பதினைந்தாம் ஆண்டில் கால் பதிக்கும் 'சிகரம்' !

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். வருடாவருடம் இந்த பதிவை எழுதுவதை தவிர, பாரிய மாற்றங்கள் எதுவும் இதுவரை நிகழ்ந்துவிடவில்லை. 

இருந்தாலும் சொல்லிவிடுகிறேன், பதினான்கு ஆண்டுகளைக் கடந்து பதினைந்தாம் ஆண்டில் காலடி பதித்திருக்கிறது நமது 'சிகரம்' !. 

2006ஆம் ஆண்டில் ஆரம்பித்த பயணம். எங்கெங்கோ தடம்மாறிச் சென்றுகொண்டே இருடிக்கிறது. 

இலக்கை நோக்கிய பயணம் என்று சொல்லிக் கொண்டாலும், கண்ணுக்கெட்டிய தூரத்தில் இலக்கு காணப்படாதபோது எதை நோக்கிப் பயணிப்பது?



பயணம் சில நேரங்களில் உற்சாகமாக இருந்தாலும், பல நேரங்களில் சலிப்பே மிஞ்சுகிறது. 

என்றாலும், மனதுக்குள் ஓர் குரலின் உந்துதல்! 

என்னை முன்னோக்கி தள்ளிக் கொண்டே இருக்கிறது. 

இதோ இலக்கை நோக்கி வந்துவிட்டோம் எனும் போதெல்லாம், இலக்கு ஒரு கானல் நீராக மாறிவிடுகிறது. 

என்றாலும், ஒரு தீராத தாகம்! 

வெற்றிபெற்றேயாக வேண்டும் எனும் ஏக்கம். 

ஆனால், அந்த வெற்றியைப் பெறுவது எப்போது என்பதை சிந்திக்கும் போதுதான்...

ம்ம்ம்...

அண்மையில் 'வலை ஓலை' வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டது. 

இதுவரை, 43 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

ஆனால், வலைத்தளத்தின் பயன்பாடு என்னவோ குறைவாகவே இருக்கிறது. 

என்றாலும், எனது நீண்டகால கனவுகளில் ஒன்றை நிறைவேற்றியிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. 

இந்தக் கனவேனும் வெற்றியுடன் நிறைவுபெறுமா என்பது தான் என் கேள்வியாக இருக்கிறது. 

அதற்கு தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. 

இது எனது தனிப்பட்ட தளமோ, கனவோ அல்ல. 

தமிழ் வலைப்பதிவர்களாகிய நம் ஒவ்வொருவரினதும் கனவு. 

தமிழ் வலைத்தளங்களுக்கு என ஒரு நிரந்தரத் திரட்டி தேவை என சிந்தித்ததன் விளைவே, 'வலை ஓலை'. 

எந்தவொரு முயற்சியும், கூட்டு முயற்சியாக இல்லாவிட்டால் அதனை ஒருபோதும் வெற்றிபெற வைக்க முடியாது. 

ஆகவே, 'வலை ஓலை'யை வெற்றிபெற வைக்க தங்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கிறேன். 

வாருங்கள், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைந்து உருவாக்குவோம்!

Comments

  1. வாழ்த்துகள்...

    வலை மாற்றம் மிகவும் எதிர்ப்பார்த்த ஒன்று... பாராட்டுகள்...

    ReplyDelete
  2. 15-ஆம் ஆண்டில் - வாழ்த்துகள் சிகரம் பாரதி.

    ReplyDelete
  3. தங்கள் கடின உழைப்புத் தான்
    'வலைஓலை' இன் வெற்றி!
    தங்கள் முயற்சிக்கு - நாம்
    என்றும் ஒத்துழைப்போம்!
    தங்கள் பயணம் தொடர
    வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்