டாஷ்போர்டு புட்டுக்கிச்சி !
எல்லாத்துக்கும் வணக்கமுங்க! போன மாசம் வரைக்கும் என்னோட வலைப்பதிவு நல்லாத்தான் இருந்திச்சி. என்னோட வளர்ச்சி புடிக்காம [????] யாராச்சும் சூனியம் வச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறேன். நம்ம பிளாக்கர் டாஷ்போர்டு புட்டுக்கிச்சுங்க. நானும் என்னென்னமோ பண்ணிப் பார்த்துட்டேன். ம்ஹும்... ஒன்னும் வேலைக்கே ஆகல. ஆகக் கடைசியா ஒன்னு பண்ணேன். நம்ம காளி கோயில் பூசாரியைக் கூப்பிட்டு பிளாக்குக்கு விபூதி மந்திரிச்சு வச்சும் பார்த்தேன். அதுக்கும் சரி வராததால மறுபடியும் அவர அழைச்சுக்கிட்டு வந்தேன். அவுரு "தம்பீபீபீ......................." அப்படின்னு சாமிய வரவழைச்சுக்கிட்டு என்னக் கூப்பிட்டார். பயத்துல பதறிப் போன நான் என்னோட பிளாக்கு சைடு பார்ல போய் பசக்குன்னு ஒட்டிக்கிட்டேன். இழுத்துப் புடிச்சு மறுபடியும் கீழ உக்கார வச்சார். "இது சர்வதேச சக்திகளோட சதின்னு என் காளி சொல்றா.... என்னால எதுவும் பண்ண முடியாது. வேணும்னா ஒரு தாயத்து மந்திரிச்சுத் தாறேன்"னார். "சரி"ன்னு ஒரு தாயத்த வாங்கி கீபோர்ட சுத்தி கட்டி வச்சேன். கடைசில டைப் பண்ணத்தான் கஷ்டமாகுனிச்சே தவிர பிரச்சன தீ...