப் பிடித்து உலுக்குவதைப் போலிருக்க நினைவுகளில் இருந்து விடுபட்டு திரும்பிப் பார்த்தேன். தோழி நந்தினி சிரித்தபடி நின்றிருந்தாள். "என்னடி யோசனை?" "ஒன்னுமில்ல" "ஒன்னுமில்லாமலா கூப்பிடறது கூட வெளங்காம உட்கார்ந்திருக்க?" "........................." "நா சொல்லவா?" "தெரிஞ்சுக்கிட்டே ஏன் கேக்குற?" "இப்படியே எப்பப் பாத்தாலும் அதப் பத்தியே நெனைச்சுக்கிட்டிருந்தா எப்படி?" "மறந்துரச் சொல்றியா?" "அப்படி இல்ல....." "அப்போ நெனைச்சுக்கிட்டு தானே இருக்கணும்?" "....................." என் கேள்விக்கு நந்தினியால் மௌனத்தையே பதிலாய் அளிக்க முடிந்தது. என் மனம் படும் பாட்டை அவளும் அறிந்திருந்தத...