வேலைக்கு போறேன்!
நாளைக்கு நான் வேலைக்கு
போறேன் நண்பர்களே!
பத்துச் சாமான் சுத்திக்குடுத்து
பத்துரூபா சம்பாதிக்கப்
போறேன் நண்பர்களே
கல்விக்குக் காசில்லிங்க
கனவெல்லாம் கலைஞ்சுடுச்சு
நாடகமும் முடிஞ்சிருச்சு
அடுத்த வேஷமும் போட்டுக்கத்தான்
நேரமும் வந்துருச்சு
படிக்கப் பிடிக்கலே
பள்ளிக்கூடத்தை பிடிச்சிருக்கு
வாழப் பிடிக்கலே
வாழ்க்கையைப் பிடிச்சிருக்கு
நல்லாச் சொன்னிங்க சிநேகிதர்களே
பொழைக்கத் தெரியாதவன் இவன்னு
பொழைக்கத்தானுங்க போறேன்
போய்ட்டு வாறேன் தோழர்களே!
இக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான "சூரியகாந்தி" இதழில் 03.06.2009 இல் வெளியான எனது கவிதை. இது மலையக இளைஞர்களை எண்ணி எழுதப்பட்டதாகும்.
வேலைக்கு போறேன்!
https://newsigaram.blogspot.com/2012/08/velaikku-poren.html
இதனை மழையக இளைஞர்களை எண்ணி நீங்கள் எழுதியிருந்தாலும் இது நாடு முழுவதிலுமுள்ள இரு பாலாருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்...
ReplyDeleteவலிகூடிய கவிதை
நிச்சயம் நண்பரே. வலிக்கு நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நன்றி உள்ளமே.
Deleteஅருமையான வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி... தொடருங்கள்...
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.
Deleteநிதர்சனமான கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.
Deleteநல்லதொரு கவிதை.மலையகத்தில்தான் பிறந்து வளர்ந்தேன்.அந்த உறவுகள் மனதில் முகம் காட்டுகிறார்கள் !
ReplyDeleteநீங்களும் மலையகமா? முதல் வருகை தொடர் வருகையாகட்டும். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.
Deleteநல்ல கவிதை!
ReplyDeleteஎன் வலைப்பூ வில் சாதனை பதிவர்கள்(பதிவுலக சாதனையாளர்கள்) மறக்காம படிங்க.
http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html
முதல் வருகை தொடர் வருகையாகட்டும். நிச்சயம் தங்கள் தளம் வருகிறேன்.வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.
Deleteமுதல் வருகை தொடர் வருகையாகட்டும்.வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.
ReplyDeleteசிறப்பாக குழந்தை தொழிலாளர்கள் கஷ்ட்டத்தைப் பற்றி கூறியுள்ளீர்கள். தொடருங்கள்.
ReplyDeleteபடிக்கப் பிடிக்கலே
பள்ளிக்கூடத்தை பிடிச்சிருக்கு
வாழப் பிடிக்கலே
வாழ்க்கையைப் பிடிச்சிருக்கு
சிறப்பான வரிகள்....
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே. அவர்களின் கஷ்டத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கவிதையின் நோக்கம். நன்றி உள்ளமே.
Deleteமனதைத் தொட்ட கவிதை. நன்றி.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
"படிக்கப் பிடிக்கலே
ReplyDeleteபள்ளிக்கூடத்தை பிடிச்சிருக்கு
வாழப் பிடிக்கலே
வாழ்க்கையைப் பிடிச்சிருக்கு"
கவிதை வரிகள் அனைவருக்கும் பொருந்தும்தானே.