எழுத்தாளர் சிகரம் பாரதி...!
வணக்கம் தோழர்களே. நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இந்த காலப்பகுதியில் நானும் சரி, வலைத்தளமும் சரி, பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, என்னை அடையாளப்படுத்துவதற்கான தேவையாக, 'எழுத்தாளர் சிகரம் பாரதி' வலைத்தளத்தை நான் உங்களுக்கு இங்கே அறிமுகம் செய்து வைக்கிறேன். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த முகவரியில் இயங்குவது தான் பிரதான வலைத்தளம். இது தவிர்ந்த எத்தனையோ உப வலைத்தளங்களை உருவாக்கியிருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை. அதே போல, புதியதொரு நோக்கத்திற்காக இந்த வலைத்தளத்தையும் நான் உருவாக்கியிருக்கிறேன். எனது படைப்புகள் மற்றும் எண்ணங்கள், கருத்துக்கள் என எல்லாவற்றையும் நீங்கள் தற்போது காணும் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறேன். ஆனால் இவை எதுவும் அற்ற எனது படைப்புகளுக்கு மட்டுமான தனியானதொரு களம் தேவை என நான் உணர்ந்தேன். அதன் விளைவாகவே 'எழுத்தாளர் சிகரம் பாரதி' எனும் இந்த புதிய வலைத்தளத்தை உருவாக்கியிருக்கிறேன். இங்கு எனது கவிதைகள், சிறுக...