Posts

சென்னைக்கு விசில் போடு!

Image
                  ஐ.பி.எல். என்கிற இந்தியன் பிரிமியர் லீக் 20-இருபது கிரிக்கட் போட்டிகளின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். இன்னும் இரண்டே போட்டிகள். 7 வது தொடரின் மகுடம் யாருக்கென்று தெரிந்துவிடும்.            என்னைப் பொறுத்தவரை இந்த ஐ.பி.எல் இன் ஆரம்பத்தில் இருந்தே சென்னைக்கு தான் ஆதரவு. முதல் காரணம் தோனி . அடுத்தது தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துவது என்பதாலும் இன்னபிற காரணங்களாலும். இதோ இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகும் ஆட்டத்திற்கும் சென்னை தேர்வாகியிருக்கிறது. இன்று நடைபெறவிருக்கும் சென்னை எதிர் பஞ்சாப் போட்டியில் வெல்லும் அணிதான் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்தாடவிருக்கிறது.                                  இந்த முறையும் ஐ.பி.எல் க...

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்!

Image
  * இந்த யுகத்தில் ஒளிபெற்ற பல விஷயங்களில், ஆத்மாவைப் பற்றிய உண்மை இது தான்: மனிதன் தான் , அவனது குணங்களை அமைக்கும் சிற்பி, சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி கர்த்தா; அவனது எண்ணங்களின் தலைவன். * சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அடிப்படையில் இன்ன மனிதன் தான் உள்ளே இருக்கிறான் என்பதை அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது.   * ஆத்மா எதை ரகசியமாக அவாவுகிறதோ , அதை ஈர்க்கிறது. எதைக் காதலிக்கிறதோ அதைக் கவர்கிறது ; எதைக் கண்டு பயப்படுகிறதோ அதை அடைகிறது. உள்மன நிலைக்கேற்ப வெளி உலக சூழ்நிலை உருவாகிறது. சொன்னது யார்? விரைவில்.........

மீண்டும் அதிசயா.

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இது ஒரு வித்தியாசமான - முக்கியமான பதிவு. அதிசயா. நாம் அறிந்த ஒருவர் தான் - வலைகளின் முட்கள் நிறைந்த பாதைகளில் நம்மோடு சில காலம் பயணித்தவர்தான் . அவர் தனது கல்வி செயற்பாடுகள் காரணமாக இப்போது வலைத்தளத்தின் பக்கம் வருவதில்லை. முகநூலில் மட்டும் அவ்வப்போது தனது குட்டிக் கவிதைகளை வெளியிட்டு வருகிறார். கொஞ்சம் மகிழ்ச்சி தான். ஆனாலும் அது அவரது வளர்ச்சியில் இத்தனை முக்கிய பங்கு வகித்த வலைத்தளத்தினூடாக வெளிவருவது தானே பெருமை? நான் வலைத்தளங்களில் எழுத ஆரம்பித்த பிறகு என்னுடைய நண்பர் வட்டத்தில் இணைந்துகொண்டவர் தான் அதிசயா. நாங்கள் பல தடவைகள் கைப்பேசியினூடாக உரையாடியிருக்கிறோம். எங்கள் சுக துக்கங்களை பரிமாறியிருக்கிறோம் . எப்போது பேசினாலும் நான் அவரிடம் மறக்காமல் கூறும் ஒரு விடயம் உண்டு. அது, அடிக்கடி வலைத்தளத்தின் பக்கம் வாருங்கள் என்பது தான். ஆனால், அது அவரால் முடியவில்லை. அதனால் தான் நான் அவரது முகநூலில் அவரால் கடந்த நான்கு மாதங்களுக்குள் பதிவிடப்பட்ட குட்டிக் கவிதைகளைத் தொகுத்து பதிவாக இங்கு வெளியிடுகிறேன். இதற்கு அனுமதியளித்த அதிசயாவுக்கு மிக்க நன்றி. இப்பதி...

இன்றைய தேவை இன்னுமோர் தொழிற் புரட்சி!

Image
வணக்கம் வாசகர்களே! மே தினக் கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டன. கட்சிகளும் மக்களும் அவரவர் பணிகளுக்கு திரும்பியாயிற்று. இனி? தொழிலாளர் உரிமைகள்? நலன்கள்?? எல்லாமே வெறும் மேடைப் பேச்சு தானா? மே தினம் ஏன் உருவானது? வேலை நேரத்தை எட்டு மணிநேரமாக மட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி தொழிலாளர்கள் புரட்சி செய்து வென்றதன் அடையாளம் தான் மே தினம். ஆனால் இன்று நடப்பது என்ன? எல்லோரும் சரியாக எட்டு மணி நேரம் தான் வேலை செய்கிறோமா? உழைப்பதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறதா? நிறுவனங்கள் தொழிலாளர் நலன்களில் அக்கறையுள்ளவை தானா? இவை அனைத்தையும் உங்களோடு பேசுவது தான் இந்த நூறாவது சிறப்புப் பதிவின் நோக்கம். அதற்கு முன்பு என்னை இப்பதிவை எழுதத் தூண்டிய விஜய் தொலைக்காட்சியின் “ நீயா நானா – மே தின சிறப்பு நிகழ்ச்சி ” உங்களுக்காக இங்கே [இப்பதிவை வாசிக்க இந்நிகழ்சியை பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை] : அல்லது https://www.youtube.com/watch?v=wYvyjSjyE-0 என்ற இணைப்பின் மூலம் பார்க்கலாம். என்ன பார்த்து விட்டீர்களா? வலைத்தளத்திலேயே பார்க்க முடியாதவர்கள் "Watch on youtube.com" என்ற இணைப்பை ...

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

Image
வணக்கம் வாசகர்களே! வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? என்ன கேள்வி இது? இது கேள்வியல்ல. நான் அண்மையில் வாசித்து ரசித்த காதல் கவிதைகள் அடங்கிய நூலொன்றின் தலைப்பு. தபூ சங்கர் என்பவர் எழுதி 2008 இல் வெளியான நூல் இது. நூலுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்பைத் தவிர உள்ளே அடங்கியிருக்கும் எந்தவொரு கவிதைக்கும் தலைப்பிடப்படவில்லை. எல்லாக் கவிதைகளுமே உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் போலவே அமைந்திருப்பது நம்மை ரசிக்க வைக்கிறது. தனது நூலை தபூ சங்கர் இப்படி அறிமுகம் செய்து வைக்கிறார். இது வெறும்  புத்தகமல்ல. இதைத்  தொடுபவன்  காதலனாகிறான்  தொடுபவள்  காதலியாகிறாள். அறிமுகமே நம்மை ஈர்த்து நூலுக்குள்ளே இழுத்துச் செல்கிறது. இந்த வரிகளைத் தவிர தபூ சங்கர் தனியானதொரு முன்னுரையை நூலுக்கு வழங்கவில்லை. ஆயினும் கவிஞர் அறிவுமதி, நா.முத்துக்குமார்  போன்றோரின் நூல் மதிப்புரைகள் காணப்படுகின்றன.   இந்நூலானது இரண்டு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதி காதலன் தன் காதலைப் பற்றி கவிதை கூறுவது போலவும், இரண்டாம் பகுதி காதலி தன் காதலைப் பற...

#100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays

Image
                        உங்களால் 100 நாட்கள் தொடர்ச்சியாக மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா? முடியாது என்பதே உங்கள் பதிலாக இருக்கலாம். காரணம் நாம் வாழும் இயந்திர மயமான வாழ்க்கை. ஆனாலும் முடியும் என்கிறார்கள். இதனை ஒரு சவாலாகவே நம் முன் வைக்கிறார்கள். தொடர்ச்சியாக உங்களால் 100 நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமெனின், இந்த சவாலுக்கு நீங்கள் தயாரெனின் உடனே 100happydays இணையத் தளத்துக்கு சென்று சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள்.                 சரி. சவால் என்பதையெல்லாம் தாண்டி 100 மகிழ்ச்சியான நாட்கள் பற்றி நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம்.                             கல்வி, வேலை, குடும்பம், சமூகம் என ஒவ்வொருவரைச் சுற்றியும் ஆயிரத்தெட்டு பொறுப்புக்கள். காலை கண்விழித்தது முதல் இரவு கண்ணுறங்கப் போகும் வேளை வரை தினமும் வித்தியாசமான மனி...

கந்தசாமியும் சுந்தரமும் - 02

Image
"கந்தசாமி அண்ணே.. கந்தசாமி அண்ணே..." என்று தன்னை அழைக்கும் குரல் கேட்க தொலைக்காட்சியிலிருந்து தன் கவனத்தை வாசலை நோக்கி திருப்பினார் கந்தசாமி. வேறு யார்? நம்ம சுந்தரம் தான். "வாப்பா சுந்தரம், உட்கார்." "டிவி ல சித்திரைக் கொண்டாட்டம் இன்னும் முடியலையோ?" - ஆசனத்தில் அமர்ந்தபடியே கேட்டார் சுந்தரம். "அதில்லப்பா.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் கூத்துக்களைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்." "அதுவா? இந்த உள்ளூர் அலைவரிசைகள் போதாதுன்னு போன வாரம் நம்ம பிள்ளைங்க Sun Direct ஆன்டனாவை வாங்கிப் போட்டாங்க. போட்டு என்ன பிரயோசனம்? எல்லாம் தேர்தல் மயமா இருக்கு." "உண்மை தான். நல்ல நல்ல நிகழ்ச்சிகள் போய்க்கிட்டிருந்த நேரத்துல எல்லாம் இந்த பொல்லாத தேர்தல் கூத்துகள் தான் போகுது சுந்தரம்." "அது சரிண்ணே... 2014 ஆம் ஆண்டுக்கான இந்திய நாடாளுமன்ற தேர்தல்ல யார் வெற்றி பெறுவாங்கன்னு நினைக்கிறீங்க?" "யாரப்பா சொல்றது? மக்கள் அறிவு பூர்வமா மட்டும் வாக்களிக்கறவங்களா இருந்தா உறுதியா சொல்லலாம். ஆனா நிலைமை அப்படி இல்லையே....?" ...

டுவிட்டர் @newsigaram - 02

Image
# உரிய நேரத்தில் உரிய இடத்தில் வெளிப்படுத்தப்படாத கோபமும் பாசமும் பின்னர் வேறெப்போதும் பயனற்றது ; தேவையற்றது ; பாசாங்கானது. # சிறிய துன்பங்களை மறக்கச் செய்வது பெரிய துன்பங்களே! # கடந்த காலம் நமக்கு பாடமாய் இருக்க வேண்டும், பாரமாய் இருக்க கூடாது. # உலகத்தை திரும்பிப்பார்க்க வைக்க ஒரே வழி, உலகத்தின் பின் நின்று கொள்வது தான்..! # விவசாயம் பொய்த்துப்போன வயலினால் ஏற்படும் சோகத்தை 'வயலினால்' சொல்லிவிடமுடியாது! # நெருங்கிய உறவினர்களினால் வரும் பாலியல் துன்புறுத்தல்கள் மிகவும் கொடுமையானவை. மற்ற உறவுகளைக் காப்பாற்ற பெண் பொறுமை காக்கவேண்டியுள்ளது. # நீண்ட இடைவெளிக்குப்பின் ஆற்றில் நீர் வந்தால் காய்ந்த மணல் உறிஞ்சிக்கொள்வது போலே உன்னை ஒரு பிரிவுக்குப்பின் பார்க்கையில் விழிகள் நனைகின்றன. # இங்கு காணாமல் போன விமானம் ,கப்பல் ,ராக்கெட் எங்கே இருக்கு?னு மை போட்டுப்பார்த்து சொல்லப்படும் - கொல்லிமலை சித்தர்! #   நியூசிலாந்து நாட்டில்....... # கடவுளைத் தவிர வேறு எவரையும் எல்லா நேரத்திலும் நேசிக்க முடியாததுதான் மனிதனின் மகத்தான பலவீனம் -பபி. #காதல் நோயை குணப்படு...

மலேசிய விமானம் - தொடரும் மர்மங்கள்!

Image
    12 நாடுகளின் 42 கப்பல்கள் மற்றும் 39 விமானங்கள் தீவிரத் தேடலில்...   அத்தனை பேரின் எண்ணங்களும் மார்ச் 08, 2014 அன்று காணாமல் போன மலேசிய விமானம் எங்கே என்பதில் தான். ஆறு நாட்கள் கடந்துவிட்டன. 239 பேரின் உறவுகள் கண்ணீரோடு காத்திருக்கின்றனர். என்ன நடக்குமோ? விபத்துக்குள்ளாகியிருக்கலாம், தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம், கருந்துளைக்குள் சென்றிருக்கலாம், வேற்றுக்கிரக வாசிகளின் கைவரிசையாக இருக்கலாம் இப்படியாக பல்வேறு அனுமானங்கள். நாளாக நாளாக அனுமானங்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறதே தவிர விடை கிடைத்தபாடில்லை.      மேலே நீங்கள் காண்பது போலிக் கடவுச் சீட்டின் மூலம் குறித்த விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படும் இருவரினதும் புகைப்படங்கள். ஈரானியப் பிரஜைகளான இவர்கள் இருவரும் தீவிரவாதிகள் இல்லை என இண்டர்போல் செய்தி வெளியிட்டுள்ளது.   பீஜிங் விமானநிலையத்தில், விமானங்களின் வருகையைக் காட்டும் அறிவிப்புப் பலகையில் மேலே சிவப்பு நிறத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான வருகை தாமதம் என்ற அறிவிப்பு காட்டப்படுகிறது. முழு உலகமும் விமானம் கிடைக...

இலங்கையின் சுதந்திரத்திற்கு வயது அறுபத்தாறு!

Image
                        வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் நீண்ட இடைவெளிக்குப் பின்னரான அன்பான வணக்கங்கள்.                         இன்று இலங்கையின் 66 வது சுதந்திர தினம். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆயினும் மே மாதம் 22 ஆம் திகதி, 1972 இலேயே அதாவது 24 வருடங்களுக்குப் பின்னரே இலங்கை குடியரசாக்கப் பட்டது. அன்று முதல் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என அழைக்கப்பட்டு வருகிறது.                                         1948 இற்குப் பின் இலங்கை பெற்ற சுதந்திரம் சிங்களவர்களுக்கு மட்டும் என்றாகிப் போனது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழர்களுடன் ஒன்றிணைந்து போராடிய சிங்களவர்கள் சுதந்திரத்திற்குப் பின் தமிழர்கள் மீது அடக்குமுறையினைப் பிரயோகித்தனர். இலங்கையின் முத...

அன்புடன் 2014.

Image
                                              வணக்கம் நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய 2014 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பட்டாசுகள், அலங்கார மின்விளக்குகள் என பணத்தை வாரியிரைத்துவிட்டு "இந்த வருஷம் செலவு குறையணும் கடவுளே" என்று பலரும் கடவுளை வேண்டியிருப்பீர்கள். நீங்கள் நினைத்தது நடந்தால் சரிதான்...                                      வருடத்தின் முதல் நாள் முடிந்து விட்டது. இனி பழையபடி வேலைத்தலங்களுக்கோ அல்லது பாடசாலைகள் அல்லது கல்லூரிகளுக்கோ கிளம்ப வேண்டியது தான். முதலாம் வகுப்பில் சேரப்போகும் மாணவர்களுக்கும் முன்பள்ளிச் சிறார்களுக்கும் இரண்டாம் திகதி முக்கியமான தினம். அவர்களை...

நீ - நான் - காதல் - 04

Image
கருவிழியிரண்டு  கண்கொட்டாமல்  பார்க்குதென்னை பலப் பல கனவுகள்  காண்கின்றேன்  கயல்விழிகளில்  ஒரு பார்வைக்குள்  ஓராயிரம் பிரிவுகள்  வெட்கப் பார்வை  மோகப் பார்வை  அன்புப் பார்வை என  இன்னும் பல  எத்தனை தடவை  எப்படிப் பார்த்தாலும்  அத்தனையிலும் தெரிவது  அகத்தினில் தேங்கிக்கிடக்கும்  கற்கண்டு உள்ளத்தாள் கன்னியவள் காதல்!

சிகரம்பாரதியின் பிறந்தநாளும் நத்தாரும்!

Image
                                                வணக்கம் வாசக நெஞ்சங்களே! முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ் இனிய நத்தாரில் உங்கள் மனதிலிருக்கும் கவலைகள் நீங்கி இன்பங்கள் பெருகவும் எண்ணியவை எண்ணியபடி கைகூடவும் வருகின்ற நாட்கள் இனிமையாக அமையவும் மனதார வாழ்த்துகிறேன்.     அத்துடன் கிறிஸ்துமஸ் தினமான இன்று எனது பிறந்தநாளும் கூட. முதலில் எனக்கு நானே "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறிக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துக்களை மட்டுமல்ல, ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.       உங்கள்  அன்பின்  சிகரம்பாரதி.

முக நூல் முத்துக்கள் பத்து - 04

Image
01.  ♦என் தாத்தா பூமியை தோண்டிய போது அவருக்கு நிறைய தங்கம் கிடைத்ததாம் ♦என் அப்பா பூமியை தோண்டிய போது அவருக்கு நிறைய தண்ணீர் கிடைத்ததாம் ♦நான் பூமியை தோண்டிய போது எனக்கு நிறைய கண்ணிவெடிகள் கிடைத்தது ♦என் மகன் பூமியை தோண்டும்போது அவனுக்கு நிறைய எலும்புக்கூடுகள் கிடைக்கும்..... 02. கொழுப்புதான் இந்த கோவில் யானைக்கு.. எல்லோரையும் ஆசிர்வாதம் செய்துவிட்டு உன்னைமட்டும் முத்தமிடுகிறது..  #சுட்டவை 03.  வாழ்வில் நீ  வெற்றி பெறும் போதெல்லாம் உன் முதல் தோல்வி  நினைவுக்கு வந்தால் உன்னை வெல்ல யாராலும் முடியாது. 04. நீ படிக்கிற அழகை நினைத்து நினைத்து எழுத முடியாமலே போய்விட்டது உனக்கான கடிதத்தை -பழநிபாரதி (முத்தங்களின் பழக்கூடை) 05.   06. நீ வெள்ளாடை அணியும் நாட்களெல்லாம் வேண்டுமொரு வங்கக்கடலின் தாழ்வு மண்டலம்... 07. ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்! கேட்டு வாங்கிப் போனீர்கள-பின் கேடே செய்வதாய் ஆனீர்கள்! நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக நன்றா? ஒன்றா? கூறுங்கள்! க...

மரண வீதி!

Image
வணக்கம் வாசகர்களே! நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் மகிழ்ச்சியான செய்தியுடன் சந்திக்க முடியவில்லை. ஒரு விபத்து மற்றும் இரு கொலைகளால் நிகழ்ந்த மரணங்களைப் பற்றிப் பேசுவதே பதிவின் நோக்கம். முதலாவது பேரூந்து விபத்து பற்றியது. இலங்கையின் பண்டாரவளை - பூனாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பத்துப் பேர் மரணமடைந்துள்ளதுடன் இருபத்தைந்து பேர் காயமடைந்துள்ளனர். பதினாறு வயது மாணவி முதல் ஐம்பத்தைந்து வயது முதியவர் வரை பாகுபாடின்றி காலன் காவு கொண்டுள்ளான். பேரூந்தானது கடந்த நான்காம் திகதி மாலை ஏழு மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இரண்டாவது ஐந்து லட்ச ரூபாய் பணத்தை அபகரிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அடுத்தது, யாழில் இளம் பெண்ணொருவர் ஐந்து பேரினால் கடுமையான பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப் பட்டு கிணற்றில் வீசப்பட்டமையினால் மரணமடைந்துள்ளார். பெற்றோர், ஊரார் மற்றும் மகளிர் அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை ந...