Thursday, 22 May 2014

மீண்டும் அதிசயா.

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

இது ஒரு வித்தியாசமான - முக்கியமான பதிவு. அதிசயா. நாம் அறிந்த ஒருவர் தான் - வலைகளின் முட்கள் நிறைந்த பாதைகளில் நம்மோடு சில காலம் பயணித்தவர்தான் . அவர் தனது கல்வி செயற்பாடுகள் காரணமாக இப்போது வலைத்தளத்தின் பக்கம் வருவதில்லை. முகநூலில் மட்டும் அவ்வப்போது தனது குட்டிக் கவிதைகளை வெளியிட்டு வருகிறார். கொஞ்சம் மகிழ்ச்சி தான். ஆனாலும் அது அவரது வளர்ச்சியில் இத்தனை முக்கிய பங்கு வகித்த வலைத்தளத்தினூடாக வெளிவருவது தானே பெருமை?

நான் வலைத்தளங்களில் எழுத ஆரம்பித்த பிறகு என்னுடைய நண்பர் வட்டத்தில் இணைந்துகொண்டவர் தான் அதிசயா. நாங்கள் பல தடவைகள் கைப்பேசியினூடாக உரையாடியிருக்கிறோம். எங்கள் சுக துக்கங்களை பரிமாறியிருக்கிறோம் . எப்போது பேசினாலும் நான் அவரிடம் மறக்காமல் கூறும் ஒரு விடயம் உண்டு. அது, அடிக்கடி வலைத்தளத்தின் பக்கம் வாருங்கள் என்பது தான். ஆனால், அது அவரால் முடியவில்லை. அதனால் தான் நான் அவரது முகநூலில் அவரால் கடந்த நான்கு மாதங்களுக்குள் பதிவிடப்பட்ட குட்டிக் கவிதைகளைத் தொகுத்து பதிவாக இங்கு வெளியிடுகிறேன்.

இதற்கு அனுமதியளித்த அதிசயாவுக்கு மிக்க நன்றி. இப்பதிவு அவருடனான எனது புனிதமான நட்புக்கும் அவரது "மழை கழுவிய பூக்கள்" வலைத்தளத்துக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.

 மழை கழுவிய பூக்கள்

01.
பரவசப்புள்ளி ஒன்றைப் பற்றியபடி பறந்து கொண்டிருக்கிறேன்!
என் வானம் விசாலமானது! பறத்தல் இலகுவாக இல்லாவிட்டாலும் இறகுகள் முறியவில்லை.
என் வானம் ஆதலால் வலிப்பது கூட சுதந்திரச்சுகமே!

 02.
பெரும் காதல் ஒன்றைப்பரவ விட்டிருக்கிறாய் பரம்பொருளே.....உன் நேசம் தான்எனை அலங்கரிக்கிறது...

03.
விரல் பிடித்து ஓடி வருவேன்-உன்
ஏதேனின் தோட்டங்களுக்கு04.
மரணத்தின் அவசரங்களில் மானிடரை அனுமதியாதே!
மிகச்சொற்பமான அற்புதங்களையே வைத்திருக்கிறோம்..
எதையும் பிடுங்கிவிடாதே இறைவா!!!
சாவுதனை சாகடி இறைவா
தரவேமாட்டேன் என் அற்புதங்களில் ஒன்றையேனும்..!


05.
கம்பி விழிம்பில் சாய்ந்தபடி குடித்துக்கொண்டிருக்கிறேன் 
இந்த வரப்பிரசாதத்தின் தீர்த்தத்தை!!
துளித்துளியாய் தெறிக்கிறது சாரல் அதில்
கரைந்து தொலைகிறது சில கோபங்கள்!!
வானம் பொழியும் நேசங்களை சுதந்திரமாய்
நிரப்பிக்கொள்கிறேன்..!
அடுத்த கார் காலம் வரும் வரை.!!
காத்திருப்பது அழகு சாரல் மழைக்காக!


06.
மென்மை சொல்லும் அலங்காரங்களை விடவும் வீரம் விதைக்கும் வேகங்களே மனதிற்கு வலுவளிக்கின்றன.!
பொம்மை ஒன்றை கட்டியணைப்பதிலும் பார்க்க
பயம் தரும் பலம் மிக்க -உன்
ஒளிர் வாளையே தாங்கி நடக்க விரும்புகிறேன்....!
வாளேந்துவதை அடக்கமின்மை என்று யாரேனும் உரைப்பார்களோ...???
அதையிட்டான அச்சங்களை களைவேன்..!
என் நண்பா-நீ பரிசளித்த உன் ஆயுதங்களை மிகவே நேசிக்கிறேன்...!
ஆகாயம்வரை பாயும் உன் வெற்றித் தனுசு கொண்டு
சூரியப்புயல்களை நிறுத்துவேன்..!
நீர் பனித்த சிவப்பு ரோஜாக்களை விடவும்
வெற்றி தகிக்கும் உன் வீர வாள் கர்வம் பொருந்தியது..!அழகானது!!!
மீண்டும் பிறந்த கழுகுப்பறவையாய் நீ பூலோகம் எங்கிலும் நீ சிறகு விரித்திருக்கிறாய் நண்பா!!!!
இருளும் பயமும் கவிந்த இரவுப்பொழுது ஒன்றில்
உன் வாள் தரித்து பயணம் புறப்படுவேன்....!
அதுவே என் சிறப்புப் பயணமாக இருக்கும்..!
அதன் பின் எந்த கண்ணீரிலும் தோல்வி சுவை இருக்காது..!
எங்கும் ஜெயமே பிரகாசிக்கும்.


07.
இன்றைய புலர்தலை அழகாக்கினாய் நண்பா....
ஒரு கூடை நிறைய மழை அனுப்பியிருந்தாய்...
மேலிருந்து நேசமுத்தங்கள் பொழிகிறாய்...
பாதையின் வெப்பங்களை புன்னகையால் ஈரமாக்கினாய்..
இன்னும் மழையை அனுப்பிக்கொண்டே இருக்கிறாய்.. !
நீ என் ஆத்ம நண்பன்..!தேவா
தெய்வம் நீ தெய்வானுபவம் தருகிறாய்..!
 

 

08.
சிறு நூலிழை தா இறைவா....பற்றிப்பிடித்த படியே கடந்து விடுவேன் இந்த கரடுமுரடான பாதைகளை!!!!
நான் பேசிக்கொண்டிருக்கிறேன் பரம்பொருளே உன்னோடு.
உன் மடிமீது அமர்தி ஒவ்வொன்றாய் கேட்கிறாய்...
பிள்ளையை அணைப்பது போல் மார்போடு சேர்த்து அணைக்கிறாய்
என் உச்சிமுகர்கிறாய்..
மண்மூடி நான் கண்மூடி மரிக்கையிலும் உன் மடிமீது ஏந்துவாய்.!!
இருள் பொழுதொன்றில் நான் அழுதபடிஇருந்தேன்..!
உன் மிடுக்கான நடை கொண்டு என் பயம் தணித்தாய்...!உன் இருப்பில் கர்வம் கொள்கிறேன்.
என்றும் மாறாத என் தோழனனுபரம்பொருளே!!
 
 
 
 
 09.
கைநிறைய சேர்த்து வைத்திருக்கிறேன்...என் தோட்டத்திற்கான
வர்ணக்கலவைகளை
வருவாய்என் மகவே -எனை
தொட்டு உயிர் தீண்டி-மெதுவாய் உன் பஞ்சு விரல்களால்
என் கைதிறப்பாய்.
உனை சுமக்கவில்லை நான் என்ற போதும்
அடிக்கடி பிரசவித்திருக்கிறேன் என் நினைவுகளில்...!
அதற்காகவேனும் வருவாய் என் மகவே
தந்தையாய் தாங்குவேன் தாயாய் உனை வாங்குவேன்!
பதப்படுத்த தொடங்கிவிட்டேன் உனக்கான என்தோட்டத்தை
அதற்காகவேனும் வருவாய் என் மகவே-மயிலிறகு
இமைகளால் என் மனம் தொடவே..!
 


இப்பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. அவர் மீண்டும் வலைத்தளம் வர வேண்டும் என்பதே என் அவா. உங்களுக்கு??? 

அன்புடன்,
சிகரம்பாரதி. 

10 comments:

 1. மீண்டும் அதிசயா வலைப்பக்கம் வரவேண்டி நானும் பிரார்த்திக்கின்றேன். அவரின் சொந்தமே என்று வரும் பின்னூட்டம் தனித்துவம்! அருமைக்கவிதைகள் பகிர்வுக்கு தங்களுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை சகோ. எங்கள் அவாவும் அதுவே. கருத்துக்கு மிக்க நன்றி.

   Delete
 2. அதிசயாவுக்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
 3. வணக'கம் அன்பு சொந்தமே பாரதி.நீண்ட நாட்களாகியும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமைக்காக முதலில் மன்னியுங்கள்.வாழ்க்கையில் இன்னும் பெருமிதமாய் அசைபோட்டுக்கொள்ளத்தக்க தருணம் இது.மிக்க நன்றி பாரதி..அதிசயாவை உயிர்ப்பித்தமைக்காய்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சொந்தமே! உங்களைப் போன்ற திறமை மிக்கவர்கள் வலைத்தளத்தில் இருந்து அந்நியமாகி இருப்பதை விரும்பவில்லை. ஆகவே தான் உங்களை மீளக் கொண்டுவர எண்ணினேன். உங்கள் மீள் வருகை தொடர் வருகையாகட்டும்.

   Delete
 4. தனிமரம் நேசன் அண்ணா மற்றும் என் அன்புச்சொந்தங்களுக்கு நன்றிகள்..சந்திப்போம்.

  ReplyDelete
 5. தங்களின் இப்பதிவு மூலமாக நட்பின் ஆழத்தை அறியமுடிகிறது.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete
 6. நட்பு பேசுகிறது.. நல்ல பகிர்வு.
  நானும் வாசித்திருக்கிறேன் ஐயா.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...