சிகரம் பாரதி 30 / 50 - அமெரிக்க அதிபர் தேர்தலும் இந்திய செல்லாக் காசுகளும்!
வணக்கம் வலைத்தள வாசகர்களே! அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து டொனால்ட் டிரம்ப் ஹிலாரி கிளின்டனை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ளார். அதே நேரம் நம் இந்திய மக்கள் பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். உலக வல்லரசு நாட்டிலும் தெற்காசிய வல்லரசு நாட்டிலும் இருவேறு மாறுபட்ட நிகழ்வுகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வானதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. தொகுதிவாரி முறையின் காரணமாக ஹிலாரி கிளின்டனை விட குறைவான வாக்குகளையே பெற்றிருந்தாலும் வெற்றி வாகை சூடினார் டிரம்ப். இதனை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றவண்ணமுள்ளன. மேலும் அவரது கல்வி நிறுவனமொன்றின் மீது அதன் முன்னாள் மாணவர்களால் தொடரப்பட்ட வழக்கில் 25 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நட்ட ஈடாகத் தர முன்வந்துள்ளார். அத்துடன் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே அதாவது அமெரிக்காவில் பிறந்து பூர்வீகமாக வாழ்பவர்களுக்கே சொந்தம் என்று கருத்துத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தலின் ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைக்...