Posts

சிகரம் பாரதி 9/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.10.08 இது எனக்கு வாட்ஸப்பில் வந்த ஒரு கதை. சுவாரசியமாக இருந்தது. நீங்களும் படித்துப் பாருங்களேன்!   எமதா்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார். மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார்.  மகனே... நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தொியுமா? ஒருவா் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால...

'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! 'வானவல்லி' நமது வலைத்தள நண்பர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் கருவாகி கைவண்ணத்தில் உயிராகி வெளிவந்திருக்கும் வரலாற்றுப் புதினம். 'வானவல்லி'க்காக ஒரு நேர்காணல் வேண்டும் என நண்பர் வெற்றியிடம் கேட்டேன். 'ஆகட்டும்' என உடன் ஒப்புக் கொண்டவர் பதில்களை 'வானவல்லி' வெளியானதும் தருகிறேன் என்று கூறினார். அத்துடன் 'நண்பா, நான் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணியாற்றியபோது ஒரு விடயத்தை அறிந்து கொண்டேன். அதாவது நமது கேள்விகள் மட்டுமே நேர்காணல் கொடுப்பவரை மட்டும் அல்லாமல் நம்மையும் வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் என்று. ஆதலால் வழக்கமாக தொடுக்கப்படும் கேள்விகள் மட்டும் அல்லாமல் வாசிப்பவரையும் தூண்டும் விதத்தில் கேள்விகள் அமைவது சிறப்பு.' என்று ஆலோசனையும் கொடுத்தார். தற்போது 'வானவல்லி' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நான் 'வானவல்லி'யை நம்மபுக்ஸ் என்னும் இணையத்தளத்தின் மூலம் கொள்வனவு செய்தேன். ஆனால் நூலை இலங்கைக்கு தருவிப்பதற்குள் போத...

சிகரம் பாரதி 8/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.10.06 இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது கடந்த கூட்டொப்பந்த சம்பள அதிகரிப்பின் போதே இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரப்பட்டது. ஆனால் அப்போது ரூ 620 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் வெறும் 110 ரூபாவே இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருட காலப்பகுதியில் வாழ்க்கைச் செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் 17 % த்தால் மட்டுமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மலையகக் கட்சிகளின் கூட்டணி இன்று (2016.10.06) அறிவித்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 730 ரூபா நாட்சம்பளம் இன்றைய சூழலுக்குப் போதுமானதா? 30 நாட்களும் தொழில் புரிந்தாலே 21,900 ரூபா மட்டுமே கிடைக்கும். மேலும் எல்லா நாட்களும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படப் போவதில்லை. கொழுந்தின் அளவு மற்றும் வரவு ஆகியன இந்த 730 ரூபாவில் தாக்கம் செலுத்தும். ஆகவே மீண்டும் மிகக் குறைந்த வேதனம் ஒன்றையே மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளப் போகின்றனர். மலையக மக்கள் சிந்தித்துச் செயல் பட வேண்டிய நேரம் இது. சிந்திப்பீர்களா? 2016.10.07 இது நவராத்திரி பூஜ...

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02

அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் வானவல்லி நாயகன் வெற்றிவேல் - அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் பதில் கடிதம். நலம், நலமறிய ஆவல். நண்பா இப்படியும் ஒரு நண்பனா என்று சிந்திக்க வைத்த ஒரு நண்பன் நீ. நம் நட்பு முகம் பாராது எழுத்தைப் பார்த்து வந்த நட்பு. எழுத்துக்களைப் பற்றிய விடயங்களைப் பகிர ஆரம்பித்து இப்போது தனிப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு நீண்டிருக்கிறது எம் நட்பு. வைபரின் புண்ணியத்தில் முகம் பார்த்துக் கொண்டோம். வாட்ஸப்பின் உபயத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறோம். இணையம் தந்த இணையற்ற நட்பு உன் நட்புதான். உன்னைப் போன்றே இலங்கைக்குள் எனக்குக்  கிடைத்த நட்புதான் 'அதிசயா'. நினைவிருக்கும் என நம்புகிறேன். அவரையும் இன்னும் நேரில் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. நான் தமிழகம் வரும் வேளை முதலில் உன்னைத்தான் சந்திக்க விரும்புகிறேன். இவ்வளவு நெருக்கமாய் நம் நட்பு அமையக் காரணம் எது? தெரியவில்லை. ஆனால் பிரிவொன்று நேர்ந்துவிடக் கூடாது என்பது மட்டுமே என் பிரார்த்தனை. இல்வாழ்க்கை சிறப்பாக உள்ளது. அண்மைக் காலங்களில் தங்கையுடன் உரையாடினாயல்லவா? கல்விப் பிண்ணனி குறைவாக இருந்தாலும் குணத...

சிகரம் பாரதி 7/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.10.02 மலையகம். இலங்கையின் வஞ்சிக்கப்பட்ட மக்கள் வாழும் பூமி. தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கே போராட்டம் நடத்த வேண்டிய நிலை. இலங்கையில் மலையகத் தமிழர் , ஈழத் தமிழர் என இரு பிரிவினர் உள்ளனர். ஈழம் கடல்சார் உற்பத்திகள், தென்னை மற்றும் பனை போன்ற உற்பத்திகளுடன் விவசாயத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளது. மலையகம் தேயிலை மற்றும் மரக்கறி உற்பத்திகளில் சிறந்து விளங்குகின்றது. 200 ஆண்டுகளாய் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மலையகத்தின் தேயிலைத்துறையினூடாக பங்களிப்புச் செய்து வந்திருக்கின்றனர் இம்மலையக மக்கள். மலையகத்தின் பிரதான விளைபொருள் தேயிலை ஆகும். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய மலையகத் தேயிலைத் தோட்டங்களை இலங்கை  சனநாயக சோசலிசக் குடியரசு தனியாருக்கு குத்தகை என்னும் பெயரில் தாரை வார்த்தது. இதனால் மலையக மக்களுக்கு பல்வேறு உரிமைகள் பறிபோயின. முக்கியமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இலங்கை அரசினாலோ அல்லது வேறு எவரினாலுமோ தலையிட முடியாதுள்ளது. காரணம் கூட்டொப்பந்தம் ஒன்றின் மூலமே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ...

சிகரம் பாரதி 6/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.09.30 இன்னைக்கு உங்களுக்கு மூணு கதை சொல்லப் போறேன். 1.முதல் கதையில ஒரு அப்பா ஆபீஸ் விட்டு வர்றாரு. வீட்டுக்குள்ள நுழையும் போது அவரு பொண்ணு போகோ சேனல் பாத்துகிட்டிருக்கிறா. அடுத்த நாள் பரீட்சை. அவ என்ன செய்தா காலையில இருந்து படிச்சிட்டு இருந்தா. அப்புறம் அம்மா கிட்ட கேட்டுட்டு பத்து நிமிசம் ரிலாக்ஸ் பண்ண டிவி பாத்துகிட்டு இருந்தா. ஆனா அவ அப்பா கண்ணுல என்ன பட்டுச்சி. டிவி பாக்குறது மட்டும்தான் பட்டுச்சி. சட்டுன்னு வந்தாரு. படிக்காம டிவியா பாக்குறன்னு அவர் பையால டிவி மேல வீசினார். அது டிவி மேல பட்டு டிவி ரிப்பேர் ஆகுது. 2.இரண்டாவது கதையில ஒரு அம்மா தன் குட்டிக் குழந்தையோட ஒரு கீரிப்பிள்ளையையும் வளக்குறாங்க. ஒருநாள் குழந்தைக்கு காவலா கீரிப்பிள்ளைய வெச்சிட்டு ஆத்துல தண்ணி எடுக்கப் போறாங்க. அப்போ குழந்தைக்கு பக்கத்துல ஒரு பாம்பு கொத்த வருது. உடனே கீரிப்பிள்ள பாம்பு கூட சண்டைப் போட்டு கடிச்சி கிழிச்சி போட்டிருது. கீரிப்பிள்ளை வாயெல்லாம் ரத்தம். ஆத்துல இருந்து குடத்த எடுத்துகிட்டு வந்த அம்மாவ நோக்கி கீரிப்பிள்ள ஒடிவருது. அம்மா பாக்குறா. கீரிப...

சிகரம் பாரதி 5/50

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.09.27 கூகிளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எது கூகிளின் உண்மையான பிறந்தநாள் என்பதில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. செப்டெம்பர் 5 ஆம் திகதியா அல்லது 27 ஆம் திகதியா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கூகிள் என்ன காரணத்துக்காய் தன் பிறந்தநாளை மாற்றியமைத்தது என்று தெரியவில்லை. ஆனாலும் வாழ்த்துகிறேன். கூகிள் அல்லோ செயலியின் வெற்றிகரமான வெளியீட்டிற்குப் பின் கூகிள் பிறந்தநாள் சிறப்பானதாக உள்ளது. காரணம் கூகிளுக்கு வயது பதினெட்டு. இனி கூகிள் ஒரு இளைஞர். வாக்குரிமை கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. இணையத் தேடலில் ஆரம்பித்து பல்வேறு தளங்களில் கால் பதித்து வெற்றியைக் குவித்து வருகிறது கூகிள். இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்! #HBDGoogle 2016.09.28 ஆட்டாமாவுக்கு அடுத்த பிள்ளை தான் கோதுமை மாவு - காலையிலேயே கேட்ட தத்துவம்! அம்மா , அப்பாவெல்லாம் யாருன்னு கேட்கப்படாது. 2016.09.29 அவசர சிகிச்சை வண்டி - Ambulance. ஒரு உயிரைக் காப்பாற்றப் போராடும் வாகனம். நாளாந்தம் பல உயிர்களைக் காப்பாற்றும் சேவையை வழங்கி வருகிறது. நெரிசல் மிக்க போக்குவரத்து சாலைகளில...

பீப்... பீப்.... (Peep... Peep...)

Image
பீப்... பீப்.... (Peep... Peep...) காலை நேரம். போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதி. சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்தில் ஒளிர்வதற்கு இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். முன்னால் 50 வாகனங்கள், பின்னால் 100 வாகனங்களாவது இருக்கும். இடைநடுவில் ஒரு பேரூந்து. அதில் உள்ள பயணிகளுள் ஒருவர். பின்னாலுள்ள வாகனங்கள் எழுப்பும் பீப் ஒலி (Horn) செவிப்பறையை கிழித்துக் கொண்டு கேட்கிறது. அந்தப் பேரூந்திலுள்ள பயணியின் மனநிலை என்னவாக இருக்கும்? அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? பண வசதி இல்லாதவர்கள் பணியிடங்களுக்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ நடந்து அல்லது பொதுப் போக்குவரத்து சாதனத்தின் மூலம்  செல்கிறார்கள். வசதி / இயலுமை உள்ளவர்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கிறார்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகின்றது என வைத்துக் கொள்வோம். அந்த இடத்தை சொந்த வாகனத்தின் மூலம் 15 நிமிடங்களில் அடைந்து விடலாம் எனக் கொள்வோம். நீங்கள் வாகனத்தில் செல்லும் ஒருவராக இருந்தால் நடந்து செல்லும் ஒருவரை விடவும் 15 நிமிடங்கள் முன்னதாகவே விரைவாக அந்த இடத்தை...

சிகரம் பாரதி 4/50

வணக்கம் வலைத்தள வாசக நண்பர்களே! 2016.09.25 [1] இன்று எனது உடன் பிறந்த சகோதரன் ஜனார்த்தனன் க்கு பிறந்த நாள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரா. நேற்று இரவு நமது தொடர் பதிவின் மூன்றாம் பதிவை பதிப்பித்துவிட்டு தூங்கும் போது மணி அதிகாலை ஒன்று! இந்த 4 வது தொடர் பதிவோடு இந்த வருடத்தில் நான் எழுதிய மொத்த பதிவுகளின் எண்ணிக்கை 14 ஆகிறது. இது நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து 5 வருடங்களில் மூன்றாவது  அதிக எண்ணிக்கையிலான பதிவுகளின் எண்ணிக்கையைச் சமப்படுத்துகிறது. இரண்டாவது அதிக எண்ணிக்கை 15 ஆகும். ஆனாலும் எழுத்துக்களின் அல்லது எழுதுபவரின் தரத்தை இந்த எண்ணிக்கைகள் தீர்மானிப்பதில்லை என்பதே நிஜம்! [2] 'தொடரி' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் இவ்வாரம் வெளியாகி இருந்தன. இரு திரைப்படங்களுமே மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. விஜய் சேதுபதியின் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமாக இருக்கும். இன்றைய முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் மற்றும் ரஜினி போன்றவர்களை விட விஜய் சேதுபதியின் நடிப்பு மிகப் பிரமாதமானது. தனக்கான கதையை மிகக் கச்சிதமாக இவர் தேர்வ...

சிகரம் பாரதி 3/50

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! 2016.09.22 ' கூகிள் அல்லோ' (Google Allo )  உலகம் முழுவதும் கூகிளினால் வெளியிடப்பட்டது.  வாட்ஸப்  ,  வைபர்  மற்றும்  இமோ  போல இது கூகிளின் இணைய அரட்டை செயலி. குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை இந்த செயலியில் மேற்கொள்ள முடியாது. வீடியோ அழைப்புகளுக்காக சில வாரங்களுக்கு முன்னால் கூகிள் ' கூகிள் டுவோ ' (Google Duo )  என்னும் செயலியை அறிமுகம் செய்திருந்தது. இதில் வீடியோ அழைப்புகளை தவிர வேறு எதுவும் இல்லை. ' கூகிள் டுவோ ' மற்றும் ' கூகிள் அல்லோ ' ஆகிய இரண்டு செயலிகளுக்காகவும் நான் முன்பதிவு செய்திருந்தேன். 2016.09.23 ' கூகிள் அல்லோ ' - இன்று உலகை அல்லோலகல்லோலப்படுத்திக் கொண்டிருக்கும் கூகிளின் புத்தம்புதிய இணைய அரட்டை செயலி! ஏற்கனவே  வாட்ஸப் ,  வைபர் ,  பேஸ்புக் மெசெஞ்சர்  மற்றும்  இமோ  என ஆயிரக்கணக்கில் செயலிகள் நம்மை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் புதுவரவு இது. எனக்கு இன்று (2016.09.23) 'அல்லோ' செயலியை தரவிறக்கம் செய்யும் அனுமதி கிடைத்தது. காலை வேளையிலேயே தரவிறக்கம் செய்து பயன்படுத்தின...

சிகரம்பாரதி 2/50

                   வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்றும் பல்வேறு விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இங்கு வந்துள்ளேன். 2016.09.20 இன்று இலங்கையின் முன்னணி கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களில் ஒன்றான "டயலொக்" தலைமையகத்திற்கு சென்றேன். நான் கடந்த சில வருடங்களாக எனது முதன்மை கையடக்கத் தொலைபேசி வலையமைப்பாக 'டயலொக்' இனையே பயன்படுத்தி வருகிறேன். இணையப் பயன்பாட்டிற்கும் 'டயலொக்' தான். நான் பாவித்து வந்த 2G / 3G சிம் அட்டையை 4G சிம் அட்டையாக மாற்றிக் கொள்ளவே இந்த விஜயம். இலவசமாக மாற்றிக் கொடுத்தார்கள். இணையத் தரவுப் பொதிகள் ஏலவே பயன்படுத்தியவை தான். இணைய இணைப்பின் வேகம் அதிகரிக்கும் என்பது மட்டுமே மாற்றமாக அமையும். ரிலையன்ஸ் ஜியோ போன்று 4G புரட்சியெல்லாம் நடக்கவில்லை.  மேலும் வீட்டுக்கான 4G இணைய கருவியை (4G Home Broadband Device) இம்மாத இறுதியில் வாங்கவுள்ளேன். இது நிலையான இணைப்பாகும். மின் இணைப்பிற்கு இணைத்தே பயன்படுத்த வேண்டும். கையடக்கத் தொலைபேசி போல செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரே நேரத்...

சிகரம்பாரதி 1/50

                    வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். என்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் தொடர் பதிவே இது. இதன் 50 வது அத்தியாயம் 2016,டிசம்பர் 31 இல் வெளியாகும். போகலாமா? இன்று - 2016.09.19 "ரஜினி" என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒரு நடிகர். வில்லனாக அறிமுகமாகி இன்று நட்சத்திரமாக மிளிர்கிறார். அண்மையில் வெளியான 'கபாலி' ரசிகர்களிடம் ஓரளவு வெற்றி பெற்றது. இன்று ரஜினியின் ஐந்து படங்கள் கொண்ட இறுவட்டுத் தொகுப்பு ஒன்று என்கரம் கிட்டியுள்ளது. அதில் கபாலி, எஜமான், மன்னன், பாண்டியன் மற்றும் அண்ணாமலை ஆகிய திரைப்படங்கள் காணப்படுகின்றன. அதில் இன்று நான் பார்க்கப்போவது 'அண்ணாமலை'.  ரஜினியின் இடைக்காலப் படங்கள் ஒரு விறுவிறுப்பைக் கொண்டிருக்கும். அவரது அசத்தலான நடிப்புப் பாணி எல்லோரையும் கவர்ந்திழுக்கும். பாடல்களும் அருமையாக இருக்கும். ரஜினியின் பல்வேறு படங்கள் அரசியல் பேசினாலும் ரஜினி இன்று வரை அரசியல் பேசியதில்லை. ரஜினி குறித்து நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துக்களும் இருந்தாலும் அவரது வளர்ச்சி எல்லோராலும் பாராட்டப்படும் ஒன்றா...

விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம்

வணக்கம் வாசகர்களே! இணையம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தி ஆகிவிட்டன. இணையம் நன்மை, தீமை என இரண்டையும் இந்த உலகத்திற்கு வழங்கி வந்தாலும் இணையம் எனக்களித்த பரிசாக வெற்றிவேல் உடனான நட்பைக் காண்கிறேன். என் கடிதத்திற்கு வெற்றியின் பதில் கடிதம் கிட்டியுள்ளது. அக்கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு. பதில் கடிதம் விரைவில்........ விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம் பேரன்புள்ள நண்பனுக்கு, வணக்கம். நான் நலம் நண்பா. நீயும் நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன். கடிதத்தைத் தொடங்கும் முன்பு எனது நல்வாழ்த்துகளை உனக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா.  ‘செம் புலப் பெயல் நீர் போல; அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’   என்ற சங்கத் புலவனின் வாக்கினைப் போன்று தாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடனும், அன்புடனும் வாழ வாழ்த்துகிறேன். நீ உனது திருமணச் செய்தியை அனுப்பியபோது என்னால் வாழ்த்து மட்டுமே தெரிவிக்க முடிந்தது. நேரில் வந்து வாழ்த்த விரும்பியும், இயலாமல் போய்விட்டது. தொடர்பு கொண்டு பேசவும் இயலவில்லை. உனது இல்வாழ்க்கை எப்படி சென்று கொண்டிருக்கிறது நண்பா? முதல...

வெள்ளித்திரை-தோழா!

Image
அனைவருக்கும் இனிய வணக்கங்கள். தோழா ! அருமையான திரைப்படம். பொதுவாகவே நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் விறுவிறுப்பாக இருக்கும். தோழா நகைச்சுவையுடன் வலிகளைக் கலந்து தந்திருக்கிறது. முதலில் தோழா திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சில காட்சிகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். # "நாலு மாசத்துக்கு நீ சத்தியவானா இருக்கணும்" "தமிழ்ல சொல்லுங்க" "நா சொன்னது தமிழ்தான்டா" # "உன் பெட்ரூமை காட்டுறேன் வா" "இது பெட்ரூமா?" "ஆமா. இது ரூமு. இது பெட்டு" என முதியோர் இல்ல பராமரிப்பாளர் கூறுவது சிரிப்பு. #விக்ரமாதித்யாவை (நாகார்ஜுனா) கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு ஆள் எடுப்பது அருமை.  # வேலை கிடைத்ததும் தனது படுக்கை அறையையும் குளியலறையையும் பார்த்து பிரமிப்படைவது அருமை.  # கண்காட்சியில் ஓவியத்தை பார்த்துவிட்டு தானும் ஓவியம் வரைய முற்படுவது. # நாகார்ஜுனா மணிக்கூண்டை உற்றுப்பார்ப்பதைக் கண்டதும் "இதெல்லாம் விற்க மாட்டாங்க" என கார்த்தி கலாய்ப்பது. # பராமளிப்பாளர் என்பதற்காக காவலாளி போல விறைப்பாக இல்லாமல் விளையாட்டுத் த...

விறல்வேல் வீரனுக்கோர் மடல்!

Image
                           அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் விறல்வேல் வீரன் வெற்றிவேல் - அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் கடிதம். நலம், நலமறிய ஆவல்.                     முதலில்  உனக்கு ( ஒருமை உரிமை உண்டென எண்ணுகிறேன் ) என் இதயம் கனிந்த நன்றிகள். நன்றிகளுடன் மடல் துவங்குவதேன் என எண்ணுகிறாயா? மிக நீண்ட காலத்தின் பின் வலையுலகில் மீள் பிரவேசம் செய்திருக்கிறேன். காரணம் நீதான். நீ தந்த தொடர் உற்சாகம் தான் வலைப்பக்கம் என்னை இழுத்து வந்திருக்கிறது. இன்னுமோர் உப காரணமும் உண்டு. உனக்கிருக்கக்கூடிய எத்தனையோ நண்பர்களையெல்லாம் விடுத்து உன் கவிதையை திருத்தம் செய்ய என்னைத் தேர்ந்தெடுத்ததும் திருத்தம் செய்தபின்னும் பிரசுரத்திற்காய் என் அனுமதி வேண்டி நின்றதும் எனக்குள் ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமக்காக துடிக்கும் இதயமே ஒருவரின் உச்ச நம்பிக்கையாக இருக்கக்கூடும். நன்றி நண்பனே!                     ...