Tuesday, June 9, 2015

விண்டோஸ் 10 வருகிறது!

வணக்கம் வாசகர்களே! இதோ அதோ என்றிருந்த மைக்ரோசொப்ட் இன் விண்டோஸ் 10 ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியாகவுள்ளது. விண்டோஸ் 9, விண்டோஸ் ப்ளூ என பல்வேறு வதந்திகள் கடந்த காலங்களில் இருந்திருந்தாலும் விண்டோஸ் 10 இனை மைக்ரோசொப்ட் கடந்த வருட இறுதியில் உறுதி செய்தது. வழமைக்கு மாறாக தொழிநுட்ப முன்பார்க்கைப் பதிப்பொன்றை வெளியிட்டு மக்களின் பங்களிப்போடு விண்டோஸ் 10 உருவாக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 ஆனது விண்டோஸ் 7 மற்றும் 8 இன் குறிப்பிட்ட தரமான பதிப்புகளுக்கு முதல் வருடம் இலவசமாகக் கிடைக்கவுள்ள அதே நேரம் முதல் வருடத்தினுள் இற்றைப் படுத்தப்படும் பதிப்புகளுக்கு வாழ்நாள் சேவையினையும் வழங்கவுள்ளது.

விண்டோஸ் 10 குறித்து நாம் இன்னும் பேசலாம். அதுவரை இந்த முகவரியில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்!

https://www.microsoft.com/en-us/windows

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?