Saturday, 19 July 2014

தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்

வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்களை மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. என் நெஞ்சம் தொட்ட காலத்தை வென்ற பாடலொன்றுடன் உங்களை சந்திக்கிறேன். 

நாம் தினமும் புதுப்புதுப் பாடல்களைக் கேட்கிறோம். அவற்றில் சில மனதைக் கவர்ந்தாலும் பழைய பாடல்கள் போல் மனதில் நீங்கா இடம்பெறுவதில்லை. சில பழைய பாடல்கள் நாம் முதல் முறை கேட்க நேரும்போது அது புது அனுபவம் தருவதாக அமைவதுண்டு. அப்படியானதோர் அனுபவத்தைத் தந்தது "ரோஜாவின் ராஜா" படப்பாடல்கள். 

கல்லூரி மாணவராக வரும் சிவாஜி கணேசனின் அருமையான நடிப்பை இப்பாடலில் காணலாம். பாடலுக்கான சந்தர்ப்பமானது இப்படி அமைகிறது. அனைத்துக் கல்லூரி கலைவிழா. இவரது கல்லூரி சார்பாக பங்கேற்கவேண்டிய மாணவர் வராததால் பலரும் கல்லூரியையும் கல்லூரி மாணவர்களையும் கேலி செய்ய மேடை ஏறுகிறார் சிவாஜி. கேலி செய்தவர்களை நோக்கி "சிரித்தது போதும் சிந்தியுங்கள்" என்று சொல்லி தொடங்குகிறார்.

கண்ணதாசனின் அருமையான வரிகளைக் கொண்டமைந்த பாடல். நடிகர் திலகத்தின் நடிப்பில் டி.எம்.எஸ் இன் கணீர் குரலில் அருமையாக வார்க்கப்பட்டிருக்கும் இப்பாடலை நீங்களும் ஒருமுறை ரசித்துப் பாருங்களேன்? 

சிரித்தது போதும் சிந்தியுங்கள் 
என்னை திறமை இருந்தால் சந்தியுங்கள் 
கலைத்துறை என்னை கண்டதில்லை
அதை கண்டவர் யாரும் சொன்னதில்லை

நாளை நீ மன்னவன் 
இந்த நாளில் நீ மாணவன் [நாளை]
ஞானதீபம் நாம் ஏற்றலாம் 
நல்ல பாதை நாம் காட்டலாம் [ ஞான]

கீதை யார் சொன்னது?
குறள் வேதம் யார் தந்தது? [கீதை]
இன்று பாதை ஏன் மாறினோம்
என்று யாரை நாம் கேட்பது? [ நாளை] [ஞான]

எங்கள் பொன் நாட்டிலே 
இனி எல்லாம் எல்லார்க்குமே 
என்று ஆகும் நாள் வந்தது 
இன்ப நாதம் கேள் என்றது 

ஆலை ஓராயிரம் 
கல்விச்சாலை நூறாயிரம் [ஆலை]
இங்கு நாளும் நாம் காணலாம் 
செல்வம் யாவும் நாம் தேடலாம் [ நாளை] [ஞான]

நடிப்பு : சிவாஜி கணேசன் , வாணிஸ்ரீ 
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 
இயக்குனர் : கே.விஜயன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: டி.எம்.எஸ்

பாடலை நமது "சிகரம்" தொகுப்பில் இருந்து கேட்க :

 
பதிவிறக்க: நாளை நீ மன்னவன்

பார்க்க : YOUTUBE

மீண்டும் சந்திக்கும் வரை
உங்கள் அன்பின்
சிகரம்பாரதி.

6 comments:

 1. கருத்துள்ள பாடல்...

  mp3 - மிகவும் சந்தோசம்... நன்றி... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி. உங்கள் கருத்துக்கும் ரசனைக்கும்.

   Delete
 2. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete
 3. அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?

பிரபல பதிவுகள்

Featured post

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

வாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல்  அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி  ச...