பெப்ரவரி 29

இன்று பெப்ரவரி 29ஆம் திகதி. லீப் வருட நாள். மீண்டும் 4 வருடங்களுக்குப் பின்னர் தான் இந்த நாள் வரும். இன்னும் இன்னோரன்ன சிறப்புகள் எல்லாம் இந்த நாளுக்கு சொல்லப்படுகின்றன. சிறப்பு நாட்கள் ஒவ்வொன்றுக்கும் சிறப்பு டூடில் வெளியிடும் கூகிளும் இன்றைய நாளுக்கு சிறப்பு டூடிலை வெளியிட்டிருக்கிறது. ஆகவே, நாமளும் சும்மா இருந்தா நம்மள சமூகம் மதிக்காது என்பதால் நானும் இன்று பதிவு எழுதி விட்டேன். ஆனால் வேலைப்பளு காரணமாக நாள் முடியப்போகும் வேளையில் தான் பதிவை வெளியிட நேரிட்டிருக்கிறது. 'தமிழ்மணம்' வலைத்திரட்டி கடந்த சில காலமாக முறையாக செயல்படவில்லை. முன்னதாக, இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகிய வலைத் திரட்டிகள் காணாமல் போயிருந்தன. அந்த வரிசையில் எஞ்சியிருந்த தமிழ்மணமும் சேர்ந்து விட்டது. அதன் பின்னர் அந்த இடத்தை நிரப்ப பல்வேறு இணையத்தளங்கள் முயன்ற போதும் களத்தில் நிலைத்து நிற்கவில்லை. ஆகவே, காலத்தின் தேவையுணர்ந்து நாம் களத்தில் இறங்கியிருக்கிறோம். அதற்காக உருவானது தான் ' வலை ஓலை ' வலைத் திரட்டி. ' வலை ஓலை ' வலைத் திரட்டி குறித்த மேலதிகத் தகவ...