தமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 01

  

                       வணக்கம் வாசகர்களே! மிக நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் நலம். நீங்கள் நலமா? வழக்கம் போல் இனி வலைத்தளத்தில் உங்களை சந்திப்பேன். 

                       தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி. செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழி. தமிழ் மொழி காலத்துக்குக் காலம் மெருகேறி வந்துள்ளது. இதில் சாமானியன் முதல் சான்றோர் வரை அனைவரினதும் பங்களிப்பும் உள்ளது. உலகின் அரசியல் பொருளாதார மாற்றங்களினூடாக தமிழர்கள் உலகெங்கும் பரந்துள்ளனர். சில நாடுகளில் ஆட்சி மொழி அந்தஸ்தும் தமிழுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூகிள் , மைக்ரோசொப்ட் போன்ற பல்வேறு மென்பொருள் அமைப்புகளும் தமிழுக்கு போதிய முக்கியத்துவத்தை அளித்து வருகின்றன. 

                    இந்நிலையில் காலத்துக்குக் காலம் உலகில் நிகழும் மாற்றங்களின் காரணமாக தமிழுக்கு "தமிழாக்கம்" என்ற எண்ணக்கருவின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. தினமும் ஏராளமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. புதிய புதிய விடயங்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. தொழிநுட்பம் நாளுக்கொரு அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இவைகளில் அநேகமானவை ஆங்கில மொழியில் நிகழ்கின்றன.  ஆங்கிலச் சொற்களுக்கான சரியான தமிழ்ப்பதத்தை தமிழுக்கு அளிப்பது தமிழர்களாகிய நமது கடமையாகும். 

                 தமிழாக்கம் செய்வதற்கு எந்தவொரு நாட்டிலும் பொறுப்பான குழுவோ அல்லது அமைப்போ இதுவரை இல்லை. ஆகவே எடுப்பார் கைப்பிள்ளையாக தமிழாக்கம் நிகழ்ந்து வருகிறது. தமிழாக்கத்திற்கென பொதுவான கொள்கைகளும் எதுவும் இல்லை. தமிழ் மொழி மாநாடுகள் அந்தந்த பிரதேச / நாட்டு எல்லைகளைத் தாண்டி தமிழாக்கத் துறையில் எதனையும் சாதித்துவிடவில்லை. ஆகவே பல்வேறு குறைபாடுகளுடனேயே தமிழாக்கம் நிகழ்ந்து வருகிறது. 

                      முதலில் தமிழாக்கம் தொடர்பில் கொள்கை வகுப்பு இயற்றப்பட வேண்டும். அதற்கென பக்கச்சார்பற்ற உலகளாவிய அமைப்பொன்று நிறுவப்பட வேண்டும். தமிழாக்கம் தொடர்பான சகல முயற்சிகளும் அவ்வமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். சாமானியனாயினும் சான்றோனாயினும் அவரவர் தமிழாக்க முயற்சிகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். தமிழாக்கம் செய்யப்பட்ட சொற்கள் அனைத்தும் ஆண்டு தோறும் அச்சு வடிவிலும் மின்னூல் வடிவிலும் வெளியிடப்பட வேண்டும். ஆண்டுக்கொருமுறை உலகில் தமிழர்கள் பரந்து வாழும் ஒவ்வொரு நாட்டிலும் சுழற்சி முறையில் தமிழாக்க மாநாடுகள் நடாத்தப்பட வேண்டும். தமிழாக்க அகராதி தனியாக உருவாக்கப்பட வேண்டும். 

                தமிழாக்கம் தொடர்பிலான உங்கள் எண்ணங்கள் என்ன? தமிழாக்கத்தை திறம்பட முன்னெடுக்க உங்களின் ஆலோசனைகள் என்ன? உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் சந்திக்கலாம்....

அன்புடன்,
சிகரம்பாரதி.

Comments

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

      Delete
  2. தமிழாக்கம் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அருமையான, பயனுள்ள உத்திகள்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!