அன்புடன் 2014.

                      

                       வணக்கம் நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய 2014 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பட்டாசுகள், அலங்கார மின்விளக்குகள் என பணத்தை வாரியிரைத்துவிட்டு "இந்த வருஷம் செலவு குறையணும் கடவுளே" என்று பலரும் கடவுளை வேண்டியிருப்பீர்கள். நீங்கள் நினைத்தது நடந்தால் சரிதான்...

               

                     வருடத்தின் முதல் நாள் முடிந்து விட்டது. இனி பழையபடி வேலைத்தலங்களுக்கோ அல்லது பாடசாலைகள் அல்லது கல்லூரிகளுக்கோ கிளம்ப வேண்டியது தான். முதலாம் வகுப்பில் சேரப்போகும் மாணவர்களுக்கும் முன்பள்ளிச் சிறார்களுக்கும் இரண்டாம் திகதி முக்கியமான தினம். அவர்களை வாழ்த்துவோம்.

 

மேலும் வலைத்தளத்திற்கு ஒரு வாரகால விடுமுறையையும் எடுத்துக்கொள்ளவிருக்கிறேன். ["நீ ஏற்கனவே வாரத்துக்கு ஒரு முறை எழுதுறவன் தானே?" என்பவர்களுக்கு 100 கசையடிகள் வழங்கப்படும்.] காரணம், எனது பாட்டி - அதாவது - அம்மாவின் அம்மா இறந்துவிட்டார். 2014.01.01 அன்று மாலை 5 மணியளவில் மரணமானார். கடந்த ஒரு மாதகாலமாக கடும் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவருக்கு "சிகரம் வலைத்தளம்" ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றது. நான் தற்போது கொழும்பில் இருக்கிறேன். நான்கரை மணிநேரப் பிரயாணத்தை மேற்கொண்டு ஊருக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன்.


                இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் புதுத்தெம்போடு உங்களை வந்து சந்திக்கிறேன். அதுவரை "சிகரம்" வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

நன்றி.

இப்படிக்கு

உங்கள் அன்பின் 

சிகரம்பாரதி.

Comments

  1. பாட்டிக்கு இரங்கல்கள்...

    ஆனால் நீங்கள் அதைப்பற்றிய கவலை அதிகமில்லாமல் ஜாலியாக இருப்பது போல இருக்கு...

    டேய் உங்களுக்கெல்லாம் இந்த வருஷம் பொங்கலே கிடையாதேடா என்கிற விவேக் காமெடி தான் நினைவுக்கு வருகிறது...

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து. நன்றி.

      Delete
    2. என்னது சிவாஜி செத்துட்டாரா ?

      Delete
    3. உடல் இறந்திருக்கலாம். நினைவுகள் இறப்பதில்லை.

      Delete
  2. பாட்டியின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.பகிர்வு ஜாலியான கலாய்ப்பு:)))

    ReplyDelete
  3. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

  4. வணக்கம்!

    திருவள்ளுவா் ஆண்டு 2045
    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழாய்ச் சமைத்து!

    பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
    கங்குல் நிலையைக் கழித்து!

    பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
    எங்கும் பொதுமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
    தொங்கும் உலகைத் துடைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அருமையான கவிக் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!